(Reading time: 20 - 40 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

வந்ததில் இருந்து என்னென்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் வரிசையாகச் சொன்னாள்

   

”அண்ணா இந்தாங்கண்ணா பீரோ சாவி நீங்க இல்லாத நேரம் புது முதலாளி சொன்ன பேச்சைக் கேட்டு அந்த செல்லப்பா பீரோவை திறந்து ஆராய்ச்சி பண்ணான், அந்தாளை விரட்டிட்டு பீரோவை பூட்டி சாவியை நானே வைச்சிக்கிட்டேன் அண்ணா”

   

”ஐயோ சாரிம்மா மீட்டிங் போற அவசரத்துல கவனிக்கலை”

   

”ஆனா அந்த செல்லப்பா எதையோ தேடினாரு அண்ணா, எனக்கென்னவோ அந்த டென்டர் ஃபைலா இருக்குமோ”

   

”இருக்கலாம் ஆனா அதை நான் வீட்ல வைச்சிருக்கேன், அதனால பிரச்சனையில்லை சரி டென்டர் விசயம் என்னாச்சி க்ளப்புக்கு போனியே யாராவது அதைப்பத்தி பேசினாங்களா“

   

”ஓ நிறையவே பேசினாங்க அதுக்காகவே அது சம்பந்தப்பட்ட ஆளுங்களோட நான் சீட்டாட்டம் விளையாடினேன், விளையாடிக்கிட்டே அந்த டென்டர் பத்தி ஏதோ சொல்ல அவங்களும் விளையாட்டு ஆர்வத்தில உளறி வைச்சாங்க”

   

”அப்படியா என்னம்மா சொன்னாங்க“

   

”நாம நினைச்சது தப்புண்ணா, அவங்க திட்டமே வேற, இந்த டென்டர் எல்லாம் வெறும் கண்துடைப்புதான்“ 

   

”எதுக்காக அப்படி செய்யனும்“

   

”எந்த கம்பெனியில செல்வாக்கு அதிகம் இருக்குன்னு தெரிஞ்சிக்கவாம், முன்னகூட இப்படிதான் பொய்யான டென்டர் விசயத்தை பரப்பி அதை வைச்சே சில கம்பெனிகள் ரொம்ப வசதியா இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு வேணுமுன்னே அந்த கம்பெனியை அழிக்க இன்கம்டாக்ஸ் ரெய்டு விட்டாங்களாம்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.