(Reading time: 22 - 43 minutes)

இப்போது மென்மையாக சிரித்த மாறன், “உங்களுடைய வெற்றி இந்த நிறுவனத்தோட வெற்றி மட்டுமில்ல ஐந்து லட்சம் தொழிலாளர்களோட வெற்றி, அதே மாதிரி, உங்க தோல்வி உங்களை விட பல லட்சம் தோழிலாளர்களோட தோல்வி, இன்னும் சொன்னா, அவங்க வேலைக்கே உலை வைக்கிற விசயம், அதை நீங்க சொல்ற பேப்பர வச்சு சரிகட்ட முடியாது கீர்த்தனா!”

“மாறன், நீங்க சொல்ற மாதிரி ஒரு நிலை வந்துச்சுன்னா நாமா ஒன்னும் தொழிலாளர்கள, அம்போனு விடப்போறதில்ல, இதை மாதிரி ஒரு சுழல் என்னோட அப்பா நிர்வாகம் பன்னுன காலத்தில வந்திருக்கு அப்போ நாம கிட்டத்தட்ட லட்சம் பேருக்கு அடுத்த மூனு வருஷதுக்கான ஊதியத்தோட ஓய்வு கொடுத்து அனுப்பியிருக்கோம், உங்களுக்கு  அது தெரிய வாய்ப்பில்ல!”

இளமாறன் ஒரு அடி முன்னால் வந்து, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கீர்த்தனவை கூர்ந்து பார்த்தான், “மிஸ், ஐம்பத்தியைந்து வயதில, ஓய்வு பெரும் சூழல்ல இருக்கிற ஒருத்தர்க்கு எவ்வளவு கடமைகள் இருக்கும்னு உங்களுக்கு தெரியுமா? மகளோட கல்யாணம், மகனோட படிப்பு இன்னும் பல விசயம்.. நீங்க கூல அவருக்கு மூனு வருஷ சம்பளத்தை கையில கொடுத்தா போதும் அவங்களுக்கு பிரச்சனை இல்லைனு நினைக்கிறீங்க! மிஸ் கீர்த்தனா நீங்க மேல்தட்டு வர்கத்த மட்டும் பார்த்திட்டு உங்க கண்ணுல படாத எங்கள மாதிரி கீழ் தட்டு மக்களோட தேவைகளை பத்தி பேசுறீங்க, அது கண்ணே தெரியாத ஒருத்தன் வண்ணங்கள பத்தி விளக்கம் சொல்ற மாதிரி இருக்கு!”

இப்போது தூரத்தில் யாரோ கைத்தட்ட அனைவரும் திரும்பிபார்த்தனர், வெள்ளை வேஷ்டி சட்டையில், கம்பீரமாக விஸ்வம் நின்றார், மாறன் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றுவிட்டான், கீர்த்தனா முகத்தில் புன்னகை, எழுந்து ஓடி அவர் அருகே செல்ல, தன் செல்ல மகளை அனைத்து இழுத்து தன் அருகே  அவளை தன் தோளாடு சாய்த்து நடந்து வந்தார், அனைவரும் அவரை வணங்க, இளமாறன் அருகே அவர் வரும்போது அவன் கைகள் தானாக உயர்ந்து கைகூப்பியது. லேசான தலையசைப்புடன் அமர்ந்த அவர், “தம்பி, மாறனோட செயல் திட்டங்களை பார்த்தேன், எனக்கு அதில முழு சம்மதம், என் மகள் கீர்த்தானாவோட செயல் திட்டங்கள் நடைமுறைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும், அதற்குண்டான அவகாசத்தை நாம் உருவாக்கிக்கொள்வோம், அது மட்டுமில்லாம, நம்ம திட்டங்கள் எந்த ஒரு தொழிலாளரையும் பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன், ரிஷி குழுமத்தோட திட்டங்களை பிரதானமா எடுக்க நான் கையழுத்திடுறேன்!” அவர் நிமிர்ந்து பார்க்கும்போது ஒருவர் பிறழாது அனைவரும் ஆமோதித்தனர்.

விஸ்வம் திரும்பி தன் மகளை பார்க்கும்போது அவள் தோள்களை குலுக்கி புன்னகைத்தாள், அவர் தன் மகளின் தலை மீது கைவைத்து, “அப்பா செய்த்து சரிதானே கீர்த்தி!” என்றார். “நீங்க சொன்ன சரிப்பா, நான் இன்னும் கொஞ்சம் வளரனும்.. பரவாயில்ல இத ஒரு நல்ல முயற்சியாதான் நான் நினைக்கிறேன்!”

“குட்! நான் கிளம்புறேன், மத்த டாக்குமென்ட்சலாம் பார்த்துக்கோ!” அவள் தலையசைக்க, விஸ்வம் கிளம்பினார், மாறன் அருகே அவர் வரும்போது, அவன் மீண்டும் வணக்கம் தெரிவிக்க, “உன் பெயர் என்னப்பா?”

“இளமாறன் சார்”

“அப்பா பேரு? ஊரு!”

“இங்க தான் சென்னை.. அப்பா கிடையாது!” அவன் தயக்கத்துடன் தலை குனிய

“அப்பா பேரு என்ன?” விஸ்வம் அழுத்தமாக கேட்க, நிமிர்ந்தவனோ, “நான் பேர சொல்ற அளவுக்கு அவர் முக்கியமானவர் இல்லங்க, முக்கியத்துவம் எப்போதும் என்னோட அம்மாக்கு தான்!”

அவனை ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டு, அவர் விரைந்து வெளியேறினார், மெதுவாக அந்த அறை கலைந்தது. கீர்த்தனா இளமாறனுக்கு எதிரே நின்று கொண்டிருந்தாள், இருவரும் மட்டும் அந்த அறைக்குள் என்ற தனிமை ஏற்படும்போது, ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்த்தனர்.

“கங்கிராட்ஸ் மாறன்!” பொறாமை சிறிதளவேனும் அல்லாத வாழ்த்து அது.

“தேங்க்யூ, மிஸ் கீர்த்தனா!”

“மாறன், எனக்கு மேல்தட்டு வர்கத்த மட்டும்தான் தெரியும்னு நினைக்காதீங்க, வாழ்கையில கஷ்டப்பட்டு மேலவந்தவங்கள பத்தியும் தெரியும், அவங்களோட வாழவும் தெரியும்”

கிளம்பநினைத்தவன் வழக்கைத்தொடங்கும் அவளை பார்த்து ஒரு ஏளன சிரிப்பை தூவி, அவள் அருகே வந்தான், “என்ன தெரியும் கீர்த்தனா உனக்கு? என்னிகாவது பஸ்ல போயிருக்கீயா? ம்ம் ?”

இல்லை என தலையசத்தாள்.

“காய்ச்சல் தும்மல்னா, கவன்மென்ட் ஹாஸ்பிட்டல் போயிருக்கிறீயா?”

“இல்ல!”

“நீ கட்டிட்டு நிக்கிறீயே அந்த மாதிரி ஒரு புடவை வாங்க, என்னோட ஒரு மாச சம்பளம் ஆகும், என்னிக்குமே மேல்தட்டும் மக்களுக்கு நடுத்தர வர்கத்தோட கஷ்ட நஷ்டங்கள் புரியாது, புரிஞ்சுக்கனும் நினைக்கிறது பெரிய முட்டாள்தனமான செயல்!”

“என்னோட வசதியும், செல்வமும் மட்டும் தான், நம்ம இரண்டுபேரையும் பிரிக்குதாங்க?” நிருத்தி நிதானமாக, மென்மையான ஏக்கம் முகத்தில் படர கேட்டாள். இவ்வளவு நேரம் யாரிவள் என அவனை ஏங்க செய்தவள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.