(Reading time: 41 - 82 minutes)

ய்...நில்லு...எதுக்கு அழுதுகிட்டு ஓடுற....?”

“இன்னைக்கு முழு பரீட்சைக்கா....வீட்ல ஒரே சண்ட....அதுல நான் லேட்டாய்ட்டேன்....ரயில்வே கேட்டை தாண்டி ஸ்கூல்கா...இன்னும் 5 நிமிஷத்துல அங்க இல்லனா...பரீட்ச எழுதவிட மாட்டாங்கக்கா..”

“இதுக்கா அழுதுகிட்டு இருக்க....” என்றவள் திரும்பி பார்த்து சற்று தொலைவில் நின்றிருந்த ஆட்டோவை அழைத்தாள்.

“மணி அண்ணாச்சி....தம்பிய கொண்டு ஸ்கூல்ல விட்டுடுங்க....” பணத்தை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் நீட்டினாள்.

“குதிரை யுத்தத்திற்கு ஆயத்தமாகும், ரிசல்டோ கர்த்தரால் வரும்னு .. பைபிள்ள சொல்லிருக்கு...உன் பக்கம் ட்ரை பண்றத முழுசா பண்ணு மத்தபடி வார ரிசல்ட்டு அவரோடது..அது எதா இருந்தாலும் உனக்கு நல்லது....தைரியமா போ...நானும் உனக்காக ஜெபம் பண்ணிக்கிறேன்.”

ஆட்டோ இவர்களிடம் வந்து சேருவதற்குள் கடகடவென சொல்லி முடித்தவள், பையன் ஏறியதும் சிரித்தபடி பை சொன்னாள்.

ங்கள் அண்ணன் வீட்டிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் தென்பாவூருக்கு காரில் கிளம்பிய ஆனந்தும் ஜீவனும் அங்கு அவர்களிடமிருந்த முகவரியை விசாரித்து வீடை கண்டுபிடித்தால் வீட்டுக்கு வெளியே பெரிய பூட்டு.

ஆனால் உள்லிருந்து ம்யூசிக் அலறிக்கொண்டிருந்தது.

என்ன பாட்டுடா இது...?

“செல்ஃப் ம்யூசிக் போல...”

“அப்டினா எப்டிடா இவ்ளவு சவுண்டா இருக்கும்...? “

“அதுக்கு கொஞ்சம் மேல பார்க்கனும்....”

மொட்டை மாடியில் பட்ட பகலில் சகோதரிகளின் பாட்டு கச்சேரி.

“அனா அக்கா...அத கவனிச்சியா.....? ரெண்டு தடிமாடுங்க நம்ம வீட்ட நோட்டம் விடுது....” கீழே நின்றிருந்த ஆனந்தையும், ஜீவனையும் பார்த்த ஜீவனி தன் அக்கா ஆனந்தியிடம் சொன்னாள்.

“ஆமா ஜீவனி...இப்ப என்னடி பண்றது...? ஒரு வேள இவங்க மாப்ள வீட்டுகாரங்களா இருப்பாங்களோ...?”

“போக்கா உனக்கு அறிவே இல்ல...தங்கையாவும் சிங்கையாவும் இவ்ளவு டீசண்டாவா ட்ரெஸ் பண்ணுவாங்க....இதுங்க ஃபாரின் பார்டி மாதிரி பக்காவா இல்ல...? நிச்சயம் கொள்ளகாரங்க தான்...அவங்க தான் இப்பல்லாம் டீசண்டா இருக்காங்களாம்....நியூஸ்ல காமிக்றது இல்ல...”

“ஆமான்ன...இப்ப நாம கவனமா நடந்துகிடனும்...அக்கா கல்யாணம்னு அத்தனை நகையும்  பணமும் இங்க தான் வீட்ல வச்சிருக்கும் பாலம்ம... ஆனா அதுக்காக சந்தடி சாக்கில எனக்கு அறிவில்லனுல்லாம் நீ சொல்றது நல்லா இல்ல....”

“ஐயோ..இப்ப இதுவாக்கா முக்கியம் என் புத்திசாலி தமக்கையே....சீக்கிரமா செல்லப்பா சித்தப்பாவுக்கு ஃபோன் போட்டு கூப்பிடுவோம்...முதல்ல மொட்டை மாடி கதவை பூட்டிட்டு வீட்டுக்குள்ள போவோம்.”

“ஏண்டா அண்ணி வீடு ஒரு மார்க்கமா இருக்கும்போல...”

“ஏய்....ஜாலியா இருந்தா தாண்டா நமக்கும் நல்லா இருக்கும்...அண்ணி சிடுமூஞ்சியா இருந்த எப்டிடா இருக்கும்...?”

“அதுவும் சரிதான்.”

“ஆனா இங்க வந்த அண்ணா எங்கடா...?”

“இன்னும் வந்திருக்க மாட்டான்டா....”

“சரி  அவனுக்கு தெரியாம வெயிட் பண்ணுவோம்...ஆனா...அவன் இந்த பக்கமா வந்ததும் குண்டுகட்டா தூக்கிட்டாவது போய்டலாம்டா... மொத்த ஊரும் சொந்த காரங்களா இருப்பாங்கபோல...இப்ப வந்து கல்யாணம் வேண்டாம்னா நம்மள அடி சதப்பிடுவாங்கடா....”

“பாய்ண்ட்...”

“ரொம்ப நேரம் இந்த கேட் பக்கத்துல நின்னாலும் ஊர்காரங்க கூடிருவாங்கடா”

“கேட்டை தாண்டி உள்ள போயிரலாம்...அப்பதான் தெருவுல இருந்து பார்க்கிறவங்களுக்கு தெரியாது. ஒருத்தர் .கேட் பக்கமா தோட்டத்தில ஒளிஞ்சுகிடலாம்... அண்ணா உள்ள வந்ததும் இழுத்துட்டு வந்துடலாம்....அடுத்தவர் கார்ல ரெடியா இருக்கனும்....”

அதெல்லாம் சரிதான் கேட்டுக்கு உள்ள இருந்துகிட்டு வெளிய வர்ற அண்ணாவை எப்படிடா பிடிக்கிறது...?

“பாய்ண்ட்...”

“ஒன்னு பண்ணலாம் நான் என் முகத்தை மறைச்சு கட்டிடுறேன்...அண்ணன் போட்டாவை இங்க குடுத்துறுக்குன்னு பால்ராஜ் மாமா சொன்னார்ல...அதனால எப்படியும் அண்ணாவை அடையாளம் தெரிஞ்சி கதவ திறக்க இந்த வீட்லருந்து யாராவது வருவாங்க....அவங்க கதவ திறக்கிறப்ப .நான் முகத்தை மறைச்சு கட்டிகிட்டு திடீர்னு தரிசனம் தாரேன்..பொண்னு பயந்துபோய் ஓடும்...அண்ணா அஸ் யூஸ்வல் என்னை துரத்துவாரு...காருக்கு வந்துடுறேன்...இழுத்து உள்ள போட்டுட்டு போய்கிட்டே இருப்போம்...”

“கலக்கிட்ட போ... இந்த ஐடியாவுக்கு உனக்கு நேஷனல் அவார்டே கொடுக்கலாம்...”

“நேஷனல் அவர்ட்ஆ அது சினிமாக்கு குடுக்கிறதுடே.....”

“நீ சொல்றது நடக்கிறப்ப அது ரியல் சினிமாதானே....”

“சினிமாவா.....அண்ணா ஜிம் பாடி ஞாபகம் இருக்கா...நியாயபடி எனக்கு பிரேவரி அவார்டு கொடுக்கனும்டா....”

“இதுவும் பாய்ண்ட்...”

“இல்ல இதுமட்டும்தான் பாய்ண்ட்.”

“சரி என் அண்ணங்களுக்காக இந்த தியாகத்த நானே செய்றேன்...வர்ற தலைமுறை என்னை புகழட்டும்...சரித்திரத்துல என் பேர் நிலைக்கட்டும்...வாழ்த்தி விடைகுடுடா  ஆனந்த்...” ஜீவா கேட்டேறி குதித்து வீட்டிற்குள் வந்தான்.

ஆனந்த் காரை நோக்கி போனான்.

“எப்பவும் ரெடியா இருடா...”

“டன்”

தேவகிருபா அருகில் வந்து நின்றான் அவன்.  மொத்த பஸ்டாப்பில் இவர்கள் இருவர் மட்டுமே...

“ஏங்க....இந்த அட்ரஸ் எப்படிங்க போகனும்...? ” கண்முன் நீட்டப்பட்ட அந்த துண்டு காகிதத்தைப் பார்த்தாள் கிருபா.

ஜெயகொடி

தாயகம் இல்லம்

17, ஆசிரியர் தெரு,

பாவூர்.

பக்கென்றது!! அது அவள் வீட்டு முகவரி. பாவூர் என்பதற்கு பதிலாக தென்பாவூர் என்றிருக்க வேண்டும். அப்படின்னா இது யாரு...?

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“தப்பா எடுத்துக்காதீங்க....எனக்கு இந்த ஏரியா பழக்கம் கிடையாது... பாவூர்னு கேட்டதுக்கு பஸ்ல இங்க இறக்கிவிட்டுட்டு போய்டாங்க... “

தலை முதல் கால்வரை அவன் மீது ஓடியது அவள் பார்வை. முடி வெட்டி இருக்கும் விதமும் அந்த மீசையும், அவன் முகமும் தவிர அனைத்தும் அக்மார்க் சினிமா வில்லன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.