(Reading time: 28 - 55 minutes)

வன் பார்வை முழுவதும் தன் மேல் இருக்க, அவன் எதையோ சொல்ல ஆரம்பிப்பது தெரிந்து, “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை… எனக்கு படிப்பு இன்னும் முடியலை… அதனால என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க…” அவள் படபடவென்று பேசி முடித்திட, அவன், “ஸ்ரீமதிரா… அழகான பேர்… பை த வே… எனக்கும் இந்த கல்யாணத்துல் பெருசா இன்டிரஸ்ட் இல்லன்னு சொல்லதான் வந்தேன்… ஆனா நான் சொல்ல வேண்டியதை நீ சொல்லி கேட்குறப்போ எனக்கே சர்ப்ரைசிங்க்-ஆ இருக்கு…  ஹ்ம்ம்… உன் படிப்பு முடியட்டும்… நல்லா படி… நான் வீட்டுல பேசிக்கிறேன்…” என இலகுவாக சொன்னதும், அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது… “தேங்க்ஸ்…” என்ற அவளிடம், “சொல்லாம இருக்க முடியலை… எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ரொம்ப…” என சொல்லிவிட்டு அவளின் விரிந்த கண்களை ஒருமுறை நின்று ரசித்துவிட்டு ஹாலுக்கு வந்து மதிராவோட படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கிறேன்… என்றவனுக்கு போன் வர, அதை காதுக்கு கொடுத்துக்கொண்டே அங்கிருந்து அகன்றான்…

அதுதான் சமயம் என மற்ற விவரங்களைப் பேசிமுடித்து திருமணத்திற்கு நாளும் குறித்து முடித்த போது அவன் வர, வெற்றிலை, பாக்கு மாத்திக்கொண்டனர் பெரியவர்கள்…

டந்ததை எண்ணிப்பார்த்தவன் அவள் ஏன் தன்னை புறக்கணிக்கிறாள் என்ற வேதனை கொண்டான்… அவள் படிப்பும் முடிந்த நிலையில், ஏன் என்னை வெறுக்கிறாள்… என்னை அவளுக்கு நிஜமாகவே பிடிக்கவில்லையோ?... ஏன் என்னைப் பார்த்ததும் முகம் திருப்பிக்கொள்கிறாள்?... அவளின் பிரச்சினை தான் என்ன?... என யோசித்து யோசித்து குழம்பியவனுக்கு, இதுதான் காரணமாக இருக்கும் என்ற முடிவுக்கே வரமுடியவில்லை… சரி அவளிடமே கேட்கலாம் என எண்ணி அவளுக்கு போன் செய்தான்… அவள் எடுக்காமல் கட் செய்தாள்… “நான் உன்னிடம் பேச வேண்டும்… ப்ளீஸ்… போன் எடு…” என அவன் குறுந்தகவல் அனுப்ப, அவள் அதையும் கண்டு கொள்ளவில்லை… வேறு வழியில்லாமல் வீட்டிற்கே அழைத்தான்… அதை அவளின் அன்னை எடுக்க, மதிராவிடம், அவள் படிப்பு சம்பந்தமாக பேச வேண்டும் என கூற, அவருக்கு புரிந்தது… நமுட்டு சிரிப்புடன், அவளைத் தேடி சென்றவர் விஷயத்தை சொல்ல, அவள் பிடிவாதம் பிடித்தாள் பேச மாட்டேன் என, அவளை அதட்டி போனை கையில் கொடுத்துவிட்டு அவர் சென்றதும்,

“இப்போ எதுக்கு எங்கிட்ட பேச முயற்சி செய்யுறீங்க?... எனக்கு உங்ககிட்ட பேச எதுவும் இல்லை… போனை வைங்க…” என அவள் திட்டியதும், “ஒரே ஒரு நிமிஷம்… நான் சொல்லுறதைக் கேளு… ப்ளீஸ்…” என அவன் குரல் தாழ்ந்ததும், அவள் அமைதியாக இருந்தாள்… அதை பயன்படுத்திக்கொண்டு, “வீட்டுக்கு வந்துட்டு உங்கிட்ட பேசாம போயிட்டேன்னு என் மேல உனக்கு கோபமா?...” என அவன் கேட்க, “உங்க மேல நான் எதுக்கு கோபப்படணும்?... அதான் இப்பவே நான் என்ன செய்யுறேன் பண்ணுறேன்னு பாலோ பண்ணிட்டு தான இருக்குறீங்க அப்புறம் எப்படி எனக்கு கோபம் வரும்… ரொம்ப குளுகுளுன்னு தான் இருக்கு…”

“ஹேய்… இல்லடா… நான் நிஜமா புடவை கொடுக்கத்தான் வந்தேன்… அப்போ என் முன்னாடி நீ இருந்ததும் நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா?...” என அவனும் மென்மையாக சொல்ல, அவளுக்கு பகீர் என்றிருந்தது…

“அடப்பாவி… பைக்கில் என்னை வேறொருவருடன் பார்த்து கோபித்துக்கொண்டு தான் என்னை தேடி வீட்டிற்கே வந்து பேச முயற்சி செய்தாய் என நினைத்தேன்… அதற்கு முடியாமல் போகவே, இப்போது போனில் அதைப் பற்றி கேட்டு சண்டை போட்டு கல்யாணத்தை நிறுத்தி விடுவாய் என நான் கனவில் மிதந்து கொண்டு இருக்கும்போது, இப்படி ஒரு குண்டை தூக்கி என் மேலே போட்டுவிட்டாயே… பாவி…” என சரமாரியாக மனதிற்குள் அர்ச்சனை செய்தவளுக்கு, இவன் தேரமாட்டான்… என தோன்றிவிட,

“இங்க பாருங்க மிஸ்டர்… இன்னைக்கு பார்த்தீங்களே ஒருத்தர், அவரை தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்… தேவை இல்லாம இனியாச்சும் என்னை தொந்தரவு பண்ணாம உங்க ஸ்டேடஸ்-க்கு தகுந்த பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க…” என்றவள் பட்டென ரிசீவரை வைத்ததும், அவனுக்கு அவள் ஏன் ஸ்டேட்டஸை இழுக்கிறாள் என புரியாது போனது… அதைப் பார்த்து நான் அவளை பிடித்திருக்கிறது என்று சொல்லவில்லையே… அதும் இல்லாமல் அவளுடன் பைக்கில் இருந்தவன், என யோசித்தவனுக்கு சற்றே மின்னல் வெட்ட, ஓஹோ… அப்படி போகுதா கதை… அய்யோ மதிரா… இப்படி குழந்தைத்தனமா இருக்குறியேடீ… என சிரித்துக்கொண்டான் அவன்…

அதே நேரம் அவள், “சே…. இவன் அங்க வருவான்னு தெரிஞ்சு தான நான் பரிதியோட பைக்கில் போனேன்… இந்த லூசு என்னடான்னா நம்ம ப்ளானை கவுத்துட்டு… எல்லாம் இந்த பரிதி குரங்கை சொல்லணும்… ஒழுங்கா பெர்மார்மன்ஸ் பண்ணியிருந்தா கண்டிப்பா அவன் நம்பியிருப்பான்… டேய்… பரிதி… உன்னை…” என்றவள் பரிதியான அவளது அத்தை பையனுக்கு போன் செய்து திட்டி தீர்க்க, “நீ தான் எருமை ஒழுங்கா பெர்மார்மன்ஸ் பண்ணலை… போனா போகுது மாமா பொண்ணாச்சேன்னு ஹெல்ப் பண்ண வந்தேன் பார்த்தீயா… என்னை சொல்லணும்…” என அவனும் அவளை திட்ட, ஒருவழியாய் இருவரும் சமாதானம் அடைந்தனர் சில மணி நேரங்களுக்குப் பிறகு…

சகஜமாக பேச ஆரம்பித்ததும், பரிதி மதிராவிடம், “எனக்கு அவர் நல்லவரா தான் தெரியுறார்… உன் படிப்பு முடியற வரைக்கும் வெயிட் பண்ணினார்… அப்படி இருக்கும்போது உனக்கு என்ன பிரச்சினை மதி அவரை கல்யாணம் பண்ணிக்குறதுல… ஆளும் சூப்பரா இருக்குறார்… நல்ல பிசினெஸ், ஃபேமிலி… எல்லாத்தையும் விட உன்னையும் ரொம்பவே அவருக்கு பிடிச்சிருக்கு… அப்புறம் ஏன் இந்த கல்யாணம் நடக்கக்கூடாதுன்னு நினைக்குற…” என்ற அவனின் கேள்விக்கு, “எங்கிட்ட எதையும் கேட்காத விடு…” என்றபடி போனை வைத்தாள் மதி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.