(Reading time: 8 - 15 minutes)

“நீ அப்போ தான் பர்ஸ்ட் இயர். ஏதாச்சும் தப்பு செய்து பாஸ் கிட்ட இருந்து திட்டு வாங்கிட்டா. உன்ன காப்பத்த தான் நான் ஓடி வந்தேன்”

 “ஐயே. பாஸ் செம ஜாலி. ஒன்னும் சொல்ல மாட்டார். மேடம் தான் ஸ்ட்ரிக்ட் ஆபிசர்”

“மோன் செர்ரிய பத்தி ஏதாச்சும் சொன்ன அப்புறம் பாரு” பத்திரம் காட்டினான் கணேஷ்.

அந்த நாள் நியாபகங்களை அசைபோட்ட கணேஷ் உள்ளுக்குள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். திரும்பவும் வரவே வராதா என ஏங்கச் செய்யும் வசந்த காலம் அல்லவா. எப்போதும் அமைதியாகவே இருக்கும் கணேஷ் பூஜா பழைய நாட்களை நியாபகப்படுத்தவே தானாக உற்சாகம் பீறிட்டது.

மிகவும் அசதியாக இருக்கவே டிரைவ் செய்வது சரிவராது என்று எண்ணியவன் சப்வே நோக்கி நடந்தான். ஏனோ அவனுக்கு வீட்டிற்கு செல்ல மனமில்லை. சென்ட்ரல் பார்க் செல்லலாம் என முடிவு செய்து ரயிலுக்காக காத்திருந்தான்.

முன்தினம் தான் பல பல யுகங்களுக்குப் பிறகு நால்வரும் கான்பரன்சில் பேசினர். ஆம் பிரியமானவர்களைப் பிரிந்தால் மாதங்கள் கூட யுகங்களாகவே தோன்றும். ஆனாலும் நால்வரும் ஒன்றாக சந்தித்து வருடங்கள் ஆகிவிட்டனவே.

இருப்பினும் நேற்று அனைவரும் முன்பிருந்தது போல மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தது அவன் மனதிற்கு மிகுந்த அமைதியை தந்தது.

இடையில் தான் எத்தனை நிகழ்வுகள். நினைத்தும் பார்க்க முடியாத சம்பவங்கள்.

“மோன் செர்ரி யு அல்வேஸ் இன்ஸ்பைர் மீ எ லாட்” மனதிற்குள் கூறிக்கொண்டவன் தனது பிரியமான பூரி மசாலா ஒரு குழந்தைக்குத் தாயான பின்பும் இன்னும் அப்படியே லொட லொடவென வாயாடிக் கொண்டிருந்ததை எண்ணி சிரித்துக் கொண்டான்.

இந்த நினைவுகளுடன் ரயிலும் தாலாட்ட எங்கே கண் அசந்து விடுவோமா என ஒரு மெடிகல் ஜர்னலை தீவிரமாகப் படிக்கத் தொடங்கினான். படித்துக் கொண்டிருந்தவன் அதிலேயே மூழ்கிப் போனான்.

ர்ஷினி அந்த பெட்டியில் ஏறி உட்கார இடம் இருக்கிறதா எனக் கண்களால் துழாவினாள். ஏதோ மேகசினில் முகம் புதைத்துக் கொண்டிருந்த ஒருவனின் அருகே காலியாக இடம் கிடைக்கவும் அங்கே சென்று அமர்ந்தவள் தானும் நியுயார்க்கின் மேப்பினுள் தன் தலையைக் கொடுத்தாள்.

அன்று ஓர் ரயில் பயணத்தில் அருகருகே அமர்ந்திருந்த இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை வாழ்க்கை பயணத்திலும் இணைத்து பயணிக்கும் காலம் வருமென.

சென்ட்ரல் பார்க் நிறுத்தம் வரும் முன்பே கதவருகில் சென்று நின்று கொண்டாள் வர்ஷினி. அன்று விடுமுறை தினம் ஆதலால் சென்ட்ரல் பார்க் ஸ்டேஷனில் கூட்டம் அதிகமாக இருந்தது. தன் கையில் இருந்த ஹான்ட்பேக் மற்றும் மேப்பினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நிறுத்தத்தில் இறங்கியவள் கேட் அருகே சென்று கார்டை தேட அதுவோ கண்ணாமூச்சி ஆடியது.

“அய்யய்யோ கார்ட் எங்க போச்சு” படபடத்தவள் ஹான்ட்பேக்க்கினுள் இருந்த பொருட்களை எல்லாம் கையில் எடுத்து வைத்துக் கொண்டு தேடிக் கொண்டிருந்தாள்.

“எக்ஸ்கியூஸ் மீ. உங்க கந்த ஷஷ்டி கவசம் கீழ விழுந்திருச்சு. இந்தாங்க” பின்னால் இருந்து அமுதினிலும் இனிய தமிழ் கேட்கவும் அது வரை இருந்த பதட்டம் எல்லாம் நீங்கி மலர்ந்த முகமாய் திரும்பினாள்.

அந்த மலர்முகம் அனுமதி ஏதும் கேட்காமல் உரிமையாய் அவனது விழிவாசல் வழி நுழைந்து இதயத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டதை அப்போது அவன் உணர்ந்தானில்லை.

“தேங்க்ஸ்” அவள் அவனிடம் இருந்து அந்த பாக்கெட் சைஸ் புத்தகத்தை வாங்கி கைப்பைக்குள் போட்டாள்.

“என்னாச்சு இனி ப்ராப்ளம்”

“கார்ட் தொலஞ்சு போச்சு. எப்படி காணாம போச்சுன்னே தெரியல. இப்போ என்ன செய்யணும். வேற கார்ட் டக்கெட் எப்படி வாங்கணும். வித்தவுட்ல ஏறிட்டேன்னு பைன் போடுவாங்களா” அவள் நிஜமாகவே திருவிழாவில் தொலைந்து போன குழந்தையைப் போன்றே அவனுக்குத் தோன்றினாள்.

“கூல் கூல். எங்க வச்சீங்க. நிதானமா தேடிப் பாருங்க. இல்லைனா வேற வாங்கிக்கலாம்” அவன் சொல்லவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அந்த பிரகாசமான முகமும் சிநேகமாக சிரிக்கும் கண்களும் அவளுக்குள் இருந்த படபடப்பை எடுத்துக் கொண்டு அமைதியை பதிலுக்கு தந்தன.

“இப்போது மீண்டும் ஒரு முறை தனது கைப்பையை ஆராய்ந்தவளின் கையில் கார்ட் ஜம்மென்று வந்து சேர்ந்தது.

“ஹையா கிடைச்சிடுச்சு” விட்டால் அங்கேயே துள்ளி குதித்திருப்பாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “தாங்க்ஸ் ரொம்ப தாங்க்ஸ்” என்றவள் எக்சிட்டில் கார்டை ஸ்வைப் செய்து விட்டு சிட்டாக பறந்து விட்டிருந்தாள்.

புன்னகைத்தவாறே தானும் வெளியேறி சிறிது தூரம் பூங்கா அருகில் நடை பயின்றவன் தனது அபார்ட்மன்ட் வந்து சேர்ந்தான்.

ஏனோ அவன் மனம் மிக லேசாக இருந்தது. சிடி ப்ளேயரை தட்டிவிட அன்று பார்த்து வரிசையாக ஹரிஹரனின் இனிய குரலில் ரொமாண்டிக் பாடல்களாக ஒலித்தன.

அந்தப் பாடல்களின் இனிமையில் கரைந்து கண்மூடியவனின் இமைத்திரைகளில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

தன்னிசையாக தானும் முறுவல் புரிந்தவன் திடீரென திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். எத்தனையோ இதய அறுவை சிகிச்சைகளை செய்த அந்த மருத்துவனின் இதயம் அதிவேகமா துடித்துக் கொண்டிருந்தது

இதயம் துடிக்கும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.