(Reading time: 21 - 41 minutes)

NAU

இதை தவிர பாடி நடனமாட ஒரு மேடையும் அதில் கரோக்கி பாட எதுவாக இசை சம்பந்தப்பட்ட பொருட்களும் அடுக்கப்பட்டு இருந்தன.......

அமர்ந்து மருதாணி இட்டு கொண்டிருந்த பெண்களுக்கு பொழுது போக்காக இருக்க ஒவ்வொருவராக பாட மற்றவர் ஆட என்று நேரம் போனது.......

குழலி முதலில் அமர்ந்து மருதாணி வைத்து முடித்ததால் கைகளை ஏந்தி கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

“ஹே வண்டு, நீ உன் கையை பாழக்கியது  இல்லாமல் எங்க துணிகளையும் பாழக்கிடாத” என்று சும்மா சென்று கொண்டிருந்த குழலியை வம்புக்கிழுத்தான் அபி........

“உங்க துணியை பாழாக்க,  என்னோட கையில் உள்ளதை அழிச்சுப்பேன்னு நினைச்சிங்களா? சும்மா போயிட்டு இருந்த சிங்கத்தை சீண்டி பாத்துட்டீங்க, அதனால இன்னைக்கு இங்கிருந்து கிளம்பறதுக்குள்ள உங்க ஷர்ட் முழுவதும் மருதாணி கரையா ஆக்கல, என் பெயர மாத்தி வச்சுக்கறேன்” என வீர மங்கம்மா போல் சபதம் எடுத்தாள் குழலி.........

“உன்னோட இந்த பெயரை மாத்தவாவது, நான் இன்னைக்கு இந்த சபதத்திலில் பங்கேற்கிறேன். பார்க்கலாம் நீயா இல்லை என்னோட ஷர்ட்டான்னு” என்று வீர வாழ் இல்லாமலே வீர சபதம் ஏற்றான் அபி....

சற்று பயத்துடனே சுற்றி கொண்டிருந்த அபியிடம் வந்த இந்தர், “என்னடா, எதோ மோகினியை பார்த்து பயந்த மாதிரி வர்ற?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா, உங்களை தான் தேடிட்டு இருந்தேன். நீங்க ஒரு பாட்டு பாடுங்க” என்று மைக்கை இந்தர் கையில் கொடுத்தான்.

“எதை பற்றி பாட” என இந்தர் கேட்ட பொழுது

“அண்ணியை பற்றி தான்” என கோரஸாக குரல் எழுந்தது.

இந்தரும் சிரித்து கொண்டே பூஜாவை பார்த்தான். பூஜாவிற்கு தான் வெட்கமாக இருந்தது. தனது சொந்தங்கள் மட்டும் இல்லாது அவனது உறவினர்களும் இருந்ததால், அவர்களில் பாதிக்கு மேல் அவளுக்கு பழக்கம் கூட இல்லாதவர்கள்.

இருந்தாலும் இப்பொழுது இந்தர் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தாள். மறு நொடி இந்தர் பாட ஆரம்பித்தான். 

பேரழகி என்றேதான் பெண்

அவளை சொன்னாலோ

சூரியனை பிறை என்று

சொல்லுவதை போலாகும்

அதற்கு இளையவர் அணி ஆட துவங்கியது............

ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள்

அவளை பார்த்த எல்லோரும்

மூன்றே வினாடி அவளை கண்டாலே

நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள்

அவளை பார்த்த எல்லோரும்

மூன்றே வினாடி அவளை கண்டாலே

நெஞ்சை தாக்கும் மின்சாரம்

மூச்சு விடும் ரோஜா பூ

பார்த்ததில்லை யாரும்தான்

அவளை வந்து பார்த்தாலே

அந்த குறை தீரும்தான்

ஒரு ஐநூறு நாளான தேன் ஆனது

அவள் செந்தூரம் சேர்கின்ற இதழ் ஆனது

ஹே ஹே ஹே போர்க்கப்பல் போல இரு இமை

மீன் தொட்டி போல இரு விழி

பால் சிப்பி போல இரு இதழ்

சேர்ந்த அழகி அவள்தான்

மின் காந்தம் போல ஒரு முகம்

ஊசி பூ போல ஒரு இடை

தங்கத்தூண் போல ஒரு உடல்

கொண்ட மங்கை அவள்தான்

அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான்

நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்

ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள்

அவளை பார்த்த எல்லோரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.