(Reading time: 23 - 45 minutes)

தன் டூவீலரை எடுக்கப் போனவனுக்கு மீண்டும் கோபம் கொள்ளும் வகையில் அடுத்து ஒரு நிகழ்வு..

பொமரேனியன் நாய்க்குட்டி ஒன்று வண்டியின் டயர் அருகே தன் காலைக்கடனைக் கழித்துக் கொண்டிருக்க.. கடும் சினம் கொண்டான் சிங்காரவேலன்.. இப்பொழுதுதான் ஒரு பொறுப்பில்லாத நிகழ்வைக் கண்டு கொதித்துவிட்டு வந்தவனுக்கு, வண்டி மீது அசிங்கம் செய்து கொண்டிருந்த பெட் டாகை(வளர்ப்புநாய்) கண்டு கோபம்தான் வந்தது.. நாய்களின் குணத்தை அறியாதவனா அவன்.. தெருநாய்களை ஒன்றும் சொல்வதற்கில்லை.. அதற்கு இடம், பொருள் தெரியாது.. ஆனால் இது.. செல்லப்பிராணி அல்லவா?.. பழக்கலாமே?..

அதுவும் அதன் அருகில் நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டு இன்னும் ஆத்திரம் தலைக்கேற அவர்களை முறைத்தான்.

ஹா.. ஹா.. அது வேறு யாருமில்லை.. நாயை பிடித்துக் கொண்டு சாந்திபானு நின்றிருக்க.. சற்றுத் தொலைவில் இவனைக் கண்டுவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு உடற்பயிற்சி செய்வதாகப் பாவனைச் செய்து கொண்டிருந்த சண்முகசுந்தரியையும் மோஹிதாவையும் கண்டவன் கண்கள் சிவந்தன.

"பானு.. இங்கே என்ன நடக்கிறது?.. இது உங்க பெட் டாக்கா?.."

"யெஸ் சார்.. குட்மார்னிங்க் சார்.. ஆமாம் சார்.. இது இது.. என்னோட செல்லகுட்டி ஸ்வீட்டி.. நாங்க மூணு பேரும்... பீச்சுக்கு எக்சர்சைஸ் பண்ண வந்தோம் சார்.. ஆமாம் சார் ஜாகிங்க் போய் உடம்பை குறைக்காலாம்னு,,,,," உளறிக் கொட்டி இளித்து வைத்தாள் பன்னு பானு.

அவர்களை ஏற இறங்கப் பார்த்தவன் முகத்தில் சற்றே கோபம் தணிந்து சிரிப்புப் பொத்துக் கொண்டுதான் வந்தது.. 'ம்.. எக்சர்சைஸ் பண்ணுகிற மூஞ்சியா இதுங்க.. ஒண்ணு ஒண்ணும் எக்ஸ்ட்ரா பதினைஞ்சு கிலோ வெயிட் இருக்கும் போல.. இவங்க ரெண்டு பேரும் சரி.. ஆனால் இந்த மோஹிதா பொண்ணு.. அதுவே ஒல்லிக்குச்சி.. இதுக்கு எதுக்கு ஜாகிங்க்..'

"ஓ.. அப்பிடிங்களா மேடம்ஸ்.. ஜாகிங்க் பண்ண வந்தீங்க சரி.. அது எதுக்கு இந்த நாய்க்குட்டி கொசுறா?.. அதுவும் உங்களோடு ஓட வந்துதா?.. ஏன் அதுவும் தின்னு தின்னு உடம்பு கொழுத்திடுச்சா என்ன?.." நக்கலாகச் சிரிக்க..

"ஹிஹீ.. அதுவந்து சார்.. இவ.. அதான் சார்.. நம்ம சுந்தரி சொன்னா சார்.. டாகுக்குப் பால் போட்டு ஓடி ஓடி விளையாடினா கொஞ்சம் நம்ம உடம்பு குறையும்னு.. அதான் சார்.. பால் எக்சர்சைஸ்." அசடு வழிந்து இளிக்க..

"ம்.. ஓ.கே.. நல்ல விளையாட்டுதான்.. அதுவும் நீங்க ரெண்டு பேரும் அப்படியாவது உடம்பு குறைஞ்சா சரிதான்.." என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்து உதட்டை வளைத்தவன்..

"இங்க பாருங்க பானு.. எல்லாம் சரிதான்.. இப்படிப் பொது இடங்களில் உங்க நாய் இல்லையில்ல செல்லகுட்டி ஸ்வீட்டி அசிங்கம் பண்ணா நல்லாவா இருக்கும் சொல்லுங்க?.. அதுவும் என் வண்டிச் சக்கரத்தில்.. நோ வே.. இப்போ நீங்க என்ன பண்ணுறீங்க.. மொதல்ல அது செய்து வைத்த அசிங்கத்தை அள்ளுங்க.. அத்தோடு கண்ட இடத்தில் இப்படி அசிங்கம் செய்தால் சுற்றுச் சூழல் அசிங்கமாவுது பாருங்க.. கமான் க்விக்.. முதல்ல வண்டியைச் சுத்தம் பண்ணுங்க..”

பானுவின் முகத்தில் ஈயாடவில்லை.. திருதிருவென முழித்தாள்.. ஆப்ட்டரால் ஸ்வீட்டி ஏதோ தெரியாமல் அசிங்கம் பண்ணிட்டா.. அதுக்கு நானா பொறுப்பு.. அப்படியே வண்டியை ஓட்டிகிட்டுப் போனா ஆகாதாமா இவருக்கு?.. ரோடுல ஓட்டிகிட்டுப் போனா அசிங்கம் அதுவே காணாமப் போயிடாதா என்ன?.. இதெல்லாம் ஓவரா இல்ல இருக்கு?..'

அதை வெளியே சொல்லிவிட முடியுமா?.. வேறு யாராவது இருந்தால் பரவாயில்லை.. சொல்பவர் அவர்கள் ஆசிரியர் அல்லவா?.. ‘ஏற்கனவே சுந்தரிக்கு இலைகளைக் குப்பையாய் கிள்ளிப் போட்டாள் என்று குப்பைத் தொட்டிக்குச் சலூய்ட் அடிக்க வைத்தவனாயிற்றே.. அய்யோ இப்போ என்ன சொல்லுவானோ.. வண்டியைச் சுத்தம் பண்ணலைன்னா.. காலேஜ்ஜுல இருக்கும் எல்லாம் வண்டியையும் என்னைக் கழுவ வைச்சிடுவானோ?..'

"மிஸ். பானு என்ன யோசனை?.. சீக்கிரம் சுத்தம் பண்ணுங்க.. நான் கிளம்பணும்.. ம்ம்.." சிங்காரவேலன் உறும..

"சார் அது வந்து சார்.. எப்படிச் செய்யறது?.. பேப்பர்.. இல்ல.. வண்டியை ஓட்டினா.. ஹாங்க் அதுவா போயிடும்.." எனப் பானு இழுக்க..

"பானு.. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா?.. நீங்களெல்லாம் கல்லூரியில் படிக்கும் பொறுப்பான மாணவி சொல்லிக்கொள்ளாதீங்க.. உங்க பெட் டாக்கை அழைச்சி கொண்டு நீங்க வாக்கிங்க் இப்படிப் பொது இடத்திற்குப் போனால் கையில் பேப்பர் கவர் இல்லாமல்தான் போவீங்களா?.. இப்படி உங்க நாய் ஆங்காங்கே அசிங்கம் செய்தால் யார் அள்ளுவாங்கமா?.. கார்ப்பரேஷங்காரன் வந்து இதெயெல்லாம் க்ளீன் செய்யணும்னு நாம் ஏன் எதிர்பார்க்கணும்?.. நாமே சுத்தமாக இருந்தால் நல்லதுதானே?.. இனிமேலாவது பொறுப்பா பேப்பர் எடுத்துகிட்டு வெளியே போங்க.. இந்த லட்சணத்துல வண்டி ஓடினா அதுவா க்ளீன் ஆகிடும்னு எனக்கே சொல்லிட்டு.. என்ன பொண்ணுங்களோ?.."

"ஓ.கே சார்.. சாரி சார்.. அப்போ நான் போகலாமா?.." தயக்கத்துடன் அவனைப் பார்க்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.