(Reading time: 10 - 19 minutes)

முப்பதுநாள் வெளியே வந்தா கண்ணைக் கட்டி காட்டுலே விட்டா மாதிரி ! என் விதியோ மறுபடியும் இந்த தொழிலுக்கே தள்ளிடுச்சு ஒரு சில சமயம் இந்த பொழைப்புக்கு செத்தப் போயிடலான்னு தோணும். ஏனோ இது வரையில் நாட்களை ஒட்டியாச்சு இந்த மாதிரி ஒரு நல்லது உங்க மூலமா எனக்கு நடக்கணுமின்னுதான் ஆண்டவன் என்னைப் பிழைக்க வைச்சிருக்கானோ என்னவோ ?

ஹாலில் நடுநாயகமாக மாயாவின் புகைப்படம் மிகவும் பெரியதாக ப்ளோ-அப் செய்யப் பட்டு இருந்தது. சந்தனமாலையோடு சிரித்த அவளின் போட்டோவின் முன் பர்வதம்மாள் விளக்கேற்றி வைத்துவிட்டு தன் பருத்த உடலைக் குலுக்கினாள்.

கடவுளே போகக்கூடிய வயசா உனக்கு? இப்படி பண்ணிட்டியேடி என்று ஓவென பெருங்குரலெடுத்து அழுது கொண்டு இருந்தாள்.

லாயர் சண்முகம் ஒரு அர்த்தப் புன்னகையுடன் அவர்களை நெருங்கினார்

மாயாவின் இழப்பு எதிர்பாராததுதான் பர்வதம்மா அதையே நினைச்சா எப்படி ? கவனிக்க வேண்டிய காரியங்கள் இன்னமும் எவ்வளவோ இருக்கு 

ஆமாங்கய்யா எம் பிள்ளைக்கு கல்யாண் செய்து வைச்சு நல்லபடியா அவளை வாழ வைக்கணுமின்னு ஆசைப்பட்டேன். ஆனா அது முடியாமப் போச்சே. இப்படிப் பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே, ஆயிரம் முறை கேட்டேன் நீ வேற யாரையாவது கல்யாணம் செய்துக்கப் போறீயான்னு இல்லவேயில்லைன்னு சாதிச்சிட்டா. அவளுக்கு சந்துருவை ரொம்ப பிடிக்கும். கல்யாணம் செய்துகிட்டு அவ தொழில்ல சாதிக்க எத்தனையோ கற்பனைகள் வைத்திருந்தாள். ஆனா, எல்லாம் முடிஞ்சுப் போச்சு, 

மாயாவோட சொத்துக்கள் இந்த வீடு இதெல்லாம் ?

அவளே போயிட்டா இனிமே அதெல்லாம் மாத்தினாத் தான் என்ன? மாத்தலைன்னா என்ன? விடுங்க சார். அப்புறம் பாத்துக்கலாம். சந்துரு வாய் திறந்தான்.

அவங்கதான் மனசு வேதனையில பேசறாங்கன்னா நீங்களும் எதையும் புரிஞ்சுக்காம பேசினா எப்படி மிஸ்டர். சந்துரு, மாயாவோட உயில் விஷயமா நான் சில விஷயங்களை சொல்லணும். 

மாயா உயில் எழுதினாளா ?!

அதை உயில் சொல்ல முடியாது, மாயா இறக்கிறது கொஞ்சநாள் முன்னாடி வந்து இந்த வீட்டைப்பற்றியும் அவங்க சொத்துக்களைப் பற்றியும் சில மாற்றங்களை பத்திரங்கள் மூலமா செய்ய சொன்னாங்க இப்போ அவங்க இறந்திட்டதால அதை நாம உயிலா எடுத்துக்க வேண்டியதாகிப்போச்சு. 

மாயாவுக்கு எங்களைத் தவிர வேற யாரும் கிடையாது லாயர் சார். அவளோட இறப்பு சான்றிதழ் அவளுக்கு பிறகு கார்டியனா இருந்த அம்மாவிற்குதான் அது சேரும் அதிலும் மாயாவுக்கு நடப்பதை முன்னரே உணர்ந்து இப்படியொரு உயிலை எழுதியிருக்கா 

அதாவது தற்கொலையை முன்னமே உணர்ந்து இல்லையா ?! 

ஆமா அவ தற்கெலை செய்வது உணர்வு பூர்வமா உடனே எடுத்த முடிவு இல்லை ஏற்கனவே யோசிச்சிருக்கா ஆனா அதற்கான காரணம்தான் தெரியலை

அதுவும் கூடிய விரைவில் தெரியவரும் ?!

என்ன சொல்றீங்க சந்துரு உங்க பேச்சு ரொம்பவே புதிரா இருக்கு 

நாம விடைதேடவே முடியாதுன்னு நினைக்கிற புதிர்களுக்கு கூட விடை சுலபமா கிடைச்சிரும் சந்துரு, இதோ கிடைச்சிடுச்சு என்று அவர் சுட்டிக்காட்டிய திசையில் ஒரு பெரிய டிராவல் பேக்கோடு உள்ளே நுழைந்தான் அவன்.

யாரையும் லட்சியம் செய்யாமல் நேராக போய் சோபாவில் அமர்ந்து தன் கூலிங்கிளாஸைக் கழற்றினான்.

யார் நீ ? என்ற பர்வதம்மாளை அலட்சியம் செய்து அங்கிருந்த மாயாவின் படத்தின் முன் போய் நின்றான். அணையப் போகும் தீபத்தை சற்றே தூண்டி விட்டான்.

மாயா....என்னை மன்னித்துவிடு மாயா, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் உன்னை இப்படி தனியே விட்டுச் சென்று இருக்கக் கூடாது. 

மிஸ்டர் நீங்க யாரு மாயாவை உங்களுக்கு எப்படித் தெரியும்.?

அவன் அதற்கும் எந்த பதிலும் சொல்லவில்லை, தன் பேக்கில் இருந்த பூச்செண்டையும், அழகான வெண்பட்டு புடவையினை எடுத்து அந்தப் படத்தின் முன்பு வைத்தான். 

நான் நீ யார்ன்னு கேட்டேன் ?

நான் யார் என்று உனக்குச் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை, 

இதே மாதிரி பேசிகிட்டு இருந்தியான்னா வீட்டுக்குள்ளே வந்து தொல்லை பண்றேன்னு நான் போலீஸ்கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன். 

அதோ இன்ஸ்பெக்டரே வர்றார். கம்ப்ளைண்ட் பண்ணு.

இன்ஸ்பெக்டர் வீரா உள்ளே நுழைந்தார்.

என்னாச்சு என் பெயர் அடிபடுது. 

சந்துருக்கு நான் யார்னனு தெரியணுமாம் ?! லாயர் சார் உங்களுக்கு நான் யார்ன்னு தெரியுமே சொல்லலாமே ? 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.