(Reading time: 17 - 34 minutes)

திலகவதி (சாயாவின் சித்தி) அவளை தேற்ற முயற்சித்தார் என்றாலும், இனி அவளை எந்த அளவுக்குத் தான் பாதுகாக்க முடியும் என்று அவரும் கவலைப்பட்டார்.  இதனைக் கண்டு, இன்னும் என்னென்ன நடக்குமோ என்று நினைத்து சாயாவிடம் இருந்த கொஞ்ச தைரியமும் அவளை விட்டுச் சென்றது நிஜம்.  ஆனால் இங்கோ, இவன் வார்த்தைகளால் அன்றி, தன் செய்கைகளால் அவளுக்கு உணர்த்தினான், “இதனை நீ மேலும் பலமாக ஒரு வாய்ப்பாக எண்ணி எழுந்து வா.  உனக்கு அனைத்து வகையிலும் உதவ நான் தயார்” என்று.

தனக்காக இல்லையென்றாலும், கதிருக்காக, அவன் இவள் மீது வைத்திருக்கும் காதலுக்காக, தன்னை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தாள் சாயா.  அவளது கதிர் அவன் எனக் கண்டுகொண்டாள் அவள்.  கதிரின் காதலியாக, மனைவியாக, தோழியாக சாயாவும், அவளது உயிரென கதிரவனும் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தினைந்து வருடங்களுக்குப் பின்பு,

சாயா தங்களது அறையில் வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.

“தியாவும் தீபாவும் வெளியே இருக்கிறார்கள்.  நாம் கிளம்பலாமா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் கதிர்.  இருவருக்கும் இரு பெண்கள் – பதினான்கு வயது தீபா, மற்றும் பத்து வயது தியா.  இப்போது இவர்கள் செல்வது சாயாவிற்கு விருது வழங்கும் விழாவிற்கு. 

சாயா பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவள்.  அவளது முயற்சியால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பல பெண்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.  இருவரது பெண்களும் தற்காப்புக் கலை போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்றவர்கள்.  மூவருக்கும் உறுதுணையாக இருந்து ஊக்குவித்தது, கதிரவன்.

வாழ்விலும் காதலிலும் கண்ட முதிர்ச்சி அவர்கள் இருவரது முகத்திலும் தெரிந்தது.  முதல் நாள் கண்டபோது ஏற்பட்ட அதே காதல் இப்போதும் ஏற்பட்டது.  அதே நேசத்துடன் சாயாவை நோக்கி வந்து பின்னிருந்து அணைத்து அவள் கூந்தலில் குடியேறியிருந்த மல்லியை வாசம் பிடித்தான்.  சாயா கணவனின் செய்கை பார்த்து சிரித்துக்கொண்டாள்.  அவனது இதழ்கள் மனைவிக்குப் பிடித்ததும், தனக்குப் பிடித்ததாய் மாறிவிட்டதுமான அந்த பாடல் வரிகளை முனுமுனுத்தன.

“உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே

இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே

கனவை உன் விழிகளில் பார்த்திருப்பேன் தினமே

மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்…. விழுந்தாய்

ஒரு விதையென நான் எழுந்தேன்” என பாடிக்கொண்டே அவனது இதழ்கள் அவள் இதழ்களில் கதையெழுத ஆயத்தமாக, அவளை தன்னை நோக்கி திருப்பினான்.  

இதற்குமேல் அங்கு நில்லாமல் நாம் அவர்களின் அன்பு நாளும் வளர வேண்டி விடைபெறுவோம்.

 

This is entry #05 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - லேகா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.