(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”ரொம்ப அருமையா சமைச்சிருக்கம்மா நல்லாயிருக்கு” என பாராட்டிவிட்டு அடுத்து வந்தனாவை அழைத்தார்.

   

அவளோ காலையிலயே கடையில் வாங்கி வந்த கோதுமை மாவை வைத்து பூரி உருளைக்கிழங்கு மட்டும் செய்திருந்தாள். 

   

”சிம்ப்ளா செய்திருக்க ஆனா மாவு கொஞ்சம் இளகின மாதிரியிருக்கு கம்பெனி ஐட்டம் வாங்காததால மாவு கொஞ்சம் சரியில்லைம்மா” என சொல்லவும் வந்தனாவின் முகம் வாடிவிட்டது அதைப்பற்றி கவலைப்படாமல் சாப்பிட்டு முடித்த தாத்தா அடுத்து மிருதுளாவை அழைத்தார்

   

அவளும் தான் செய்த பிஷ் கிரேவியும் அதற்கு கடையில வாங்கிய தோசை மாவு கொண்டு ஊற்றிய  தோசையையும் பரிமாறினாள்.

   

இரண்டையும் சாப்பிட்டவர்

   

”முதல் நாள் நீ செய்தது போலதான் இருக்கு நல்லாயிருக்கும்மா நான் சொன்னதுக்காக நீ மசால் கொஞ்சம் குறைச்சிருக்க இது போதும் அருமையா இருக்கு டிபன்” என சொல்லவும் அவளும் மற்றவர்களுக்கு பரிமாறிவிட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.

   

அடுத்து நந்தினி அவசரமாக வெறும் உப்புமாவும் சட்னியையும் செய்திருந்தாள். உப்புமா என்றாலும் நல்ல தரமானதாக இருந்தது மிதமான நெய்யில் வறுத்த முந்திரிகளை அலங்காரமாக தூவியிருந்தாள். அம்மியில் அரைத்த சட்னிக்கும் அவள் நெய்யில் கடுகு கருவேப்பிலை தாளித்து கொட்டியிருந்தாள். சாப்பிடுவதற்கு முன்பே அந்த வாசனை அருமையாக இருக்கவே தாத்தாவும் மற்றவர்களும் விரும்பி சாப்பிட்டு அவளை மனமார பாராட்டினார்கள்.

   

அனைவரும் சாப்பிட்டு முடித்து எழுந்த கையோட நந்தினி தான் வாங்கிய மளிகை சாமான்களை எடுத்து அடுக்குவதைப்பார்த்த சோனா, வந்தனா, மிருதுளா அவளிடம் இந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.