(Reading time: 41 - 82 minutes)

டித்த தோல் செருப்புகள், பெல்ட்டிடப்பட்ட வேஷ்டி, கை முட்டிக்கு மேலாக மடித்துவிடப்பட்ட அந்த முழுக்கை சிவப்பு வர்ண சட்டை...அதை மீறி திமிரிய அந்த இறுகிய கைகள், தடித்த பிரேஸ்லெட், மேல்பட்டன் திறந்துவிட பட்டிருந்த சட்டையின் வழியே தெரிந்த அந்த பட்டை செயின்..

கிராமத்தில் கூட யாரு இப்படி ட்ரஸ் பண்றா...? ஒழுங்கா இருந்த ஒட்டடகுச்சி உலக்கைய பார்த்து உரல்லபோய் முட்டிகிடிச்சிங்கிற மாதிரி... இவன் சினிமா பார்த்து ட்ரஸ் பண்ணிகிட்ட மாதிரில இருக்குது....அப்ப ரொம்பவும் படிக்காதவனோ....? அட்ரஸ் கூட வாசிக்க தெரியாம முழிச்சுகிட்டு இருக்கானே இந்த பஞ்சுமிட்டாய் பண்ணையார்....

இப்படியே எங்க ஊருக்கு வந்தன்னா தெரு நாயெல்லாம் உன் பின்னாலதான்....அந்த காட்சியை மனதில் பார்த்தவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“பாவூர்ல என்ன விஷயம்...?” அவள் கேட்டாள். கன்பார்மா தெரியாம கபடி ஆட கூடாதுல்ல...

அவன் பார்வை அழுத்தமாக பதிகின்றது அவள் மேல்.

கண்ணில் ஒரு மின்னல்.

“கல்யாண விஷயம்.” அவன் இதழ் ஓரத்தில் சின்னதே சின்னதாய் ஒரு சிரிப்பு. “எதுக்கு கேட்கிறீங்க...?”

கன்பார்ம்மா இவன் என் கழுத்துல கத்தி வைக்க வந்தவன்தான்.

“அது...அது...இப்போதைக்கு அங்க போக பஸ் கிடையாது..... போய்ட்டு இன்னைக்கே திரும்பனும்னா  இப்ப போகாதீங்க....”

இவன இங்க இருந்தே துரத்திவிடலன்னா என் ஊர் நாயெல்லாம் பாவம்...

“ஓ!...அப்ப உங்களுக்கு இந்த அட்ரஸ் தெரியுமா....?”

திங்க் பண்ண டைம் கொடுடா சின்ன தம்பி...உன்னை திரும்பி பாராம ஓடவைக்க நான் கியரண்டி...

 “அது...அது....இங்க பக்கத்துல வடபாவூர், தென்பாவூர்னு ரெண்டு ஊரு உண்டு அதுல எதாவது ஒரு ஊரா இருக்கும்... “

“ஓ....அப்ப இப்ப என்னங்க பண்றது....?”

இப்ப நான் நடந்துகிறத பார்த்து, நான்தான் கல்யாண பொண்ணுன்னு தெரிய வரப்ப சொல்லாம கொள்ளாம ஓடிப்போகனும் இந்த பஞ்சுமிட்டாய் பண்ணையார். அப்படி என்ன பண்ணலாம்...? அவசரமா ஐடியா ஒன்னும் வர மாட்டேங்குதே....இவன்பாட்டுக்கு கிளம்பிட்டான்னா......? படு டென்ஷனானாள் கிருபா.

இப்போ நான் இவன போடுற போடுல.....அதுக்கு இவன் கூட கொஞ்சம் டைம் கிடைக்கனுமே........... ஃபாரின்லலாம் டேட்டிங்னு போய்கிட்டே இருப்பாங்க... அதுமாதிரி....பதற்றத்தில் மனதில் கன்னாபின்னாவென ஏதோ தோன்ற

என்னங்க...?” என்ற அவன் அடுத்து அழைத்ததில் ஆட்டமெடிக்காக மனதில் இருந்த வார்த்தை எக்குதப்பாக எகிறி வந்தது

“டேட்டிங்...டேட்டிங் போலாம்...” சொல்லி முடித்தவுடன்தான் தான் என்ன சொல்லி இருக்கிறோம் எனவே புரிந்தது அவளுக்கு. அரண்டாள்.

 “வா.... டங்கு டிங்கா..? அப்படின்னா என்னங்க...? எதாவது சினிமா தியேட்டராங்க....?”

தெய்வமே... இவன்ட்டயா என்னை மாட்டிவிட பார்க்காங்க...

“அது....அது அப்படி இல்ல...நான் பக்கத்துல சாப்பிட போறேன்....நீங்களும் அங்க வந்து சாப்பிட்டுட்டு போங்க....நேரம் போயிடும்...பஸ் வந்துடும்...”

“அப்டீங்களாங்க....சரிங்க...உங்க ஊர்ல சாப்பிட போறத டங்கு டிங்குன்னு சொல்லுவீங்கபோல...”

“அக்கா செல்லப்பா சித்தப்பா நம்ம பாலம்ம கூடதான் டவுணுக்கு போயிருக்காங்களாம்..” சொல்லியபடி வந்தாள் ஜீவா.

“ஐயோ என்னடி இது புது குண்டா இருக்குது...நம்ம அக்காவும் திருநெல்வேலிக்குதான் போயிருக்கா...பாலம்ம கண்ல மாட்னா சட்னி தான் போ... “ புலம்ப ஆரம்பித்தாள் ஆனந்தி.

“அக்கா அது அடுத்த ப்ரச்சனை இப்ப இம்மீடியட்டா இந்த தடியங்கள கவனிக்கனும்....” ஜீவா கடிந்து கொள்ள ஆனந்தி இயல்புக்கு வந்தாள்.

“ராஜசிங் சித்தப்பா, நவமணி சித்தப்பா எல்லோர் வீட்டுக்கும் கூப்டு பார்துட்டேன்...யாரும் வீட்ல இல்ல...எல்லோரும் வெளிவேலைக்கு போயிருக்காங்க...மூனு மணி பஸ் வந்த பிறகுதாங்கா இவங்களல்லாம் எதிர்பார்க்கலாம்...”

“அப்படின்னா இப்ப இவங்கள என்ன பண்றது?”

“ஐயோ பாருடி  ஒருத்தன் எவ்ளவு தைரியமா கேட் ஏறி குதிச்சு உள்ள வாரான்.”

“நாம பார்துகிட்டு இருக்கோம்னு அவங்களுக்கு தெரியலைல அதான் இவ்ளவு தைரியம்.”

“அப்டின்னா...நாம ரெண்டுபேரும் மொட்டை மாடிக்குபோய் அவனுங்க பார்க்க தெருவில போற யாரையாவது கூப்பிடுவோம்...பயந்து ஓடிடுவாங்க...”

இருவரும் மாடி கதவின் ஆட்டமொடிக் லாக்கை உள்லிருந்து திறந்து மொட்டை மாடிக்கு வந்தனர்.

“என்னடி ரோட்ல யாரும் இல்ல...”

“நமக்கு மேல இருந்து பார்க்கிறதால ரோட்ல யாரும் இல்லனு தெரியும்..கீழ மறைஞ்சு இருக்கிற திருடனுக்கு தெரியாது....சும்மா கூப்டுவோம்...நிஜமாவே ஆள் வராங்கன்னு  நினைச்சி பயந்திடுவான்”

“மணி அண்ணா......ராஜு அண்ணா....” இவர்கள் கத்த தொடங்கவும் காற்று எதிர் திசையில் உய்  உய் என சுழன்று வீசவும் சரியாக இருந்தது.

“நம்ம சத்தம் நமக்கே கேட்காது போல..இதுல அவனுக்கு எப்டி கேட்குமாம்....நான் ஃஸ்டோர் ரூம் மாடிக்கு போய் சத்தமா கூப்டுறேன்...அதுக்கு கீழதான அவன் இருக்கான்...அவனுக்கு கேட்கும்னு நினைக்கேன்...”

மொட்டை மாடியிலிருந்து அடுத்த மாடிக்கு தாண்டினாள் ஆனந்தி.

“ம...” அவள் ஆரம்பிக்கும் முன்

அலறினாள் ஜீவனி

ஐயோ....போச்சே எல்லாம் போச்சே....நாம செத்தோம்...!!!!!!”

இந்த சத்தம் ஒளிந்திருந்த ஆனந்துக்கு மட்டுமல்ல....காரிலிருந்த ஜீவா வரை கேட்டது. அருகிலிருந்த ஆனந்தி கேட்டு பயந்து அலறினாள் என்று சொல்ல தேவையில்லை.

“யாராவது காப்பாத்துங்களேன்...எங்களை யாராவது காப்பாத்துங்களேன்...” இது ஆனந்தி.

தன் தங்கை ஜீவனிக்கு எதோ ஆபத்து என்று நினைத்த ஆனந்தி, ஜீவனி நின்று கொண்டிருந்த தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு திரும்ப போக நினைத்தால் இப்பொழுது பலத்த எதிர் காற்று அவளை பலமாக எதிர் திசையில் தள்ள, தன் வீட்டுக்கு போக முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு அற்று போனது. பயத்தில் இப்படி அலறினாள்.

இருவரின் அலறலை கேட்டு அண்ணன் தம்பி இருவரும் ஓடி வந்தனர் உதவிக்கு. இதில் ஜீவா தன் முகத்தை மறைத்து கர்ச்சிஃபில் கட்டி இருந்தான் என்பது குறிப்பிட படவேண்டிய விஷயம்.

வேக வேகமாக ஆனந்தி நின்றிருந்த ஃஸ்டோர் ரூம் மொட்டை மாடிக்கு ஏறினான் ஜீவா. அதற்குதான் படி வெளிப்புறமாக இருந்ததே. பயத்தில் மயங்கி சரிந்தாள் அவள்.

“ஏய்....”அவளைப் பிடித்து அவன் தாங்கி தரையில் படுக்க வைக்க...இதற்குள் ஆனந்த் இவர்கள் இருந்த இடத்திற்கு வந்திருந்தான். கையில் ஒரு தென்னஞ் சிரட்டையில் தண்ணீர்.  வீட்டு தோட்டத்திலிருந்து எடுத்து வந்திருந்தான்.

ஆனந்தியின் முகத்தில் அதை வாங்கி வேகமாக தெளித்த ஜீவா “டேய்...அங்க ஒரு சின்ன வாண்டு கத்திகிட்டு இருக்கு அது என்னனு பாரு என பக்கத்து வீட்டு மாடியை காண்பிக்க”

ஜீவனியை நோக்கி ஆனந்த் மாடி தாண்டி குதித்து ஓடினான். அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த ஜீவனி கத்துவதை நிறுத்தி  இருந்தாள். மனம் ஆனந்தின்  ஹீரோயிசத்தில்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.