(Reading time: 21 - 41 minutes)

ஒரு வழியாக வேலைகள் அனைத்தையும் முடிக்க, திருமண நாளும் நெருங்கியது, நலங்கு அன்று இந்தரை அமர வைத்து பெரியவர்கள் ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி ஆசிர்வாதம் செய்தனர். அடுத்து இளையவர் முறை வந்த பொழுது ஒரே ஆர்ப்பாட்டம் ஆனது. அனைவரும் வந்து இந்தரின் முகம் , கை கால் என உடம்பு முழுவதும் பூசி, அந்த இடத்தையே ரண களமாக்கினர். 

எல்லாம் முடிந்தது என இந்தர் நினைத்த வேளை, அப்பொழுது தான் குழலி உள்ளே நுழைந்தாள் பெட்டியோடு...........  

“நீ போய் குளிச்சுட்டு வா இந்தர், நான் முதலில் இருந்து ஆரம்பிக்கணும், எனக்கு உன் மேல் சந்தனம் பூசி விட இடமே இல்லை” என்றாள்.

அவளது பெற்றோர் முதலிலேயே வந்திருக்க, இவளது கடைசி பரிட்சை முடிந்து இன்று வந்து இறங்கி இருக்கிறாள்.

“நீ ஏன் குழலி இந்தரோட பூ வைக்கும் விழாவிற்கு வரலை? என அங்கிருந்த இளசுகளில் ஒன்று கேட்க

“இந்தருக்கு பூ வச்சாங்களா?, ஏன் இந்தர் நீ எப்போ பொண்ண மாறின? என இந்தரிடம் திரும்பி கேட்டாள் குழலி...........

“இதெல்லாம் ஜோக்குன்னு சொல்லாத, அப்புறம் இங்க இருப்பவங்க எல்லாம் சேர்ந்து உன்னை மொத்திடுவாங்க” என கூறிய படி குளிக்க எழுந்து சென்றான் இந்தர்.........

இந்தர் வரும் வரை யாரை கலாய்க்கலாம் என பார்த்த அபி, குழலியிடம் ஆரம்பிக்கலாம் என முடிவு கட்டினான்.

நீங்க சுவிஸ்ல பார்த்த அபி என்ற அபிஜித் தான்.

“ஹேய் வண்டு, ஏன் இவ்வளவு சீன போடற? சுவிஸ்ல இருந்து நானே வந்துட்டு போனேன்.”

“நீ வந்துட்டு போவ, இப்போ படிச்சு முடிச்சுட்டு, வெட்டியா, மாமா பாக்கற பிசினஸ பார்த்துக்கறேன்னு டிராமா பண்ணிட்டு இருக்கறதால, நான் அப்படியா, எனக்கு அப்போ எக்ஸாம்ஸ் இருந்தது. அதனால் வர முடியலை.” என்று தனது சோக கதையை கூறினாள்.

அபியும், குழலியும் நேரடி கசின்ஸ் கிடையாது. அபி, இந்தரின் சித்தி (அம்மாவின் தங்கை)  பையன், குழலி இந்தரின் அத்தை (அப்பாவின் தங்கை)  பெண். அதனால் இருவரும் அதிகம் சந்தித்தது இல்லை. இருப்பினும் இப்படி பொது நிகழ்ச்சியில் பார்க்கும் போது எல்லாம் ஒருவரை மற்றவர் கலாய்த்து கொள்வது வழக்கம்.

அதை விட இந்தர் யாருக்கு அதிக நெருக்கம் என்பதில் இருவருக்கும் போட்டியே நடக்கும்.  அப்போட்டியே இப்பொழுதும் தொடர்ந்தது.

“எங்கண்ணா எனக்கு ரொம்ப க்ளோஸ், எனக்கெல்லாம் என்ன எக்ஸ்சாம்ஸ் இருந்திருந்தாலும் நான் வந்திருப்பேன்.” என குழலியை ஏற்றி விட்டான்......

“என்ன க்ளோஸ், உங்கண்ணா சுவிஸ்ல இருந்தப்போ உங்கண்ணியை லவ் பண்ணது உங்களுக்கு தெரியுமா? என பதிலுக்கு குழலியும் வெகுண்டாள்.

“உனக்கு மட்டும் என்ன, அவர் சொன்னாரா? என அபி குழம்பிட .........

அபியே முந்தைய விழாவின் போது, புகை படம் பார்த்து தான் தெரிந்து கொண்டான். அவ்வாரு இருக்கையில் இவளுக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று குழப்பமாக இருந்தது அபிக்கு.

“சுவிஸில் நடந்தது தெரியாது, ஆனா உங்க எல்லாருக்கும் முன் எனக்கு தெரியும்.”

“எப்படி “ என அபி குரல் மட்டுமன்றி, கோரஸாக குரல் எழுந்தது அனைவரிடமும் இருந்து.

“நான் தான் அவங்க லவ்க்கு ஹெல்ப் செய்தேன்.” குழலி கூற

“அது தான் எப்படின்னு கேட்கிறோம்” அபி பொறுமை மீற.......

“ஒரு நாள், இந்தர் அத்தான் என்னை கூப்பிட்டு, அத்தை மாமா கல்யாண நாளுக்கு வரும்படி கூறினார். சரி நானும் ஸ்டடி ஹாலி டேஸ் தான, சும்மா இருப்பதற்கு,  இப்படி ஊர் சுற்றலாம் என்று கிளம்பிட்டேன். அங்க வந்து அவங்க ஸ்டாப் முன்பு அவரை “ஜித்து”  அப்படின்னு கூப்பிட சொன்னார். அவ்வளவு தான்”. என்று இராமாயணமே சொல்லி முடித்த எபக்ட் கொடுத்தாள்...........

“இதுக்கு பேர் தான் உதவியா? எதோ அண்ணியை கடத்திட்டு வந்து அண்ணனுக்கு கோவிலில் வைத்து கல்யாணம் செய்து வச்ச மாதிரி டிராமா போடற?” என்றான் அபி........

“அதை கூட செய்யாதவங்க எல்லாம் பெருசா பேச கூடாது. என் அண்ணன் தான் எனக்கு மட்டும் தான்னு”

“இங்க என்ன கலாட்டா?, என் பேர் அடிபடுது!!!!! என்ற படி இந்தர் இறங்கி வந்தான் வேறு உடை மாற்றி.........

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா, அடுத்து மெஹந்தி விழா பெண் வீட்டில் நடப்பதால் நாம் எப்படி அங்கு போய் கலாட்டா செய்வது என்று பேசி கொண்டிருந்தோம்” என அபி பேச்சை மாற்றினான்........

“அதுக்காக தான் அந்த விழாவுடன் சேர்த்து சங்கீத் விழா , ஏற்பாட்டையும்  நானே  செய்வதாக சொல்லி, பொது இடம் ஒன்றில் ஏற்பாடு செய்திருக்கிறேன். அதனால் நாம எல்லோருமே அங்க போகலாம்.” என இந்தர் கூறினான்.

பெண்கள் விழா என்பதால் அதிக அளவில் பெண்களும் சிறிய அளவில் ஆண்களும் கலந்து கொண்டனர். மதிய சாப்பாட்டுடன் ஆரம்பித்தது விழா. சாப்பிட்டவுடன் பெண்கள் அனைவரும் அங்கு அழகாக அடுக்க பட்டிருந்த மெத்தைகளில் அமர்ந்து மருதாணி இட வந்திருந்த பெண்களிடம் கைகளை காட்டினர். சாய்ந்து கொள்ள ஏதுவாக பஞ்சு திண்டு இருந்தது. பூஜாவிற்கு மட்டும் ஒரு சிறு மேடை அமைக்க பட்டு அதில் ஒரு திவான் போடப்பட்டு இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.