(Reading time: 14 - 27 minutes)

சாரி நர்மதா, உன்னோட மேரேஜ் நடந்த சிட்டுவேஷன் தெரிஞ்சும் இப்படி பேசியிருக்க்கக் கூடாது.. அதுவும் மேரேஜும் சீக்கிரம் நடந்துடுச்சுல்ல.. சாரி தெரியாம கேட்டுட்டேன்… சரி மேரேஜ்க்கு அப்புறமாவது ஏதாச்சும் ப்ளான் செஞ்சியா..??” என்பதற்கு நர்மதா ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க..

“நீ ஏதும் ப்ளான் செய்யலன்னு தெரியுது.. ஹே உன்னோட ரூமை நான் பார்க்கலாமா??” என்று அவள் கேட்டதும் நர்மதாவால் மறுக்க முடியவில்லை..

“ம்ம் வா சௌமியா..” என்று நர்மதா அழைத்தப்போது, ஏதோ சொல்ல வந்த கோமதியும் அமைதியானார்.

தன் அறைக்கு சௌமியாவை அழைத்துச் சென்ற நர்மதா.. “இது தான் எங்க ரூம் சௌமியா.. எங்க வீட்டு பெட்ரூமோட இதை கம்பேர் செஞ்சா, இது ரொம்ப பெருசு.. ரொம்ப நல்லாவும் இருக்கு.. எனக்கு எந்த சேஞ்சஸும் செய்யனும்னு தோனல..” என்றாள்.

“அந்த அறையை சுற்றி ஒருப்பார்வை பார்த்த சௌமியாவிற்கும் சூப்பர் என்று தான் சொல்லத் தோன்றியது… இருந்தும் மனதில் நினைத்ததை வெளியே சொல்லமல், “ம்ம் நாட் பேட்.. உனக்கு ஓகேன்னா நான் அதுக்கப்புறம் என்ன சொல்ல..” என்றாள்.

“சரி சௌமியா.. நீ எதுவும் சாப்பிட வேண்டாம்னு சொன்னதும், உடனே போய்டுவேன்னு நினைச்சேன்… ஆனா நீ இவ்வளவு நேரம் இருக்கிறதால, ஏதாவது சாப்பிட்டு தான் போகனும்… இரு ஏதாச்சும் உனக்கு சாப்பிட எடுத்து வரேன்..” என்றாள்.

“ஹே என்ன நீ எடுத்துட்டு வரன்னு சொல்ற?? வீட்ல சர்வன்ட்ஸ் இல்லையா??”

“மத்ததுக்கெல்லாம் இருக்காங்க சௌமியா, ஆனா சமையல் வேலை எப்பவும் ரிஷப் ஓட அத்தை தான் பார்ப்பாங்க.. அவங்களுக்கு இப்போ உடம்பு சரியில்ல.. அதான்..”

“நீ வீட்டுக்கு வந்ததும் அவங்களுக்கு உடம்பு சரியில்லையா..?? நம்பற மாதிரியா இருக்கு..”

“இல்ல ப்பா.. நிஜமாவே அவங்களுக்கு உடம்பு சரியில்ல… அவங்க ரிஷ்ப் ஓட அண்ணா கல்யாணத்துக்கு ஆவலா காத்துக்கிட்டு இருந்தாங்க போல, அது நடக்கலன்னதும் அவங்க அப்செட் ஆகி உடம்புக்கு முடியாம போச்சு.. ஆனா அத்தை அப்பவும் சமையலுக்கு ஆள் போட்றேன்னு தான் சொன்னாங்க.. நான் தான் சும்மா வீட்ல போர் அடிக்காம இருக்க இந்த வேலையெல்லாம் செய்றேன்…”

“இருந்தாலும், நீயே செய்ய பழகிட்டா, அப்புறம் எல்லாமே நீயே செய்யனும்னு நினைப்பாங்க.. அதானால கேர்ஃபுல்லா இரு”

“ச்சேச்சே இந்த வீட்ல இருக்கவங்க அப்படியில்ல சௌமியா.. சரி நீ உக்கார்ந்துட்டு இரு.. நான் உனக்கு சாப்பிட எடுத்துட்டு வரேன்..” என்று அறையை விட்டு வந்தவள் சமையலறைக்குச் சென்றாள்… வரவேர்பறையில் உட்கார்ந்திருந்த கோமதியும் அவர் அறைக்கு போய்விட்டார்.

நர்மதா சென்றதும் அந்த அறையை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா.. அங்கே இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று நன்றாகவே தெரிந்தது… கண்டிப்பாக இந்த அறையென்ன, இந்த வீட்டை குறையே சொல்ல முடியாது என்று பெருமூச்சு விட்டாள் அவள்… அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு வார்ட்ரோபில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.. அந்த வார்ட்ரோபில் இரண்டு அறைகள் இருப்பது போல் கதவுகள் அமைக்கப்பட்டு இருக்க, நடுவே மட்டும் நீளமாக ஒரே கதவாக இருந்தது..

அது என்ன என்பது போல் சௌமியா அதன் அருகே பார்த்தவள், அந்த கதவின் கைப்பிடியில் கை வைக்க, அது பூட்ட படாமல் இருக்கவே இவள் கைவைத்ததும் அது திறந்துக் கொண்டது.. பார்த்தால் அது ஒரு சிறிய அறை… ஏதோ அலுவலக வேலைகள் பார்க்கும் அறை என்பது நன்றாகவே தெரிந்தது.. இவள் ஏதோ அதிசயம் போல் பார்க்க வந்து, அப்படி எதுவும் இல்லை என்று தெதிந்ததும், கதவை மூடிவிட்டு வெளியே வர நினைத்தப்போது,

“யார் நீ..??” என்ற அதட்டல் சத்தம் கேட்டு சௌமியா திரும்பி பார்த்தாள்..

இவளை அதட்டிக் கேட்டவன் யாரென்று தெரியவில்லை.. இவள் தான் நர்மதாவின் திருமணத்திற்கு வரவில்லையே, ஆனால் இவ்வளவு கோபத்தோடு நர்மதாவின் அறைக்கு வந்திருக்கிறான் என்றால், கண்டிப்பாக அவள் கணவனாக தான் இருக்க வேண்டும் என்று யூகித்தாள்… அதற்குள் திரும்ப ஒருமுறை செல்வா இவளை யாரென்று கேட்க?

“நா.. நான் நர்.. நர்ம.. நர்மதாவோட என்று அவள் தட்டு தடுமாறி சொல்வதற்குள், அவளுக்கு சாப்பிட ஏதோ ட்ரேயில் வைத்தப்படி அங்கு வந்த நர்மதா.. “ரிஷப் இது என்னோட ப்ரண்டு தான், இன்விடேஷன் வைக்க வந்தா..” என்று முழுசாக சொல்லி முடிப்பதற்குள்,

“அறிவு இருக்கா உனக்கு.. ப்ரண்டுனா உன்னோட பெட்ரூம்க்கே கூட்டிட்டு வந்து பேசுவியா?? இது என்ன உங்க வீடுன்னு நினைச்சியா..?? ஹால்ல இருந்து ரெண்டு அடி எடுத்து வச்சா பெட்ரூம் தான் இருக்கும்.. அங்க கூட்டிட்டுப்போய் ப்ரண்ட் கூட பேசறாப்போல நினைச்சியா..??

இங்க வீட்டுக்கு வர கெஸ்ட்க்குன்னு அவங்களை நல்லப்படியா கவனிச்சு அனுப்ப ரூம் இருக்கு.. அதுவும் ஏ.சியோட இருக்கும்..உங்க வீட்டு பத்துக்கு பத்து ரூம் போல இல்ல.. பெரிய வீட்டுக்கு மருமகளா வந்தா மட்டும் பத்தாது.. அந்த வீட்டுக்கு வந்ததும் அவங்களை போல இருக்கவும் கத்துக்கனும்… இப்படி ஆளுங்கக் கூட இருக்க ப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணனும்..” என்றான் கோபமாக..

அதுவரையும் நர்மதாவை பேசுவதை கேட்டப்படி இருந்த சௌமியாவிற்கு இப்போது இவளையும் அவன் கேவலமாக பேசுவதைக் கேட்டவள்,

“ஹலோ மிஸ்டர்.. உங்க அளவுக்கு நாங்க இல்லன்னாலும், நாங்களும் ஓரளவுக்கு ஸ்டேடஸ் மெயிண்டெயின் செய்வோம்.. எங்களை ரொம்ப கீழ்த்தரமா நினைக்க வேண்டாம்..” என்றாள் பதிலுக்கு..

ஒரு ப்ரண்டோட வீட்டுக்கு வந்தா எப்படி பிகேவ் செய்யனும்னு கூட உனக்கு தெரியல.. பெட்ரூம் வரைக்கும் வந்து சீக்ரெட் ரூம்ல நிக்கற.. உன்னை அப்படி நினைக்காம எப்படி நினைப்பாங்களாம்..” என்றான் அவன் கோபத்தோடு..

ஏற்கனவே எரிந்துக் கொண்டிருந்த பொறாமை தீயில் நர்மதாவை சுட்டுப் பொசுக்கும் சந்தர்ப்பத்தை சௌமியா எதிர்பார்த்திருந்தாள்… இதில் செல்வா பேசிய பேச்சு இன்னும் கோபத்தை கிளப்ப,

“நர்மதா மேரேஜ் நிக்காம, அண்ணன் இல்லன்னாலும் தம்பி உனக்கு தாலிக்கட்டியதுக்கு ரீஸன் என்ன தெரியுமா?? இப்படி கடைசிவரைக்கும் சம்பளம் இல்லாத சர்வண்ட்டா உன்னை வச்சிக்க தான்.. உன்னை பார்த்தா பாவமா இருக்கு.. சாரி நான் இங்க வந்திருக்கவே கூடாது என்று கோபத்தோடு சொல்லிவிட்டு சௌமியா அங்கிருந்து சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.