(Reading time: 16 - 32 minutes)

"ம்கூம்...!என்ன விஷயம் அதிசயமா வந்திருக்க?"

"மித்ரா உன்னை பார்க்கணும்னு ஆசைப்பட்டா,அதான்!"

"ஓ...என் தங்கச்சிக்கு ஒரு வாரம் கூட என்னை பிரிந்து இருக்க முடியலையா?"-என்றாள் புன்னகையுடன்!!மாயாவிடம் கண்ட மனமாற்றம் நிச்சயம் அவனுக்கு திகைப்பையே அளித்தது!!காரணமில்லாத அச்சமும் ஏனோ அர்ஜூனின் மனதில் உதிக்கவும் தவறவில்லை.

ன்றிரவு...

உறக்கம் சரியாக வராத காரணத்தால் தனது அறைக்குள்ளே உலவி கொண்டிருந்தாள் மாயா.ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி இலக்கே இல்லாமல் தனது பார்வையை விசும்பில் படரவிட்டாள்.மனம் ஏனோ அமைதிக்கொள்ள மறுத்தது.இதயம் முழுதிலும் விளக்க இயலாத துக்கம் படர,அவளது விழிகள் கசிய ஆரம்பித்தன.முடிவெடுக்க இயலாத சிக்கல் ஒன்று வாழ்வை நரகமாக்கி கொண்டிருப்பதை அவள் உணராமல் இல்லை.அவள் மௌனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க,பின்னாலிருந்து அவளை இழுத்து அணைத்தது ஒரு வலியககரம்!!திடுக்கிட்டுப் போனவளால் அதன் கட்டுப்பாட்டிலிருந்து வெளி வர இயலவில்லை.திணறியப்படி திரும்பி அதன் முகத்தைப் பார்த்தாள்,விளைந்தது அதிர்ச்சி தான்!!அவன் ருத்ரா!!

இவன் எப்படி இங்கு வந்தான்??பலவிதமான வினாக்கள் அவள் இதயத்தில் எழும்பின.

"ருத்ரா!என்ன பண்ற நீ?விடு என்னை..."

"விடுறது இருக்கட்டும்!மேடம் இப்போ எதுக்காக அழுறீங்க?"-அவள் போராடி அவனது பிடியிலிருந்து வெளி வந்தாள்.

"நீ எப்படி என் வீட்டுக்கு?அதுவும் என் ரூமுக்கு வந்த?"-அவன் மௌனமாக அவளை நெருங்கினான்.

"அவசியம் தெரியுமா?"-மாயா அச்சத்தில் சுவரில் முட்டி நின்றாள்.ருத்ராவின் கைகள் அவளுக்கு சிறையாய் நின்றன.

"தள்ளிப்போ ருத்ரா!இது என்ன பைத்தியக்காரத்தனம்?"-அவன் அவளது இதழ் மீது தனது சுட்டுவிரலை வைத்தான்.

"உஷ்...ஏன் டென்ஷன் ஆகுற மாயா?இப்போ நான் என்னப் பண்ணிட்டேன்?"

"................"

"வார்த்தைகளால் என்னை அதிகமா காயப்படுத்தினவள் நீ தான்!நான் ஏதோ தவறு செய்த மாதிரி பண்ற?"

"..............."

"என்னம்மா?பேசு!"-அவளிடம் வார்த்தைகள் இல்லை.வார்த்தைகள் வரவுமில்லை!!

"சத்தமே வரமாட்டிங்குது?"

"............"-மாயாவின் இரு கன்னங்களையும் தாங்கியவன்,அவளது இதழ் நோக்கி குனிந்தான்.அவள் அவனை தடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

"ஐ லவ் யூ மாயா!"-என்றவனது குரல் செவியில் ஒலிக்க,திடுக்கிட்டு உறக்கம் கலைந்தாள் மாயா.

னைத்தும் கனவா??மனம் உறைந்துப் போனது!!இதுபோன்ற சஞ்சலங்கள் இன்றளவும் துளியும் அவள் மனதில் எட்டிப் பார்த்ததில்லை!ஆனால்..இன்று???பதறிவிட்டாள் மாயா!!!ஏதோ தவறு இழைப்பதாய் ஓர் எண்ணம் உருவானது!!மெத்தையிலிருந்து எழுந்தவள்,தன்  தந்தைக்கென்றே தனித்துவமாய் உருவாக்கப்பட்ட பூஜை அறைக்கு விரைந்தாள்.

"அப்பா...!"-கண்ணீருடன் அவர் முன் நின்றாள்.

"நான் தப்பு பண்றேன்பா!பெரிய தப்பு பண்றேன்!எனக்கான கடமைகளை நான் சரியா செய்யலை!இப்போ தேவையில்லாத சலனங்களை எனக்குள்ள அனுமதிக்க ஆரம்பித்துட்டேன்.ருத்ரா வாழ்க்கைப் பற்றி எனக்கு ஏன் தெரிய வரணும்?எதுக்காக அவன் மேலே தனி அக்கறை எனக்கு உருவாகணும்?எதுக்காக அவன் கூட இருக்கும் போது எனக்கே தெரியாம நான் நடுங்குறேன்?காரணம் என்ன?"

"சின்ன வயசுல இருந்து காதலை வெறுத்து வாழ்ந்தவள் நான்!இனியும் என்னால அதை என் வாழ்க்கையில அனுமதிக்க முடியாது!என் பிடிவாதம் எனக்கு முக்கியம்!அதுதான் எனக்கு வேணும்.ருத்ராவோட காதல் இல்லை!ஒருவேளை நாங்க ஒண்ணு சேர்ந்தா,அதனால காலம் முழுக்க துன்பம் தான் வரும்!எங்களால நிம்மதியா வாழ முடியாது!இல்லைப்பா!மறுபடியும் எந்தத் தண்டனையும் எனக்கு வேணாம்.எந்த வலியையும் தாங்குற மனவலிமை எனக்கு இல்லைப்பா!"

"நான் வந்த கடமை எல்லாம் முடிந்துடுச்சுப்பா!ஒரு விஷயம் கூட பாக்கி இல்லாம எல்லாத்தையும் செய்து முடித்துட்டேன்.போதும்பா!என்னை இந்தச் சிறையிலிருந்து விடுதலை கொடுங்க!நீங்க அனுமதிக்கலைன்னா,என்னால இங்கிருந்து விடுப்பட முடியாது!உங்கப் பொண்ணா உங்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமையையும் பூரணமா முடித்துட்டேன்.உங்க மேலே விழுந்த கறையை துடைத்துட்டேன்!நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்பா!இதுக்கு மேலேயும் என்னால முடியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.