(Reading time: 22 - 43 minutes)

“விக்னேஷ், ரிஷி அண்ணா எங்க?” – கீர்த்தனா

“கீர்த்தி, ரிஷி வரல அவரோட, பேர்ஸ்னல் அஸிஸ்டென்ட் மிஸ்டர் இளமாறன் அத ஹேண்டில் பன்னுவாரு”

விக்னேஷின் இருக்கையை அடுத்து அமர்ந்திருந்த இளமாறன் மீது கண்கள் ஒரு நொடி விழுந்தது. அலைஅலையான அவன் கேசத்தை ஒழுங்காய் வாரி, மேக நீல வண்ண சட்டையும் அதனை பேண்ட்டுக்குள் ட்க்கின் செய்து, இருக்கையை அடைத்து அமர்ந்திருந்த அவனது உடல்வாகும் மீண்டும்  ஒருமுறை என்னைப்பார் என்று இவளுக்கு தூண்டில் போட்டதுதான்,ஆனால் அழுத்தமாய் பிடித்து வைத்திருந்த அவன் தாடையும், மின்னும் கண்களில் இப்போது தெரித்த கோபமும், இவளை அவன் புறம் திரும்ப விடாது தடுத்தது.

அவள் தன் இருக்கையை விட்டு எழுந்து தன் ஆராய்ச்சிகளையும், தொழிலில் அவள் ஏற்படுத்த விரும்பும் புதிய முயற்சிகளையும்  விவரித்தாள், அது விக்னேஷ் முந்தைய சந்திப்பில் விளக்கியதைவிட  பத்துமடங்கு தெளிவு, நல்ல பேச்சுத்திறமை, சரஸ்வதி நாவில் நாட்டியம் ஆடினாள் என்றே சொல்ல வேண்டும், பங்குதாரர் மற்றும் மற்ற கிளை வல்லுநர்களின் கேள்விக்கும் அவளது ஒவ்வொரு பதிலும் நச்சென்றிருந்தது. கிட்டத்தட்ட அரைமணிநேர அவளுடைய உரையாடலை முடித்து அவள் அமரும்போது, இளமாறன் உரைந்துபோயிருந்தான். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா, விஸ்வத்தின் மகள் அவளை குரைவாக இடைபோட்டது அவன் தப்பென புரிந்தது. இப்போது இங்கு நிற்பது  முழுமையாக விஸ்வத்தின் மகள் ‘கீர்த்தனா விஸ்வம்’, அவன் கைகளில் ஒரு நாள் துவண்டு விழுந்த அவனுடைய பூங்கொடியாள் கீர்த்தி இல்லை இவள். இப்போது அவள் கழுத்தில் அவன் தேடிய தாலிக்கொடி ஞாபகம் வர, தன்னை முட்டாளென நொந்துகொண்டான்.

“மிஸ்டர்  இளமாறன் நீங்க, பிரசன்ட் பன்றீங்களா?” கீர்த்தனாவின் குரல், அவனை தன்நிலைக்குகொண்டு வந்தது. அவன் நடந்து முன்னாடி வந்து நிக்கும்போது சலசலப்பு, அவன் புதுமுகம் அவனுடைய உரையாடலில் ஆர்வமற்று அந்த அவை சலசலத்தது.

“எக்ஸ்க்யூஸ்மி, இவரு இப்போ ரிஷியோட பிரதிநிதி, நான் கூட என்னோட அப்பாக்கு பதிலாதான் இங்க வந்திருக்கேனு உங்களுக்கு ஞாபக படுத்திகிறேன், இப்போ இங்க ப்ரசன்ட் பன்றது ரிஷியா நீங்க நினைச்சுக்கலாம், அவருக்கு என்ன கோ-ஆப்ரேஷன் குடுப்பீங்களோ அதையே இப்ப இவருக்கும் கொடுத்தீங்கன்னா நல்லது.” கீர்த்தனாவின் கனீர் குரலுக்கு சலசலப்பு அடங்கிபோனது.

“தேங்க்யூ மிஸ்… கீர்த்தனா” அவனது பார்வை ஒரு நொடி இவள் மீது படிந்து விலகியது.

இளமாறன் ரிஷி குழுமத்தின் அடுத்த சில ஆண்டிற்கான ப்ளான்களை விளக்கினான்.  தொழில் சார்ந்து அவன் கொண்டுவர விரும்பிய மாற்றங்களை தெளிவாக எடுத்துரைத்தான். இதனால் கடந்த சில ஆண்டுகளில் ஒரு சில நிறுவனங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வழிமுறைகளையும் சொன்னான். எந்த வகையிலும் தொழிலாளர்களை பாதிக்காத வகையிலும் அவர்களுடைய உடல் உழைப்பை அதிகரிக்காத வகையிலும் அவனுடைய திட்டங்கள் இருந்தது அனைவருக்கும் ஏற்புடையதாகதான் இருந்தது. இறுதியாக அவன், “மிஸ் கீர்த்தனா, கடைசி சில வருடங்கள்ல ஒரு சில நிறுவனங்கள் நல்ல பொருளையும் ஈட்டிருக்கு, சில நிறுவனங்கள் நஷ்ட்டத்த சந்திச்சு இருக்கு, இப்ப இருக்கிற நிலைல நீங்க சொல்ற ஜெனிரிக் ப்ரின்சிபிள் அப்ளை ஆச்சுனா இதனால நஷ்டம் ஏற்பட்டா எல்லா கம்பெனியையும் அதனோட தொழிலாளர்களையும் பாதிக்கும் இல்லையா? அதனால அடுத்த மூன்று வருஷத்துக்கு சிற்சில மாற்றங்கள மட்டுமே செஞ்சு, லாபத்தை பெருக்கிறது நல்லது”

“மாறன், நீங்க சொன்ன நஷ்டம் ஏற்பட்டது, ரிஷியோட நிறுவனங்கள் ஒரு சிலவற்றில் தான், அப்படி பார்த்தா இது உங்களுடைய லாபத்தை மட்டும் கனக்கிட்டு சொல்லபடுற திட்டங்களா ஏன் இருக்க கூடாது? அப்படி இருக்கிற பட்சத்தில நீங்க சொல்றத நாங்க மறுக்கலாம் இல்லையா?”

“’ரிஷி நிறுவனங்கள்’ அதோட லாப நஷ்டங்கள்னு தனியா பிரிக்கிறது எனக்கு வேடிக்கையா இருக்கு, நீங்க விஸ்வம் இண்டஸ்ட்ரீஸ ஹேண்டுல் பன்ன ஆரம்பிச்ச வருஷத்தில இருந்து ஐந்து வருடத்துக்கு முன்னடியே ரிஷி அவரோட நிறுவனங்கள நிர்வகிக்க ஆரம்பிச்சுட்டாருங்கிறத உங்களுக்கு நான் ஞாபகப் படுத்த வேண்டிய தேவை இல்லை. ஆரம்ப காலத்தில இருந்த உங்களோட லாபத்தை கனக்கிட்டா, ரிஷி தன்னுடைய முயறச்சில அதை பல மடங்கா உயர்த்தியும் இருக்காரு!”

“சோ, அப்போதைய அவரோட வெற்றிகள கனக்கிட்டு இப்போ அவருடைய அனுகுமுறையே நாங்க ஒத்துகனும்னு நீங்க நினைக்கிறீங்களா,  மாறன்?”

“நிச்சயமா இல்ல, உங்களுடைய புதிய அனுகுமுறை தோல்விய சந்திச்சா, நீங்க அதற்கான மாற்று முறைகள் எதையும் உங்களுடைய திட்டங்கள்ல சொல்ல அது, மிகவும் ஆபத்தானதில்லையா?”

“நீங்க சொல்றத வச்சு பார்த்த எடுத்தவுடனேயே லாபத்தை விட நஷ்டத்தை கனக்கிடனும்னு சொல்ற மாதிரி இருக்கு, மேலும் என்னோட திட்டங்கள் வெற்றி அடையாதுனு நீங்க நினைக்கீறீங்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.