(Reading time: 22 - 43 minutes)

“ஆமாமா உங்க பிள்ளை தொட்ட கதை விட்டகதை தான் எனக்கு தெரியுமே!” மாணிக்கத்தின் இந்த வார்த்தைகளுக்கு சிவாவின் முகம் லேசாக சிவந்தது, செண்பகத்தின் முகத்தை அவன் பார்க்கும்போது அதில் ஒரு வலி இருந்தது.

“இப்படி நாற்பது வருஷ பழைய வீட்ட, ஒரு பெருமழை வந்தா அஸ்திவாராம் ஆடுற மாதிரி வீட்ட இரண்டு மடங்கு பணம் கொடுத்து வாங்கி, அத மேலும் இப்படி புதுபிக்கிறதுக்கு இன்னொரு மடங்கு பணத்தை எந்த மடையனும் செலவழிக்க மாட்டான். ஆவடி பங்க்ளாவ விட்டு இந்த சின்ன வீட்டுக்கு குடி வந்திருக்கீங்கன்னா ஏதும் காரியமில்லாம இருக்காதே?”

“மாணிக்கம் ஏன் இப்படி பேசுற, விஷ்ணுவுக்கு அடையார்ல ஸ்கூல், அவளை இவ்வளவு தூரம் அனுப்ப முடியாதில்லையா அதனால இங்க மாறிவந்துட்டோம், பக்கத்துல தர்ஷினி மாதிரி ஒரு பொண்ணு துணைக்கு இருக்காளேனும் தான் இங்க வந்தோம், ஏன் மாணிக்கம் வீட்டுக்குள்ள கூட எங்கள கூப்பிடக்கூடதா அளவுக்கு அப்படி என்ன விரோதம் நமக்குள்ள?” – இறுதியாக செண்பகம் தன் மனதில் இருந்தவற்றை கொட்டிவிட்டார்.

“பகைனு நீங்க நினைச்சா அதுக்கு நான் என்ன பன்ன முடியும், தர்ஷினி நாளைக்கு வேர வீட்டுக்கு போக போரவ, அவ கிட்ட தேவ இல்லாம விஷ்ணுவொட பொருப்ப தினிக்காதீங்க, மத்தபடி நீங்களா ஏதோ ஏதோ கற்பனை பன்னிட்டு பின்னாடி வருத்த படாதீங்க, இப்ப தர்ஷினி ஸ்கூலுக்கு கிளம்புறா, நானும் வேலைக்கு கிளம்பனும்..!” மாணிக்கத்தின் வெட்டி விடும் பேச்சு தர்ஷினியை வேதனைப் படுத்தியது. சிவாவும் செண்பகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நான் கிளம்புறேண்டா, சாயங்காலம் வீட்டுக்கு வா!” தர்ஷினியின் கன்னத்தை தட்டிவிட்டு செண்பகம் திரும்ப, அவர் கையைப் பற்றிகொண்டு தர்ஷினி, “அம்மா, அப்படிலாம் ஒன்னுமில்ல, நீங்க உள்ள வாங்க!” என்றாள்.

தர்ஷினியின் பதற்றத்தை நன்று உணர்ந்த சிவாவோ, மிகவும் இயல்பாக அவள் அருகில் வந்தான், “பரவாயில்ல தர்ஷினி, நீ கிளம்பு உன்னயும் விஷ்ணுவையும் ஸ்கூல விட்டுட்டு நான் ஆஃபீஸ் கிளம்புறேன், அம்மா சொன்ன மாதிரி சாய்ங்காலம் பேசிக்கலாம்!”

தர்ஷினி ஒருமுறை திரும்பி மாணிக்கத்தைப் பார்த்தாள். அவர் கண்களில் தெரிந்த கோபம், தர்ஷினியைக் கலங்கடித்தது. “பரவாயில்லங்க, நான் என்னோட வண்டில வர்றேன், நீங்க கிளம்புங்க!” அவள் வார்த்தைகளில் இருந்த கெஞ்சல், அவனைத் துளைத்து வருத்தியது, திரும்பி பார்க்காது விஷ்ணுவை அள்ளிக்கொண்டு கிளம்பினான், அவனுடம் செண்பகமும் கிளம்பிவிட அப்போது ஏற்பட்ட, சில நிமிட தனிமையும், மாணிக்கத்தின் வார்த்தைகள் ஏற்படுத்திய சஞ்சலமும் மனதை வருத்த, மெதுவாக திரும்பி வீட்டுக்குள் சென்றாள். கண்களில் துளி கண்ணீர்.

“தர்ஷினி, நில்லு” மாணிக்கத்தின் குரல் காரமாய் வந்தது.

திரும்பி அவர் அருகே வந்தாள். “என்னப்பா!”

“என் பொண்ணு என்னைக்கு எந்த தப்பும் பன்னமாட்டானு நம்புறேன், அந்த நம்பிக்கைய பொய் ஆக்கிடாத!”

இவள் நிமிர்ந்து பார்க்கும்போது அதில் ஒரு நொடி அவள் மனதின் உறுதி பிரதிபலித்தது. அதை மாணிக்கமும் கவனித்தார். “உங்க நம்பிக்கை பொய் ஆகுதுப்பா, அதே மாதிரி, என்னோட  முடிவுகளுக்கு நீங்க இதுவரைக்கும் முழுசுதந்திரம் கொடுத்திருக்கீங்க இல்லயா?”

“உன்னோட விருப்பங்கள் சரியானதா இருக்கிற பச்சதில நான் அத மறுத்தது இல்ல! அவ்வளவுதான்!”

“நானும் அத தான் சொல்றேன்!”

“தர்ஷினி, ஏற்கனவே உங்கிட்ட நான் சொன்னேன் தேவையில்லாம செண்பகத்துகிட்டயோ, சிவாகிட்டயோ பேசாதன்னு!”

“அப்பா, அடுத்த வீட்டுல அவங்க இருக்காங்க, அவங்கள ஏன் இப்படி விரோதியா பார்க்கிறீங்க?”

“அதுக்கெல்லாம் என்னால உனக்கு விளக்கம் சொல்ல முடியாது, நீ என்னோட வார்த்தைய மீறி அவங்க வீட்டுக்கு போறது, அந்த சின்ன பொண்ண பார்க்கிறது எதுவும் எனக்கு பிடிக்கல..அவங்களோட உண்மையான முகத்த அவங்க உங்கிட்ட காண்பிக்கல, நீ சின்ன பொண்ணுடா..”

தர்ஷினி இப்போது, நிமிர்ந்து மாணிக்கத்தைப்பார்த்தாள், அவள் மீதுள்ள அதிகப்படியான அன்பு தான் அவரை இப்படி பேச வைக்கிறதா? “அப்பா, இன்னிக்கு நீங்க ஏன் அவங்களை தரக்குறைவா பேசுனீங்க, நீங்க பெரியவங்க, அவர வாழ்த்தனுமே தவிர, ஏன் இப்படி சாபம் விடுற மாதிரி பேசுனீங்க, அதுவும் அவங்க அம்மா முன்னாடி!” தர்ஷினி கண்களில் கண்ணீர் முட்டி வழிந்தது, அழுகையினூடே அவள் மாணிக்கத்தை ஏறிடும்போது, அவர் முகத்திலும் வருத்தம் தெரிந்தது. “நீங்க ரொம்ப அவசரப்பட்டுட்டீங்கப்பா!” சொல்லிவிட்டு அவர் வார்த்தைகளுக்கு காத்திருக்காது, உள்ளே சென்றவள், அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் வண்டியில் கிளம்பிவிட்டாள். மாணிக்கம் தீவிரமாக யோசித்துக்கொண்டு நின்றார்.

ள்ளி வளாகத்தில், விஷ்ணுவை இறக்கிவிட்டு, காரை சற்று தள்ளி நிறுத்தி, உள்ளே அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன், தர்ஷினி, காரின் உள்ளே வந்து அமர்ந்ததும், அவளைப்பார்த்தான், அவன் முக்கத்தில் எப்போதும் மின்னும் அதே புன்னகை, தலையை கவிழ்த்து அமர்ந்திருந்தவளை தன் பக்கம் திருப்பினான், குனிந்திருந்தவளின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி நிமிர்த்தினான், அழுது சிவந்திருந்தது அவள் முகம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.