(Reading time: 18 - 35 minutes)

ம்மா எங்களுக்கு புரியாத வயசு இல்லம்மா… இந்த கல்யாணத்தை ரெண்டுப்பேரும் சம்மத்ததோட தான் செஞ்சுக்கிட்டோம்…. அதை புரிஞ்சிக்கிட்டு நாங்க நடந்துப்போம் ம்மா… முடிஞ்சவரைக்கும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிப்போம்… ஆனா இப்போ ஹனிமூன்க்கெல்லாம் போக முடியாது புரிஞ்சுக்கோங்க…

அண்ணன் இல்லாத இந்த நேரத்துல, நாங்களும் ஹனிமூன் போய்ட்டா, அப்புறம் உங்களுக்கும் அத்தைக்கும் யார் துணையா இருக்கறது.. சொல்லுங்க..??”

“ஏண்டா… அண்ணனும் தம்பியும் எங்களை தனியா விட்டுட்டு போனதே இல்லையா..?? நாங்க தனியா இருந்ததே இல்லையாடா..??”

“அம்மா… அப்போ சூழ்நிலை வேற, அப்போ அத்தை நல்லா இருந்தாங்க… அவங்க உங்களை பார்த்துப்பாங்க… நாங்களும் கவலையில்லாம வேலை விஷயமா வெளியூர்க்கு போனோம்… ஆனா அத்தைக்கு உடம்பு சரியில்லாத இந்த நேரத்துல, உங்க ரெண்டுப்பேரையும் விட்டிட்டு நாங்க எப்படி ஹனிமூன் போறதும்மா.. அதுமட்டுமில்லாம நான் என்னோட ஹனிமூன்க்கு குன்னூர் போகனும்னு அடிக்கடி உங்கக்கிட்ட சொல்லியிருக்கேன்… இப்போ அண்ணன் அங்க இருக்க நேரத்துல நாங்க எப்படி அங்க போக முடியும்…. முதல்ல அண்ணன் ஊர்ல இருந்து வரட்டும்… அத்தைக்கு சரியாகட்டும், அப்புறம் எங்க ஹனிமூன் பத்தி யோசிக்கிறோம்… மதுவும் இந்த சிட்டுவேஷனை புரிஞ்சிப்பா.. “ என்ன மது அப்படித்தானே..” என்றுக் கேட்டான். அவளும் சரியென்று தலையசைத்தாள்..

பின் நர்மதா பரிமாற காலை உணவை முடித்தவன், “அம்மா நம்ம டாக்டரை ஈவ்னிங்கா வரச் சொல்லியிருக்கேன்… அவர் ஒருமுறை அத்தையை கம்ப்லீட்டா செக் பண்ணுவாரு… அத்தையை பார்த்துக்கங்க… நான் அப்போ வரட்டுமா..?? வரேன் மது..” என்று இருவரிடமும் சொல்லிவிட்டு சென்றான்.

அவன் வெளியே சென்றதும், “அண்ணன் தம்பி ரெண்டுப்பேரும் இப்படி தான்ம்மா.. ஆஃபிஸையே கட்டிக்கிட்டு அழுவானுங்க… அதுக்காகவே இவனுங்களுக்கு கால்கட்டு போடனும்னு நினைச்சேன்… பெரியவனாவது பரவாயில்லம்மா, செல்வாவுக்கு ஆஃபிஸே அவன் தலையில இருக்கிறதா நினைப்பு… நீயே பாரேன், ராஜா அவ்வளவு சொல்லியும் முக்கியமான வேலைன்னு கிளம்பிட்டான்… அவன் மட்டும் சீக்கிரம் வந்து உன்னை கோவிலுக்கு கூப்பிட்டு போகாம இருக்கட்டும், அப்புறம் இருக்கு அவனுக்கு..” என்று புலம்பினார்.

“அத்தை துஷ்யந்த் சாரி துஷ்யந்த் மாமா இல்லாத இந்த நேரத்துல ரிஷப் தானே எல்லாத்தையும் பார்த்துக்கனும்… என்னத்தான் அவர் எல்லாம் பார்த்துக்கிறேன்னு சொன்னாலும், ரிஷப் கண்டுக்காம இருந்தா நல்லா இருக்குமா..?? ரிஷப் சொன்ன மாதிரி, முதல்ல துஷ்யந்த் மாமா வரட்டும், விஜி அம்மாக்கு எல்லாம் சரியாகட்டும்… அப்புறம் எல்லாம் பார்த்துக்கலாம் அத்தை… நீங்க கவலைப்படாம இருங்க..”

“நேத்து சங்கடமான சூழ்நிலையிலும் உங்க கல்யாணம் நடந்தது ஒரு சந்தோஷமான விஷயம் ம்மா… இருந்தும் நீங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு சந்தோஷமா வாழனுமேன்னு மனசுக்குள்ள ஒரு கவலை இருந்துச்சு… ஆனா உன்கூட பேசி பார்த்ததுமே அது போய்டுச்சு… இதுல செல்வா உன்னை மதுன்னு கூப்பிட்றதும், நீ அவனை ரிஷப்னு கூப்பிட்றதும், எல்லாம் நல்லப்படியா நடக்கும்ங்கிற நம்பிக்கை வந்துடுச்சு..” என்று கோமதி சந்தோஷப்பட்டார்.

ஆரம்பித்தில் இருந்தே அவனை ரிஷப் என்றே அறிந்திருந்ததால், அவள் வாயிலும் அந்த பேரையே உச்சரித்தாள்… அதுக்காக கோமதி சந்தோஷப்படுவது இவளுக்கு உறுத்தலாக இருந்தது… இருந்தும் அவர் சந்தோஷத்தை கெடுக்க விரும்பவில்லை… அதே சமயம் ரிஷப் ஐ இவளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதை சொல்லிட வேண்டும் என்று நினைத்தாள்.

“அத்தை உங்கக்கிட்ட ஒன்னு சொல்லனும்… ரிஷப் ஐ எனக்கு ஏற்கனவே தெரியும் அத்தை….”

“என்னம்மா சொல்ற.. செல்வாவை தெரியுமா??”

“ஆமாம் அத்தை… ரிஷப் படிச்ச காலேஜ்ல தான் நானும் படிச்சேன்… அவர் எனக்கு சீனியர்… அவரை எல்லோரும் ரிஷப்னு தான் கூப்பிடுவாங்க… எனக்கும் அவரை ரிஷப் ஆ தான் தெரியும்…. பர்ஸ்ட் இயர் மட்டும் தான் அந்த காலேஜ்ல படிச்சேன்… அப்புறம் அப்பாக்கு ட்ரான்ஸ்பர்னு காஞ்சிபுரம் போய்டோம்…”

“அப்படியா..?? பாரும்மா இந்த செல்வா என்கிட்ட இதைப்பத்தி சொல்லவே இல்ல..”

“அத்தை… அப்போ ரிஷப் காலேஜ் பாப்புலரா இருந்தாரு… எல்லோருக்கும் அவரை தெரிஞ்சிருக்கும்… ஆனா நான் அப்போ தான் அந்த காலேஜ்ல சேர்ந்திருந்தேன்… ஒருவேளை ரிஷப் என்னைப் பார்த்திருந்தாலும், அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமா என்ன..??” சொல்லும்போதே குரலில் ஸ்ருதி குறந்திருந்தது… என்னத்தான் ஆறு வருடம் கழித்து பார்த்தப் போது கூட இவள் காதலை புரிந்துக் கொள்ளாமல் வார்த்தையால் காயப்படுத்திவிட்டானே.. என்ற வருத்தமே இப்படியெல்லாம் அவளை பேச வைத்தது…

கார் சாவியை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்ற செல்வா, அதை எடுத்துப் போக வந்த போது நர்மதா பேசுவதை முழுதும் கேட்டான்… அவள் பேச்சிலே இருந்த வருத்தம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது..

“சாரி மது… உன்னை ரொம்ப வேதனைப்பட வச்சிட்டேன்… சீக்கிரமே உன்கிட்ட மனசுவிட்டு பேசி எல்லாத்தையும் சரிப் பண்ணிடுவேன்… அப்புறம் நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்..” என்று மனதில் சொல்லிக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து இவன் செய்யப் போகும் சில காரியங்கள் நர்மதாவின் கோபத்தை அதிகப்படுத்தப் போகிறது என்பதை அவனே அறியான்.

நேரமின்மையால் செல்வா, நர்மதாவை மட்டுமே இந்த அத்தியாயத்தில் காண்பிக்க முடிந்தது… துஷ்யந்த், கங்காவை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.. உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.. நன்றி.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 18

Episode # 20

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.