(Reading time: 28 - 55 minutes)

பார்ட்டியில் அனைவரின் பார்வையும் அவர்கள் இருவரின் மீதே இருக்க, அவள் கொஞ்சம் தடுமாறினாள்… அந்நேரம் அவனின் அருகில் இருந்த சிலர் அவனை அழைத்துக்கொண்டு செல்ல, அவள் அங்கு யாரையும் தெரியாமல் விழித்தாள்… ஆனால் அவளிடம் வந்து தன்மையாக பேசியவர்கள் அனைவரும் சொன்ன வார்த்தைகள் சில தான்… அது ஆரத்விரேன் என்ற மனிதன் எப்படி தன் உழைப்பால் இந்த பெயர் புகழை சம்பாதித்தான், அப்படி சம்பாதிக்க அவனின் நல்ல குணமே காரணம் என்பதையும் தான்… சிறிது நேரத்தில் சிரித்து பேசியவர்களும் சென்றுவிட, அங்கு தனிமையாக உணர்ந்தாள் அவள்…

சில ஆண்கள் அவளையேப் பார்க்க, அவளுக்கு சற்றே பயம் எழுந்தது… அந்நேரம் அவனைத் தேடி தானாகவே அலைந்தது அவள் விழிகள்… அவளை அதற்கும் மேல் தவிக்கவிடாது அவன் அவள் பார்வை வட்டத்திற்குள் வர, அவள் ஆசுவாசம் பெற்றாள்… அதனைக் கண்டவன் அவளருகில் நெருங்கி வர, “எங்க போய் தொலைஞ்சீங்க?... என்னை இங்க கூட்டிட்டு வந்த நியாபகம் இருக்கா இல்லையா?... நான் தனியா எவ்வளவு நேரம் தான் இங்க இருக்குறது யாரையுமே தெரியாத இந்த இடத்துல…” என அவள் கோபமாய் கூற, அவள் விழிகளோ, அவனிடம் “ஏன் என்னை விட்டு அகன்றாய்?... நான் தவித்துப்போனேன் தெரியுமா?...” என உண்மையைக் கூற, அவனுக்கோ அவள் விழிகளின் கோபம் பிடித்திருந்தது மிக… அதை நினைத்து அவன் சிரிக்க, “என்ன சிரிப்பு வேண்டி இருக்கு?... நான் போனதும், அவ தனியா இருப்பா, என்னைப் பத்தி ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து நல்ல விதமா சொன்னீங்கன்னா அவ எங்கிட்ட விழுந்துடுவான்னு திட்டம் எல்லாம் போட்டு அதை செயல்படுத்தின வரை சரிதான்… ஆனா ரிசல்ட் தான் உங்களுக்கு ஃபேவரா இல்லை… அய்யோ பாவம்…” என்றபடி அவனைத்தாண்டி காரை நோக்கி சென்றவளுக்கு அவனின் தொழில் வட்டார ஆட்களிடம் தெரிந்த அந்த அலட்டல், எதுவுமே அவனிடம் இதுவரை தான் கண்டிராததையும் உணர்ந்தாள் வெகுவாகவே…

றுநாள் அவள் வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றான் அவன்… அவளுக்கு அந்த செயல் வியப்பை தந்த போதிலும் அவள் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை… ஆனால் அவன் அதை அவள் விழிகளின் மூலமே உணர்ந்து கொண்டான்… அவனும் அது தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை… மகளை விட மருமகனை விழுந்து விழுந்து இருவரும் நலம் விசாரிப்பதும், கவனிப்பதுமாய் இருக்க, அவளுக்கு கோபம் தலைக்கேறியது… “சே… மாப்பிள்ளை எவ்வளவு கெட்டவனா இருந்தாலும், அவனை தலைமேல தூக்கி வச்சு கொண்டாடிட்டே இருக்குறது… பின்ன அவங்க எப்படி திருந்துவாங்க… உங்களுக்காக அவன்கிட்ட நான் சண்டை போட்டுட்டு இருக்கேன் நிதமும்… நீங்க இரண்டு பேரும் அவனைக் கொஞ்சிகிட்டு இருக்கீங்களா?...” என தன் அம்மாவையும், அப்பாவையும் பார்த்து முகமெங்கும் கோபச்சாயம் அவள் பூசிக்கொள்ள,

அந்நேரம் அவள் மனமோ, “உன்னை அவர்களா சண்டை போட சொன்னார்கள்?... இல்லை உன்னை கொஞ்ச வேண்டாம் என்று தான் சொன்னார்களா?...” என பதில் கேள்வி கேட்க, அவள், “சீ… இந்த பாழாய்ப் போன மனதிற்கு என்ன ஆனது?... எனக்குள் இருந்து கொண்டு நீ அவனுக்கு ஆதரவாய் பேசுகிறாயா?... இனி ஒரு வார்த்தை சொன்னால் உன்னை கொன்றுவிட்டு தான் மறுவேலை எனக்கு….” என அவள் உணர்ச்சிகளை பிரதிபலிக்க, அவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் விழியெடுக்காமல் தனக்குள் சேமித்தான் விரேன்…

வாரக்கடைசியில் அவளை ஷாப்பிங்க் அழைத்து சென்ற போது, அங்கே தன்னுடன் படித்த தோழி கவிதாவைப் பார்த்துவிட்டு, மதிராவையும் அந்த பெண்ணிற்கு அறிமுகப்படுத்தி வைக்க, அந்த பெண்ணும் அவளுக்கு ஹாய் சொல்லிவிட்டு அவனது காதருகில் குனிந்து எதையோ சொல்ல, அதற்கு அவனும் அவளைப் பார்த்துவிட்டு அழகாய் சிரிக்க, மதிராவோ, “நீங்க பேசிட்டிருங்க… நான் அந்த கடைக்குப்போகணும்…” என விருட்டென்று சென்றுவிட்டாள்…

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த பெண் வீட்டிற்கே அவனைத் தேடி கையில் பூங்கொத்துடன் வர, அவனும் உற்சாகமாக வரவேற்றான் அவளை… யாருடன் பேசிக்கொண்டிருக்கிறான் என எட்டிப் பார்த்த மதிரா,

“மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே விரேன்…” என கவிதா விரேனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல, முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே சென்று விட்டாள்… அவன் எவ்வளவோ அழைத்தும், அவள் வெளியே எட்டிக்கூட பார்க்கவில்லை… சரி என்று அவனே காபி போட்டு வந்தவளுக்கு கொடுத்து விட்டு, பேசிக்கொண்டிருக்கையில், வந்தவள் போய்விட்டாளா என மெதுவாக எட்டிப்பார்த்த போது, நைட் என் பர்த்டேக்கு முழிச்சிருந்து விஷ் பண்ணினா… அதான் அசதியில தூங்குறா… நீ தப்பா எடுத்துக்காத கவிதா… என அவன் சொல்வது மதிராவின் காதுகளில் தெளிவாக விழ, தன்னைப் பெயரளவுக்கு கூட இவன் விட்டுக்கொடுத்திட மாட்டானா?... என ஒரு எண்ணம் தோன்ற அப்படியே அதை காற்றில் பறக்க விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்த்தாள்…

கவிதாவை அனுப்பிவிட்டு மதிராவிடம் வந்தவன், அவளையேப் பார்த்தவண்ணம் கை கட்டி நிற்க, அவள் என்ன?.. என திமிராய் பார்க்க, “இன்னைக்கு என் பர்த்டே… ஒரு சின்ன விஷ்… உன் வாயால கேட்கணும்னு ஆசையா இருக்கு மதிரா… செய்வியா?.. ப்ளீஸ்… என ஏக்கத்துடன் அவன் கேட்க, அவள் விழிகள் அவனின் ஏக்கம் கொண்ட வார்த்தையை உள்வாங்கி உள்ளம் ஒரு நிமிடம் என்றாலும் உருகியதை பிரதிபலிக்க, அவன் விழிகள் அதற்காகவே காத்திருந்தது போல் தனக்குள் ஏற்றுக்கொள்ள, அவள் மௌனமாக எதையும் சொல்லாது அங்கிருந்து அகன்ற போது, மெல்ல அவளின் கைப்பிடித்து தடுத்தான் விரேன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.