(Reading time: 18 - 35 minutes)

குட்மார்னிங் ம்மா… குட்மார்னிங் மது..” என்று சொல்லியப்படியே அவனும் வந்து டைனிங் டேபிளில் அமர,

“யார் அது மது..?” என்று திரும்ப விழித்தாள் நர்மதா..

என்னத்தான் நர்மதா சங்கடமாக நினைக்கக் கூடாதென்று, கோமதி அவளிடம் ஆறுதலாக பேசியிருந்தாலும், இரண்டுப் பேரும் இந்த திருமணத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமே, என்ற கவலை கோமதி மனதில் இருந்தது… இப்போது மது என்ற செல்வாவின் அழைப்பே அவர்களது இன்பமான வாழ்க்கை சீக்கிரமாகவே ஆரம்பித்துவிடும் என்ற நம்பிக்கையை கோமதிக்கு உருவாக்கியது...

செல்வாவின் அழைப்பு கோமதி முகத்தில் புன்னகையை உண்டாக்கியிருக்க, மது நர்மதாவின் செல்ல சுருக்கம் என்பது புரிந்து அவனை முறைத்தாள் நர்மதா..

அதை கண்டுக் கொள்ளாதவன் போல, “ஆமாம் அத்தையை எங்க காணோம்…” என்று தன் அன்னையிடம் கேட்டவன், “அத்தை காஃபி..ஈ.. ஈ..” என்று உரக்க குரல் கொடுத்தான்.

“செல்வா இன்னும் அத்தை எந்திரிக்கலடா… கல்யாண வேலையெல்லாம் விழுந்தடிச்சு பார்த்ததுல, அவ டயர்டா இருப்பா… அதான் தூங்கிக்கிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்…

இன்னைக்கு காஃபி போட்டது, நம்ம நர்மதா தான்… நர்மதா, செல்வாவுக்கும் உன் கையால காஃபி போட்டு எடுத்துட்டு வாம்மா.. அப்படியே விஜிக்கும் சேர்த்து போடு, நான் அவளை போய் எழுப்புறேன்..” என்றார்.

நர்மதா காஃபி எடுத்துக் கொண்டு வர கிச்சனுக்கு செல்ல… செல்வாவோ மகிழ்ச்சியானான்… “தலையில கட்டின ஈரத் துணியோட, நர்மதா கையால காஃபி,  அப்பா அழகா காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டவனுக்கு கூட இந்த சான்ஸ் கிடைக்குமான்னு தெரியலையே.. நமக்கு அந்த சான்ஸ் கிடைச்சிருக்கே..” அவன் மைண்ட் வாய்ஸ் ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்தது…

நர்மதா காஃபி எடுத்துக் கொண்டு வரும் வரையிலுமே அவன் மகிழ்ச்சியாக தான் இருந்தான்… ஆனால் அவள் கொடுத்த காஃபியை வாயில் வைக்க போகும் போது தான், நர்மதா முதன்முதலாக கொடுத்த உப்பு காஃபி அவனது ஞாபகத்திற்கு வந்தது…

“அய்யோ… நேத்து வில்லி ரேஞ்ச்க்கு பேசினாளே… இப்போ இந்த காஃபில சர்க்கரை போட்டாளா..?? இல்லை உப்பு போட்டாளான்னு தெரியலையே..” என்று இப்போது அவன் மனம் புலம்ப ஆரம்பித்துவிட்டது..

வாய் வரைக்கும் எடுத்துப் போன காஃபியை பருகாமல் வைத்திருந்த மகனை பார்த்த கோமதி.. “என்னடா இன்னும் காஃபியை குடிக்காம வச்சிருக்க… நர்மதா சூப்பரா காஃபி போட்ருக்கா.. குடிச்சுப் பாரு தெரியும்..” என்றார்..

“அம்மா.. உங்களுக்கு சூப்பரா போட்ருப்பா.. எனக்கு எப்படி போட்ருப்பான்னு தெரியலையே..” மனதில் புலம்பியப்படி இன்னும் காபியை பருகாமல் வைத்திருந்தான்…

“என்ன நான் போட்டா சார் காஃபியை குடிக்க மாட்டாரோ…” யோசித்தப்படி நின்றிருந்த நர்மதாவிற்கும் அப்போது தான் அவள் அவனுக்காக போட்டுக் கொடுத்த உப்பு காஃபி ஞாபகத்திற்கு வந்தது…

கையில் விஜிக்காக வைத்திருந்த காஃபி கோப்பையோடு எழுந்தவர், இன்னும் செல்வாவை பார்த்தப்படியே இருக்க, “நாம குடிக்கலன்னா.. அம்மா விட மாட்டாங்க போலயே..” என்று நினைத்தவன், கொஞ்சமாக காஃபியை உறிஞ்சினான்… காஃபி காஃபியாய் இருந்தது… அவன் பருக ஆரம்பித்ததும் கோமதி அவ்விடம் விட்டு செல்ல, ஒரு நமட்டு சிரிப்போடு நர்மதா அவன் அருகில் உள்ள சேரில் உட்கார்ந்தாள்…

“என்ன உப்பு காஃபியை நீங்க இன்னும் மறக்கல போல… இனிமேலும் கூட அதை மறந்துடாதீங்க… ஏதோ இந்த வீட்டுக்கு வந்து ஃப்ர்ஸ்ட் டைம்ங்கிறதால, நல்ல காஃபி கிடைச்சுது…  என்னை கடுப்பேத்தற மாதிரி ஏதாவது செஞ்சீங்க… அடுத்து உப்பு காஃபி போடமாட்டேன்… மசாலா காஃபி தான் போடுவேன்…  மிளகாய் தூள், தனியா தூள் இன்னும் என் கைல என்னெல்லாம் கிடைக்குமோ.. எல்லாம் சேர்த்து காஃபின்ற பேர்ல கொடுத்துடுவேன் பார்த்துக்கங்க.. அப்புறம் இன்னொன்னு என்னோட பேர் நர்மதா.. அதென்ன மதுன்னு கூப்பிட்றது… இதெல்லாம் எனக்கு பிடிக்கல.. இனி கூப்டாதீங்க… அப்புறம் மறுநாளே திரும்ப மசாலா காஃபி தான் சொல்லிட்டேன்…

நேற்று இரவு போலவே ஆவேசமாக பேசிவிட்டு அவனை பார்க்க, அவனோ முகத்தில் புன்னகையோடு இவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்… அவன் பார்வையின் வீச்சை தாங்காமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள்,  பின் ஏதோ வேலை இருப்பது போல் சமயலறைக்கு சென்றவள்,

“இவன் பார்வையே சரியில்லையே… இப்படி இன்னொரு தடவை பார்க்கட்டும், உடனே ஒரு மசாலா காஃபிய போட்ற வேண்டியது தான்…” என்று மெதுவாக முனுமுனுத்தாள்..

காஃபி கோப்பையை டைனிங் டேபிள் மேல் வைத்துவிட்டு, தன் அறைக்குச் செல்ல படியேறியவனோ.. “டேய் செல்வா என்னத்தான் நர்மதாவ நீ காதலிச்சாலும், அவ கொடுக்கிறான்னு உப்பு காஃபியை எல்லாம் உன்னால் குடிக்க முடியாதுடா.. பேசாம ஹெல்த்க்கு நல்லதுன்னு சொல்லி க்ரீன் டீக்கு மாறிட வேண்டியது தான்… அதுவும் உன்னோட ஓன் ப்ரிபரேஷனா இருக்கட்டும்.. “ என்று சொல்லிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.