(Reading time: 14 - 27 minutes)

சௌமியா பேசியது எதுவும் நர்மதாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. ஏனென்றால் அவளின் பொறாமை குணம் நர்மதா அறிந்ததே.. அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அவள் எதிர்ப்பார்த்ததையும் நர்மதா தெரிந்துதான் வைத்திருந்தாள்… ஆனால் வீடு வரை வந்தவளை நல்லப்படியாக நடத்த வேண்டுமென்பது தான் அவளின் நினைப்பு..

ஆனால் அவள் கோபம் முழுக்க முழுக்க செல்வா மீதுதான் இருந்தது.. இந்த ஒருவாரம் அவனை கோபப்படுத்தி பார்க்க, அவனை வெறுப்பேற்றி பார்க்க இவளும் எவ்வளவோ முயன்றாள்.. ஆனால் அதற்கு அவனுடைய செய்கை ஒரு மெலிதான புன்னகையும், இவள் மீது ஒரு ரசனையான பார்வையுமாக தான் இருக்கும்… அந்த பார்வையும்,  புன்னகையும்,  இவள் மனதில் லேசாக ஒரு மனமாற்றத்தை கொண்டு வந்திருந்தது.. எவ்வளவு நாள் முடிந்ததையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது, இனி இவனுடன் தான் வாழ்க்கை எனும்போது, நாமும் கொஞ்சம் பிடிவாதத்தை விட்டால் என்ன? என்ற கேள்வி இவள் மனதில் பிறந்தது…

ஆனால் இப்போதோ தான் நினைத்தது தவறு என்று நன்றாகவே புரிந்தது… இந்த ஒருவாரத்திற்கும் சேர்த்து தன்னை இவன் இப்படி பழி வாங்குவான் என அவள் எதிர்பார்க்கவேயில்லை.. அதிர்ச்சியில் உறைந்தப்படி நின்றாள்…

ஏற்கனவே அலுவலகத்தில் டென்ஷன், இங்கோ இவன் முக்கிய கோப்புகள் வைத்திருக்கும், இவன் மட்டுமே செல்லும் ரகசிய அறையில் வேறொருவரை பார்த்ததும் இன்னும் அதிக டென்ஷன் ஆகினான்.. இந்த ஒருவாரத்தில் இவன் அந்த அறையில் இருந்தால் கூட நர்மதா என்ன ஏது என்று பார்க்க இந்த அறைக்கு வந்ததில்லை.. அப்படியிருக்க அந்த அறையில் யாரோ தெரியாதவர் நின்றிருந்ததை பார்த்ததும், கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிய செல்வா.. அந்த சௌமியா கொஞ்சம் கீழ்த்தரமாக நர்மதாவை பேசியதும் தான் தான் என்ன பேசியிருக்கிறோம் என்று புரிந்து, “மது..” என்று அவளை அழைக்க,

“இப்போ சந்தோஷமா..?? நான் இந்த ஒருவாரம் நடந்துக்கிட்டதுக்கு என்னை எந்த மாதிரி பழி வாங்கலாம் என்று நேரம் பார்த்து காத்துக்கிட்டு இருந்தீங்களா..?? அப்போ அப்படித்தான் நான் பணத்துக்கு அலையறவன்னு சொன்னீங்க.. இன்னைக்கு என்வீட்டு அந்தஸ்தை பத்தி பேசறீங்க.. அதுவும் யாராவது இருக்கும்போது என்னை கேவலப்படுத்தி பார்க்கறுதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்?? அப்போ உங்க ப்ரண்ட்ஸ், இப்போ என்னோட ப்ரண்ட் முன்னாடி.. இப்போ உங்களுக்கு திருப்தியா??” என்று ஆவேசத்தோடு அவனிடம் அவள் பேச,

“இல்ல மது.. நான்…. சொல்லி முடிக்கும் முன்னே,

“கல்யானத்துக்கு முன்னாடி தான் என்னோட அந்தஸ்து உங்களுக்கு தெரியுமில்ல.. அப்புறம் ஏன் வந்து உங்க வீட்ல பொண்ணு கேட்டாங்க.. அப்போ உங்க அண்ணன் மேல நம்பிக்கை வைக்க முடியாம, அவருக்கு ஏதோ ஒரு பொண்ணு கிடைச்சா போதும்னு உங்க வீட்ல என்னை தேர்ந்தெடுத்தாங்க.. ஆனா அது நடக்கலன்னு ஆனதும், உங்களை மாப்பிள்ளையாக்க நினைச்சப்ப, அந்தஸ்தை நினைச்சு என்னை வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே… நானும் நிம்மதியா இருந்திருப்பேன் இல்ல..” என்றதற்கு,

திரும்ப அவன் “ மது அப்படியெல்லாம் இல்ல” என்று சொன்னதை கூட கேட்க விரும்பாமல், அவள் அந்த அறையை விட்டு வெளியேற, எல்லாவற்றையும் சீக்கிரம் சரி செய்து நர்மதாவோடு சந்தோஷமாக வாழ நினைத்த நானே, இப்போது எல்லாவற்றயும் கெடுத்துக் கொண்டேனே..” என்று செல்வா நொந்துக் கொண்டான்.

பிரண்ட்ஸ்… இந்த முறையும் சின்ன அப்டேட்டா வந்துடுச்சு.. ஆனா அடுத்த அத்தியாயத்திலிருந்து கொஞ்சம் நிறைய பக்கங்கள் தர முயற்சிக்கிறேன்… நன்றி.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.