(Reading time: 41 - 82 minutes)

னக்கு தெரியாம என் தம்பிங்க ஏற்பாடு செய்த கல்யாணம் இது....”

பாசக்கார தம்பிங்க போல... என் தங்கைங்க மாதிரி.. இது அவள் மனகுரல்.

“கல்யாணத்த நிறுத்த தான் நான் வந்தேன்...அதான் இந்த கெட் அப்...

.இப்போ என் பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் பூமியில கிடையாது....எனக்கு ரெண்டும் தம்பி.... ஃபினான்ஷியலி அவங்க ரெண்டு பேரும் என்னை டிபெண்ட் ஆக வேண்டிய அவசியம் இல்லைனாலும்.....என் மேரேஜ்ங்கிறது அவங்கள பாதிக்குமோன்னு.... புரியுதா....?”

புரியுதாவா...? சேம்பின்ச்

“மேரேஜ் மேல ஒரு பிடிப்பு  இல்லாமலே இருந்தது... அததான் யோசிச்சுட்டே வந்தேன்....

என்னமோ நீ அந்த பையனுக்கு ஹெல்ப் பண்றத பார்த்தப்ப, கடவுளே இவள பாரு இவ உன் வீட்டுக்கு வந்தா எப்படி இருக்கும்னு சொல்ற மாதிரி பட்டுது...நீ வந்தா என் ஃபமிலி பழையபடி ஒரு முழு குடும்பமாகும்னு தோணிச்சு...”

கிரேட் ஜாப்  ஜீசு....கலகிட்டீங்க போங்க...ஹைஃபை

 “ஆனா என்ன .இருந்தாலும் தெருவில பார்க்கிற பொண்ணை எப்படி கல்யாணம் செய்ய முடியும்......?”

ஆங்க்...லைட் லைட்டு  டியூப் லைட்டு...எதுவும் புரியாம இப்படிதான் எக்கு தப்பா முடிவெடுக்கிறதா?

“ஏற்கனவே நிச்சயம் பண்ண பொண்னு வீட்டை கண்டுபிடிச்சு வந்த வேலையை முடிச்சுட்டு கிளம்புவோம்னு தான் உன்ட்ட வந்து அட்ரஸ் கேட்டேன்....ஹெல்பிங் டென்டண்சி இருக்கிறதால ஹெல்ப் பண்னுவன்னு தோணிச்சு...”

என்ன நல்லவன்னு சொல்லிட்ட பஞ்சுமிட்டாய் ....

“ஆனா அட்ரஸைப் பார்த்ததும் உன் முகம் போன போக்கு...பாதி காமிச்சு கொடுத்துதுன்னா......”

ஹி...ஹி..

“”பாவூர்ல என்னவிஷயம்ங்கிற உன் கேள்வி முழுசா காட்டி கொடுத்துட்டு....

எங்கப்பன் குதுருக்குள்ள இல்லன்டனா...

“ஆனால் நீ டேட்டிங் கூப்பிட்ட உடனே தான்....”

“ஐயோ..அது..சும்மா..உங்க.”

“என்னை துரத்த செய்த ப்ளான்னு அப்பவே புரிஞ்சிட்டு...அதனால உனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு புரிஞ்சிது...பேசுனா காரணம் கண்டு பிடிச்சு ...கன்வின்ஸ் பண்ணலாமேன்னு நினைச்சேன்...”

“அது......” காலையில் வீட்டில் நடந்த உரையாடல் ஞாபகம் வந்தது அவளுக்கு.

“அம்மா....ம்மா....ம்மா....ப்ளீஸ்மா.....இந்த ஒரு தடவமா...இதுவரைக்கும் நான் எதாவது இப்டி கேட்டுருக்கனாமா....? பிடிக்கலனாலும் ...இந்த பாலம்ம சொல்றதுக்கெல்லாம் ஆடிகிட்டுதானே இருக்கேன்.....ஒரு ஸ்கூல் டூர் எங்கள அனுப்பி இருபீங்களா?.......காலேஜ்லயும் ஒரு தடவை கூட டூர் போகாத ஒரே ஆள் நான் தான்...இத்தனைக்கும் கேர்ள்ஸ் காலேஜ்... இப்பவும் நான் என்னமா கேட்கேன்...இந்தா இருக்கிற திருநெல்வேலி போய்ட்டு வாரேன்னு தான... ”

கெஞ்சிக்கொண்டிருந்த  தேவகிருபாவின் முகத்தில் இருந்தது அடக்கபட்ட எரிச்சல்.

“நீ சொல்றது புரியுது அம்மு....ஆனால் இப்படி கல்யாணம் நிச்சயமான நேரத்துல.....” யாருக்கும் இவர்கள் பேச்சு கேட்டுவிட கூடாதே என்ற அச்சமும் தவிப்பும் அந்த அன்னையின் குரலிலும் உடல்மொழியிலும். அதோடு மகளின் சிறு ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிராசையும்

“அதான் அததான் சொல்றேன்...இத்தன வருஷமா இந்த பாலம்ம சொன்னதுக்கு ஆடுனது பத்தாதுன்னு...இப்ப அது பாத்துருக்கிற ஒரு பட்டிகாட்டு இல்லிட்ரேட்டுக்கு அடிமை சாசனம் நீட்ட வேற ஒத்துகிட்டு தான இருக்கேன்....”

அடிபட்ட வலியோடு பார்த்தார் அம்மா, தவிப்பு அவரிடம் “ நிஜமாவே மாப்பிள்ள படிக்காதவரா அம்மு...? உனக்கு தெரியுமா..? அப்பா....நீ பிறந்தப்பவே உனக்கு டாக்டர் மாப்ள பார்க்கனும்னு சொன்னார்....”

அம்மாவின் வலியில் மௌனமானாள் கிருபா. இந்த வாயில்லா பூச்சியை தேளாக கொட்டி என்ன பிரயோஜனம்? பாவம் அம்மா. அப்பா இருந்திருந்தால் ...... பெருமூச்சு விட்டாள் பெண்.

ஆனால் அப்படி நிற்கமுடியவில்லை அடுத்தவள் ஆனந்திக்கு. அக்கா வாழ்வை நினைத்து கொதித்தாள். “மாப்பிள்ள பேர பாத்தீங்களா..தங்கையா....இந்தகாலத்துல யார் இப்படி பேர்வைப்பா...? .சுத்த பட்டிகாடு...இது படிச்சவங்க வீட்டு பேராவா உங்களுக்கு தெரியுது...?”

“என்ன அனா....நாம கூடதான் நீ சொல்றமாதிரி பட்டிகாட்ல இருக்கோம்....அதுக்காக நீ படிக்கலையா....? வெறும் பேரவச்சு இப்டி நினைக்கிறது உனக்கே சரியா தெரியுதா..?” சற்று நிம்மதி வந்திருந்தது தாயாரிடம்.

 “உங்க பாலம்ம எதையும் நம்மட்ட சொல்லிகிறது இல்லனாலும்...உள்ள முழுக்க பாசம்...நமக்கு கெடுதலா எதுவும் செய்ய மாட்டாங்கடா..” தாயார் தனக்கும் மகள்களுக்குமாக ஆறுதல் சொல்லிகொண்டார்.

“ஆனா நல்லதுன்னு நினைச்சு ஏமாந்துபோய் நமக்கு கெடுதலா எதாவது செய்து வைக்கலாமில்லியா....? “ ஆனந்தி தொடர

“ அது...........” அம்மா தடுமாறும்போதே கிருபா பேச்சை தன் தேவையின் பக்கம் திசை திருப்பினாள்.

“ எனக்குன்னு ஒரு ஆசை எதிர்பார்ப்பு அப்படில்லாம் இருக்கும்லமா...? ஊம கண்ட கனவும் என் ஆசையும் எப்பவும் ஒன்னு.....நான் பி.ஈ படிக்கபோறேன்னு சொன்னேன்... பாலம்ம நான் என்ன படிக்கபோறேன்னு கேட்க கூட இல்ல...அது பாட்டுக்கு பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரினு முடிச்சுட்டு...சரி...பி.ஜி பண்ணலாமுனு பார்த்தா  பி.எட் ல சேர்த்துட்டு... முடிச்சுட்டு டீச்சரா வேல பார்க்கலாம்னு நினைச்சா...ரிசல்ட் வரதுகுள்ள கல்யாண தேதி...அதுவும் மாப்பிள்ள பேர தவிர எதாவது சொல்லி இருக்கா......? எதோ தங்கையாவாம் ஜெபம் பண்ணிக்கோங்கன்னு சொன்னதோட சரி...”

“அப்படின்னா இன்னொரு பேர் இருக்கும் தான அம்மு?, அது மார்டனா இருக்கபோய்தான் உங்க பாலம்மைக்கு சொல்ல முடியலையா இருக்கும்...” அம்மாவின் நம்பிக்கை

முறைத்தாள் ஆனந்தி. ஆனால் கெஞ்சினாள் கிருபா.

“இப்படி கற்பனை பண்ணிகிட்டு கூட கல்யாணம் செய்ய நான் சரின்னு தான சொல்லி இருக்கேன்...கல்ல கட்டி கிணத்துல குதிக்கிறதுன்னு ஆச்சு..அந்த கல்லு கறுப்பா இருந்தா என்ன சிவப்பா இருந்தா என்னனு....

நம்ம வீட்ல இதுவரை நான் நானா எதையும் செய்ததில்லை...அனுபவிச்சது இல்ல...போற இடம் எப்படியோ....? இன்னைக்கு ஒருநாள் மட்டும்மா..ப்ளீஸ்மா...போய் என் ஃப்ரெண்ட்ஸோட அந்த எக்க்ஷிபிஷன் பார்துட்டு, புக் ஃபேர்ல கொஞ்சம் புக்ஸ் வாங்கிட்டு நேரே வீட்டுக்கு வந்துடுவேன்...ப்ளீஸ்மா”

அதற்கு மேல் மறுக்கமுடியவில்லை அந்த அம்மாவால்.

“அம்மா பீரோல கொஞ்சம் பணம் வச்சிருக்கேன்....எடுத்துட்டு பத்திரமா போய்ட்டு சீக்கிரம் பாலம்ம வாரதுகுள்ள வந்துடு அம்மு..”

“அங்க என்ன அம்மு பொம்முன்னு கொஞ்சல்...நீ கிளம்பு பெரியவளே..” அதட்டினார் பாலம்மை. பெரியவள் என்பது இங்கு கிருபாவின் அம்மா ஜெயசீலி.

ஜெயசீலி கிளம்பி வீட்டைவிட்டு இறங்கியதும் அவரோடு கிளம்பிய பாலம்மை என்றும் இல்லாத வழக்கமாக பெண்களை உள்ளே வைத்து வெளியில் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.