(Reading time: 16 - 32 minutes)

நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு போதும்!என்னை உங்கக் கூட கூட்டிட்டு போயிடுங்க!"-இருகரம் கூப்பி கண்ணீரோடு வேண்டினாள் மாயா.

"இந்த ஸ்திரி பவித்ரமானவள்!ஒருவேளை இவளுக்கு வாழ்க்கை மேலே பிடிப்பு வரலைன்னா,மரணத்தை இவள் விரும்பி ஏற்றா,அதுக்கு அப்பறம் அவளுக்கு இறுதிச் சடங்கு செய்ய கூட இவளுடைய சரீரம் கூட உங்களுக்கு கிட்டாது!பாவப்பட்ட கரங்களால் இவளை என்னிக்கும் தீண்டவே முடியாது!"-என்ற ஜோதிடரின் கூற்று கண்முன் விரிந்தது நடவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரிக்கு!!மனதளவில் நெடிய அச்சம் ஒன்று எழும்பி இதயத்துடிப்பை சில நொடிகள் அதிகரித்தது!!என்ன செய்வது என்றே விளங்காமல்,தவித்துப் போய் நின்றது தாயின் மனம்!!!

"மாயா!"-மனம் வருடும் குரலில் சட்டென இயல்புநிலைக்கு திரும்பினாள் மாயா.பொங்கி எழுந்த கண்ணீரை அடக்கியவள்,தன் எழில் முகத்தை மீண்டும் இறுக்கமாக்கினாள்.

"தூங்கலையா?"எங்கோ வெறித்தப்படி வினவினாள் அவள்.மெதுவாக அவளருகே வந்தவர்,அவள் முகத்தை உற்றுப் பார்த்தார்.

"நீ ருத்ராவை விரும்புறீயா?"என்ற வினவினில் சட்டென நிமிர்ந்தாள் அவள்.

"சொல்லு மாயா!"

"உங்க வேலையை நீங்க பாருங்க!என் விஷயத்துல தலையிட வேண்டாம்!"வெறுப்புடனே கூறினாள் அவள்.

"என்ன மாயா?என்ன உனக்கு பிரச்சனை?நான் பண்ணது தப்பு தான்!அதுக்காக எதனால உன் வாழ்க்கையை நீயே அழித்துக்கிற?யாராலும் இங்கே தனக்காக ஒரு அன்பு இல்லாம வாழ முடியாதும்மா!"காயத்ரியின் கண்கள் கண்ணீரை சிந்தின.

"உங்க அறிவுரையை நான் கேட்கலை!"

"இல்லை..நீ கேட்டு தான் ஆகணும்!எனக்கு அதற்கான உரிமை இருக்கு!"-தைரியத்தை வரவழைத்து அவர் கூற,அதை கேட்டவளுக்கு சினம் உச்சந்தலையை அடைந்தது.தன் தாயின் கரத்தை இறுகப் பற்றியவள்,அவரை எங்கோ இழுத்துச் சென்றாள்.

"மாயா!என்ன பண்ற நீ?எங்கே கூட்டிட்டு போற என்னை?"-பற்றிய கரத்தினை சிறிதும் நழுவ விடாமல் அவரை இழுத்துக் கொண்டு ஓர் அறைக்குள் சென்றாள் மாயா.

அவ்வறை முழுதும் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது.ஏதுமில்லாத அவ்வறையில் ஒரே ஓர் சாய்வு நாற்காலியும்,ஒரு மின் விசிறியும் மட்டுமே இருந்தன.வெளிச்சம் துளியும் நுழைய இயலாத அளவு அவ்வறை வடிவம் பெற்றிருந்தது.காயத்ரியின் விழிகள் கேள்வியாய் தான் ஈன்ற புதல்வியை மொய்த்தன.

"காதல்....அன்பு....பாசம்....அதைப்பற்றி பேசுறீங்களே!இதோ இந்த ரூமை பற்றி தெரியுமா உங்களுக்கு?என்னுடைய அப்பா தன்னுடைய கடைசி காலங்களை கழித்த அறை இது!இந்த ரூம்குள்ள எந்த வெளிச்சமும் இருந்ததில்லை.என்னை தவிர யாரையும் இதற்குள் அவர் நுழைய விட்டதில்லை.நீங்க பண்ண தவறுக்கு அவர் தன்னை தானே சிறைப்படுத்தி,நரக வேதனையை அனுபவித்தார்."-அவள் கண்கள் மெல்லியதாய் கலங்கின.

"நீங்க செய்த தவறுக்கு அவர் உங்களை தண்டிக்க நினைத்திருந்தால் என்னை நடந்திருக்கும்?"-பதில் அளிக்க இயலாத கேள்வியை முன் வைத்தாள் மாயா.

"உங்களைப் பற்றி ஒரே ஒரு வார்த்தைக் கூட அவர் தப்பா பேசினதில்லை...என்னையும் பேச விட்டதில்லை.வாழ்க்கை முழுசும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து அனுபவித்து...இன்னிக்கு அவர் உயிரோடவே இல்லை!என் சந்தோஷம்,நிம்மதி எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டார்!சாகுறதுக்கு முன்னாடி அவர் என்கிட்ட வாங்குன சத்தியம் என்னன்னு தெரியுமா?"

"..............."

"எந்த ஒரு விதத்திலும் என்னால உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாதுன்னு நான் சத்தியம் பண்ணி கொடுத்தேன்!அந்தச் சத்தியம் மட்டும் தான் உங்களை இன்னும் உயிரோட வைத்திருக்கு!"-கூரிய ஆயுதமாய் இதயத்தை கிழித்தாள் மாயா.

"நான் இப்போவும் சொல்றேன்!இது உங்க வீடு,உங்க இடம்!என்னோட செல்வத்தை நான் மூணு வருஷத்துக்கு முன்னாடியே இழந்துட்டேன்!என் விஷயத்துல எப்போவும் தலையிட முயற்சி பண்ணாதீங்க!"-என்றவள் அங்கிருந்து வெளியேறினாள்.தனிமையில் இருந்த காயத்ரியின் கண்கள் அவர் துயர் தீர்க்க கண்ணீரை உடனடியாய் சுரந்தன.பெரும் மனவேதனையுடன் நாற்காலியின் முன் மண்டியிட்டவரின் சிரம் தாழ்ந்து,இதழ் உரைத்தது,"என்னை மன்னித்துவிடுங்கள்!"என்று!!!

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1104}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.