(Reading time: 10 - 20 minutes)

நாம இப்ப போகற இடத்துல இவ்வார்த்தையை வைத்து பலர் நடத்தப்போகும் ஆட்டத்தைப் பார்க்க போகிறீர்கள்.வாருங்கள் போகலாம்.)

டம்: உத்திரப் பிரதேசம்

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாகிர்,தன் தோளிலில் சாய்ந்து அழுது கொண்டிருந்தக் காதலியைப் பிரித்து என்னவென்று கடுமையாக வினவினான்.

ரன்விதாவின் பிரச்சினையைக் அறிவதற்கு முன்,அவர்களைப் பற்றிய அறிமுகம்.

ரன்விதா பண்ணிரெண்டாம் வகுப்புவரைப் படித்துவிட்டு அதற்குபின் படிக்க வழியில்லாததால் வீட்டில் இருந்துக்கொண்டே கைத்தொழில் செய்பவள்.படிப்பில் கெட்டிக்காரியாய் இருந்தாலும் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவும் தங்கையின் படிப்பிற்காகவும் கைத்தொழில் செய்கிறாள்.திறமை மிக்கவள்.

மாகிர் பணிரெண்டாம் வகுப்பில் தோல்வியைத் தழுவியவன்.அதையே கஷ்டப்பட்டு படித்தவன். படிப்பில்லை என்றாலும் சிறுவயதிலிருந்தே நிலத்தில் உழுவதை தன் தந்தையோடு செய்வதால் விவசாயம் செய்கிறான்.அவனின் இலட்சியமே தந்தை அடைமானம் வைத்த தன் நிலத்தை மீட்பதுதான்.உழைப்பை தருவதில் என்றும் தயக்கம் கொள்ளாதவன்.தன்னம்பிக்கை மிக்க இளைஞன்.பட்டறிவு அதிகம்.

இருவரும் காதலர்கள் மட்டுமல்ல தங்கள் பெற்றோர்களின் சம்மதிப்பால் விரைவில் தம்பதியர்களாகவும் ஆக உள்ளனர்.

இப்பொழுது ரன்வியைப் பார்ப்போம்.

பிரச்சினை இதுதான் அவளின் கல்லூரி செல்லும் தங்கையை காணவில்லை.கல்லூரி விடுதியிலிருந்து வீட்டிற்கு வர வேண்டியவள் இன்னும் வரவில்லை.

ஏன் இவ்வளவு நேரம் கழித்து சொல்கிறாய் ரன்வி? என்று கேட்டான் மாகிர்.

கையில் இருந்த கடித்தத்தை அவனிடம் கொடுத்தாள்.

அன்புள்ள அக்கா,

நான் செய்ய போவது மிகப்பெரிய தவறுதான் என்றாலும்,எனக்கு வேறு வழியில்லை.என்னை காதலித்தவரின் வார்த்தையை என்னால் தட்ட முடியாமல் போய் விட்டது.அவருடன் செல்கிறேன்,என்னை தேட வேண்டாம்.இந்த சுயநலவாதியை வெறுத்துவிடாதே! நீயும் மாமாவும் திருமணம் செய்து சந்தோஷாமாய் வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.எங்கு எந்நிலையில் இருந்தாலும் உன் நினைவில் வாழும் தங்கையை நீயும் அப்பாவும் மாமாவும் மன்னித்து விடுங்கள்.

கடிதத்தை படித்தவனாலும் நம்ப இயலவில்லை.குழந்தைப் போல் இருப்பவளிடமிருந்து இப்படியொரு செயலை எண்ணிப் பார்க்கவில்லை. அவனால் ரன்வியை எப்படி தேற்றுவது என்று புரியவில்லை.தனக்கே இப்படி என்றால்,ரன்வியின் மனநிலை?

ரன்வி, இங்கப் பாரு, உன்னோட துன்பம் எனக்கு புரியுது.ஆனால் நீ இப்ப அழுவதால் நிலைமை சீராக போவதில்லை.எப்படி இந்த பிரச்சினையை தீர்க்கலாம் என்பதை தான் முதலில் எண்ண வேண்டும்.மாமாவிற்கு இந்த விஷயம் தெரியுமா? என்று கேட்டான்.

தெரியாதுபா.எப்படி சொல்வது என்று தெரியவில்லை என்றாள் தேம்பிய குரலில்.

ம்.இப்பொழுது சொல்லாதே! உன்னிடம் கேட்டால் அங்கு கல்லூரியில் இன்னும் சிறிது வேலைகளை முடிப்பதற்காக இருக்கிறாள் என்று எதையாவது கூறி சமாளித்துவிடு.நான் கல்லூரியில் சென்று விசாரித்து வருகிறேன்.நீ கவலைப் படாமல் இரு.இதுக்கு ஒரு நல்ல வழி காண்போம்.தைரியமாய் இரு.

சரி என்றாள்.

அதுக்கு முன்னாடி இந்த கடிதம் எப்பொழுது உன்னிடம் சேர்ந்தது என்பதை முதலில் சொல் என்றான்.

இன்னைக்கு காலையில்தான் வந்ததுபா என்றாள்.

அவளின் முகத்தை துடைத்துவிட்டு, சாதகமான பதிலுடன் வருவதாய் கூறி சென்றான்.

காதல் வருவதும் தவறில்லை,காதலிப்பதும் தவறில்லை.தன் துணையை தானே தேர்ந்தெடுப்பது தவறா? என்றால் அதுவும் இல்லை.

பொதுவாக காதலின் நுழைவாயில் ஈர்ப்பாய் இருக்கிறது.பெரும்பாலும் அழகையும் வெகு சில இடத்தில் மட்டும் குணத்தையும் கண்டு ஈர்ப்பு உண்டாகுகிறது.அழகை கடந்து அன்பு நிலைக்கு சென்று விட்டால் பிரச்சினை இல்லை.

தன் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொருவருக்கும் அறிவு மற்றும் வயதின் முதிர்ச்சி அவசியம் வேண்டும்.தன்னுடைய வாழ்க்கை என்கிற பெயரில் சுயநலமாய் ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவு பலரைப் பாதிக்கும்.காதல் எப்படி அவசியமோ அதுபோலவே உறவுகளும் அவசியம்.காதலை வெளிப்படுத்துவதிலும் அதை இல்லறத்தில் நுழைப்பதும் முறையோடு நடக்க வேண்டும்.

தாய்தந்தையை அவமதித்து உடன்பிறந்தோருக்குப் பிரச்சினைகளை உண்டாக்கி,ஒருவரிடம் ஒருவர் காதல் கொள்வது சரியா? தவறா?

எந்த விவரமும் சொல்லாமல், தன் காதலுக்காக பெற்றோரிடம் பேசாமல்,தாங்களாகவே இதை அவர்கள் ஏற்க மாட்டாகளென்று நேசித்தவரோடு மாயமாதல் சரியா? தவறா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.