(Reading time: 13 - 25 minutes)

‘நான் சீரியஸா தான் சொல்றேன் அர்ஷுமா. உன்னோட மாமியார் மாமனார் கிட்டே ஏற்கனவே பேசிட்டேன். நான் இன்னும் ரெண்டு நாள்ல மெடிகல் கேம்ப் போறேன்’ என்றவன் தனது சீனியர்கள் ஹர்ஷவர்தன் ஹரிணி செய்யும் பணி குறித்து விளக்கமாய் சொன்னான். அவர்களிடையே அவன் கொண்டிருந்த ஆழமான நட்பையும் விவரித்தான். அவளது குடும்பம் பற்றிக் கேட்க நினைத்தவன் கேம்ப் செல்வது பற்றிய பேச்சில் ,மறந்து போனான். அவளோ விரைவில் மாமா அத்தை வருண் மூவரிடமும் சொல்லிவிட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

‘பாஸ் வரியான்னு கேட்டார் அர்ஷுமா. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா’ அவன் சொல்லிக்கொண்டே போக அவனது மகிழ்ச்சியில் இவளும் பூரித்துப் போனாள்.

‘ராம் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’ எம்பி அவனது கன்னத்தில் முத்தம் பதித்து அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

இப்போது நெகிழ்ந்து போவது கணேஷின் முறையாக போயிற்று.

தனது மெடிகல் ட்ரிப் பற்றி சொன்னால் என்ன சொல்வாளோ என்று பதட்டம் கொண்டிருந்தான் தான். குறைந்த பட்சம் பிரிவை எண்ணி கலக்கம் கொள்வாளே என்று எண்ணியிருந்தான். மாறாக அவனது உயர் பணியை எண்ணி பெருமை கொண்டாள்.

‘இவளை இங்கு யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்’ நினைத்தவன் மனதில் முன்பு ஹரிணி சொன்ன சொற்கள் எதிரொலித்தன.

‘நாம் செய்யும் நற்செயல் என்றாவது ஒரு நாள் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு வேண்டிய நன்மைகளை செய்யும் ராம்’ இன்று அது மெய்யென நிரூபணம் ஆனது.

‘இதோ பொக்கிஷமாய் என்னவள் எனக்கு கிடைத்திருக்கிறாள்’

‘அர்ஷுமா நீ எப்போவும் என் கூடவே இருக்கணும். இத்தனை நாள் என் இதயத்தின் உள்ளே பத்திரமா இருந்த. இனி என் கண் முன் எப்போவும் என் கூடவே இருப்பியா’

‘நான் உங்க கூட எப்போவும் இருப்பேன் ராம். உங்க கனவுகள் இலட்சியங்கள் எல்லாத்திலும் துணை இருப்பேன். பத்திரமா போயிட்டு வாங்க ராம். நான் உங்களுக்காக இங்கேயே காத்துக் கொண்டு இருப்பேன்’

இப்படி சொன்னவள் தான் இன்னும் சில மணி நேரங்களிலேயே உயிருக்கு உயிரானவனை விட்டு ஒரேடியாக பிரிந்து செல்ல முடிவு செய்யப் போகிறாள் என்பதை அறியாதவன் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

இதயம் துடிக்கும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.