(Reading time: 16 - 32 minutes)

"சரிதான்!என்ன விஷயம்னா அவர் இறந்து மூணு வருஷம் தான் ஆகுது!ஆனா உங்க கல்யாணம் இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்தது!அதனால,சட்டப்படி உங்கக் கல்யாணம் செல்லாது!சரிதானே நிஷாந்த்?"

"எஸ் மேடம்!"-என்றான் புன்னகைத்தப்படி!!

"கிரேட்!"

"ஓ..ஸோ!இந்தச் சொத்துக்காக நீ வந்திருக்க!"

"எது இதுக்கா?"-அவள் பலமாக சிரித்தாள்.

"இந்த ஒட்டுமொத்த சொத்தை சேர்த்தாலும்,நான் சம்பாதித்ததில் பத்து சதவீதம் கூட பெறாது!எப்போதும் பணம் நம்மை அடக்கி ஆளக்கூடாது ரகுராம்!"

"உன் அறிவுரை தேவையில்லை!எதுக்கு வந்திருக்க?"

"விஷயம் என்னன்னா,எனக்கு உலகத்திலே முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?என் அப்பாவுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வது!அவருக்கு முக்கியமானவங்க இவங்க..."-காயத்ரியை சுட்டினாள் அவள்.

"விஷயம் என்னன்னா,அவர் இவங்களை தான் வாழ்ந்த வீட்டில இருக்க விரும்பி இருக்கார்!இது கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரிய வந்தது!அதான் கூட்டிட்டு போக வந்துட்டேன்!"

"நான் அனுப்ப மாட்டேன்!"

"உன் அனுமதியை நான் கேட்டேனா?அது அவங்க வீடு!அவங்க அங்கே தான் இருக்கணும்!மாயா ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டா அதுக்கப்பறம் அதுக்கு ஆப்ஷனே கிடையாது!"-என்றவள் எழுந்தாள்.

"கிளம்பலாம்!உங்களுக்கு சொந்தமான இடத்துக்கு கூட்டிட்டு வரச் சொல்லி,உங்களுக்கு சொந்தமானவர்கிட்ட இருந்து உத்தரவு வந்திருக்கு!"-ஏதோ சேவகம் செய்பவள் போல எங்கோ வெறித்தப்படி கூறினாள்.அங்கு சில நொடிகள் கனத்த மௌனம்!!

"அவங்களை கூட்டிட்டுப் போகலாமா?"-என்றாள் அவளது பாட்டனாரை பார்த்து,

"கூட்டிட்டுப் போம்மா!"என்றார் கண்ணீருடன்.

"ஜானகி,காயத்ரியோட டிரஸ் எல்லாம்..."

"தேவையில்லை.."

"........."

"அவங்க மட்டும் வந்தா போதும்!அங்கே அத்தனை கோடி சாம்ராஜ்ஜியத்துக்கு மஹாராணி,அவங்க மஹாராணியாகவே வாழ விரும்புறேன்!"-காயத்ரியின் விழிகள் கசிந்துருகின.

"நிஷாந்த் அவங்களை கூட்டிட்டுப் போ!"

"எஸ் மேடம்!"-சிலையாய் நின்ற காயத்ரியின் அருகே வந்தவன்,

"மேடம்!"என்றான்.பொங்கிய கண்ணீரை கட்டுப்படுத்தியவர்,அவனுடன் நடந்தார்.

"மா!மாயா...என்னை மன்னித்துவிடும்மா!"-மன்னிப்பை வேண்டினார் அவளது பாட்டனார்.

"எந்த மனுஷனை அன்னிக்கு நீங்க அவமதித்தீங்களோ,இன்னிக்கு அவர் உங்கப் பொண்ணு மேலே வைத்த காதலுக்கு முன்னாடி உங்க பாசம் தோற்றுப் போயிடுச்சு!நீங்க இனி இங்கே இருக்க வேண்டாம்!விருப்பப்பட்டா,உங்கப் பொண்ணோட நீங்களும் வந்து தங்கலாம்!"

"இல்லைம்மா!நீ சொன்னது உண்மைதான்!உங்கப்பா காதலுக்கு முன்னாடி என் பாசம் தோற்றுப் போயிடுச்சு!காலம் கடந்துப் போயிடுச்சு!இனி அவர் வர போறதில்லை!நாங்க ஊருக்கு போறோம்மா!காயத்ரியை பத்திரமா பார்த்துக்கோடா!"

"அது என் கடமை!நீங்க எப்போ வேணுமானாலும் வீட்டுக்கு வரலாம்!எதுக்கும் தடையா நான் இருக்க மாட்டேன்!"-என்றவள் திரும்பி நடந்தவள்,திடீரென நின்றாள்.

"உனக்கான கடைசி பாதுகாப்பும் உடைப்பட்டிருக்கு ரகுராம்!இறுதி வாய்ப்பு தரேன்!பயன்படுத்திக்கோ!"-என்று மீண்டும் நடந்தாள் அவள்.

காரில் அருகருகே அமர்ந்திருந்த சமயத்திலும் ஒரு வார்த்தையும் மாயா பேசவில்லை காயத்ரியிடத்தில்!!

வீட்டிற்கு வந்தவரை வரவேற்க ஆரத்தி தயாராய் இருந்தது.அவர் கேள்வியுடன் மாயாவை பார்க்க,அவளோ மௌனமாக உள்ளே சென்றாள்.

"அக்கா!"-அவள் உள்ளே நுழைந்ததும் வரவேற்றது மித்ராவின் குரல்!!

"மித்ரா!அர்ஜூன்?எப்போ வந்தீங்க?"

"வாம்மா தாயே!போனை என்ன வித்துட்டியா என்ன?போன் அட்டன்ட் பண்ண..."-என்றவனின் பார்வை உள்ளே நுழைந்த காயத்ரியின் மேல் பதிய பேச்சு தடைப்பட்டது.

சில நொடிகள் கனத்த மௌனம் நிலவியது,காண்பது யாவும் கனவா என்ற எண்ணம் மனதினில் உதித்தது இருவருக்கும்!

"தேவசேனா!அவங்க எங்க விரும்புறாங்களோ அங்கே தங்க வை!"-உத்தரவிட்டாள் மாயா.

"சரிங்கம்மா!"-என்று காயத்ரியை அழைத்துச் சென்றாள் அவள்.

"அர்ஜூன்!"

"............"

"அர்ஜூன்!"-அவன் சுயநினைவு வந்தவனாய் மாயாவை கேள்வியுடன் பார்த்தான்.அவளிடம் கனத்த மௌனம்!!

"மாயா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.