(Reading time: 41 - 82 minutes)

ர்றப்பவே தண்ணி எடுத்துட்டு வந்துருக்கான்....பாக்கவே பயமா இருக்கிற மாடிய எதிர் காத்துல யதார்த்தமா தாண்டி இவளுக்கு ஹெல்ப் பண்ண வாரான்....ரொம்ப நல்ல திருடன்....

“அக்கா எப்டி இருக்கா.....அவளுக்கு என்னாச்சு திருடன் சார்....?? ...” ஜீவனி அருகில் வந்த ஆனந்திடம் பாச பதற்றமும் தவிப்புமாக கேட்க

திருடன் சாரா...???  எங்க இமேஜ் இவ்ளவு டேமேஜா!!!!! நிலமை புரிய அடுத்த மாடியில் இருந்த  தன் தம்பியை பார்த்து கூவினான் ஆனந்த்.

“டேய் திருடன் சார் நம்பர் ஒன்...முதல்ல உன் முகமுடிய கழத்து ஆட்டமெட்டிக்கா இவ அக்கா விழிச்சிருவாங்க...”

அண்ணன் சொன்னது புரிய அவசர அவசரமாக தன் கர்சீஃபை கழற்றினான் ஜீவன்.

அங்கு ஜீவனிக்கோ பல விஷயம் நொடியில் புரிந்தது.

இதற்குள் மயக்கம் தெளிந்து மிரண்டு விழித்த ஆனந்தியை நோக்கி சொன்னாள் ஜீவனி

“அக்கா இதுங்க சீக்ரெட்டா வந்த சிங்கம்ஸ்....”

அருகிலிருந்தவன் முகம் பார்த்த ஆனந்தி சட்டென எழுந்து கொண்டாள்.

“சாரி...” நால்வர் வாயிலிருந்தும் ஒரே நேரத்தில் வந்தது. அடுத்து நால்வரும் ஒன்றுபோல் சிரித்துக் கொண்டனர்.

ருகிலிருந்த அந்த சின்ன ஹோட்டலுக்குள் நுழைந்தனர் அந்த சினிமா வில்லனும் தேவகிருபாவும்.

மதிய நேரம். இருந்த இரண்டு டேபிளில் ஒன்றில் இரு ஆண்கள்.

அடுத்த மேஜையில் போய் அமர்ந்தாள் கிருபா.

“இங்க உட்காரலமாங்க..? .தப்பா நினைக்க மாட்டாங்களா உங்க ஊர்காரங்க......?” எதிர் இருக்கையை காட்டி கேட்டான்.

நினைக்க தான்டா செய்வாங்க பஞ்சுமிட்டாய்....எங்க சொக்காரங்க பார்த்தாங்கன்னா உன் சொக்காய பிடிச்சு தூக்கி போட்டு மிதிப்பாங்கடா...

“ம்..உங்க வயித்துக்கு நீங்க சாப்ட போறீங்க....என் வயித்துக்கு நான்...இதுல அவங்க என்ன நினைக்கிறது....?”

“ஆமாங்க அதுவும் சரிதாங்க...” அமர்ந்து கொண்டான்.

“என்ன வேணுங்க....? வெயிட்டர் கேட்க

” அவருக்கு என்ன வேணும்னு அவர்ட்ட கேளுங்க....எனக்கு தயிர் சாதம்..”

ஒருவாய் சாதம் உள்ள இறங்குமான்னு தெரியல....  இவன் பக்கத்துல இருந்தா பயத்துல...வினைய நானே வெதச்சுட்டனோ....???!!

அவள் கண்கள் திறந்திருந்த ஹோட்டல் கதவின் வழியாய் தெருவில் அலைய, அவன் கண்களோ அவள் மீது அலைந்தது....

ப்பொழுதுதான் தெருவில் ஓடி வந்தது அந்த கோழி. ஓடி சென்று அதை துரத்த ஆரம்பித்தாள் கிருபா.

அரை லூசு பொண்னு இது, ஆளவிட்டா போதும்னு ஓடி போய்டுடா....

பக்..பக்..பக்...பக்.....

குனிந்தபடி அவள் துரத்த சற்று அங்குமிங்கும் ஓடிய கோழி சற்று நேரத்தில் வினோதமாக ஒலி எழுப்ப, கோழியின் உரிமையாளருடையது போலும்.... இப்பொழுது ஓடி வந்தது  ஒல்லியாய் உயரமாய் ஒரு நாய்.

வேட்டை நாய்.

அது அவளை துரத்த ஆரம்பித்தது. தலை தெறிக்க ஓட தொடங்கினாள் கிருபா...

“ஹேய் ...ஓடாத ஓடுனாதான் துரத்தும்....”

அவன் சொல்வதை கவனித்தால் தானே!!

அவள் முன்னால் ஓட, அவள் பின் அது, அதன் பின் அவன்.

கண்மண் தெரியாமல் ஓடியவள் உணர ஆரம்பிப்பதற்கு முன்பு, சரலில் கால் சரிக்கி மூன்று நான்கு முறை உருண்டு, அவள் விழுந்தது நீருக்குள். கிணறு!!!

“அம்ம்ம்மாமாஆஆஆஆஆஅ”

“ஹேய்.........”

இவளை துரத்திய நாய் இவள் மீது குதிப்பதாக குதித்து இவளுக்கு முன்பாக விழுந்தது கிணற்றுக்குள்.

இவளை தொடர்ந்து அவன் கிணற்றில் குதிக்கிறான் என்பது வரை அவளுக்கு உணர்வில் இருந்தது.

மீண்டும் அவளுக்கு உணர்வு வந்த போது, அவள் முகம் பார்த்தபடி நீர் சொட்டும் முகத்துடன் அவன். அருகில் அவளை பரிதாபமாக பார்த்தபடி ஈரமாக அந்த நாய்.

அதையும் வெளியே தூக்கி விட்டிருக்கிறான்.

நாயை தூக்கியபடி கிணற்றிலிருந்து ஏறவேண்டுமெனில்.....அ வெரி வெரி கேரிங் பெர்சன்....ஆல்ஸோ வெரி டிட்டர்மின்ட் ஆன்.. முக்கியமா....இவனுக்கு இவள மாதிரி ஸைனபோபியா கிடையாது.

ஹேய்...எல்லாரும் தண்ணிய குடிச்சுதான் மயங்குவாங்க...தண்ணிய தொடுறதுக்குள்ள மேடம் மயங்கிட்டீங்க...”

“எனக்கு தண்ணி, நாய் ரெண்டும் ரொம்பவே பயம்....”

“பயம் லிஸ்ட்ல பாட்டி பார்த்திறுக்கிற மாப்ளையை விட்டுடீங்களே....”

ஓ கண்டுபிடிசாச்சா...புத்திசாலிடா நீ....

“அது அப்ப...” அவளையும் மீறி முகத்தில் சூடேறியதை உணர்ந்தாள். தன் முகம் சிவக்கிறது என்பது அவளுக்கு புரிந்தது. அவனை நோக்கி இருந்த முகத்தை இட புறமாக திருப்பிக் கொண்டாள்.

ஆனாலும் ஆளை அள்ளும் அவன் முழுப்புன்னகை கண்ணில் தெரிந்தது.

ஆண் புன்னகையில் கூட அழகுண்டா?

 ழுந்து உட்கார்ந்தாள். இருவர் உடையும் தொப்பல்.

“இப்ப என்னங்க செய்யலாம்...?” தவிப்பாய் இவள் தன் உடையை பார்க்க...

“டேட்டிங்...” அவன் சொன்ன வார்த்தையின் சத்தத்தில் அதிர்ந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஆக படிக்காதவன் போல் வேஷமிட்டிருக்கிறான்....

சற்றே தலை சரித்து மந்தகாசமாய் அவன்.  

தன் கண்கள் வழியாக ஒருவன் உயிருக்குள் சரிவதை முதல் முறையாக உணர்ந்தாள் பெண்.

சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். கிணறும் அதை சுற்றிலும் கண் தொடும் தொலைவு வயலும்....மின் கம்பியில் அமர்ந்திருக்கும் சில பறவைகளும்....தன்னை தானே சிலிர்த்துக்கொள்ளும் அந்த நாயும்...அவனும் ..அவளும்....அவன் பேச்சும்...சரியும் இவள் மனதும்....இது சரி இல்லையே!!

“இரெண்டு பேரும் மனசுவிட்டு பேசலாம்னு சொன்னேன்...” ஆளுமை நிறைத்த குழைவில்லாத குரல். இவள் பயம் நீங்கி நோக்கம் நேர்மையானது.

மனதை படிப்பவன்.

“உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனு புரிஞ்சிது....என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா..?” நட்பின் சத்தம்.

“நீங்களும் தான் கல்யாணம் பண்ண வந்த மாதிரி இப்ப எனக்கு புரியல....என்னை வெரட்டியடிக்க கெட் அப் போட்ட மாதிரி தெரியுது...”

“இப்போ நான் சொல்றதை தப்பா நினைக்காம கரெக்டா புரிஞ்சிகிடனும்....ப்ளீஸ்.......உன்னை பார்க்கிறவரை....கரெக்டா சொல்லனும்னா அந்த குட்டி பையனுக்கு நீ ஆட்டோ பிடிச்சு அனுப்பி வைக்கிறத பார்க்கிற வரை எனக்கு கல்யாணத்தில இஷ்டம் இல்ல....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.