(Reading time: 31 - 62 minutes)

 

குவின் ஆபீஸ்...

" ஜானகி அந்த டெண்டர்  டிடைல்ஸ் எல்லாம் கொஞ்சம் ப்ரிண்ட் அவுட் கொடுத்திடுறியா? மிஸ்டர் கௌஷிக் கால் பண்ணாரா ? இன்னும் 1 வீக்ல இங்க வந்துடுவாங்க .. அதுக்குள்ள எல்லாம் ரெடி பண்ணனும் " என்றவனின் பேச்சை கேட்ட ஜானகிக்கு ஆயாசமாக இருந்தது ...

ரகுராம்  விளையாட்டுத்தனமானவன் என்று ஒரேடியாக சொல்ல முடியாவிடும் நிச்சயம் அவன்  கறார் பேர்வழி அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே .. எனினும் வேலைப்பளுவில் ரகுராமிற்கு இன்னொரு முகம் இருப்பதையே ஆபீசில் தான் அறிந்து கொண்டாள் ஜானகி.. இந்த மூன்று வாரக்காலத்தில் சுஜாதாவும் பணியை நிறுத்திவிட்டு சென்றுவிட, முழு பொறுப்பும் ஜானகியிடம் வந்தது . அவன் பணிக்கும் வேலைகளை செய்வதில் அவளுக்கு கஷ்டம் இல்லைதான். எனினும் சில முக்கியமான நேரங்களில் அவன் கடுமையாக முகத்தை வைத்துகொண்டு வேலை பார்ப்பது ஜானகிக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது . எனினும் அவளிடம் அவன் தன்மையாகவே இருந்தான் .. எவ்வளவு வேலை இருந்தாலும் அவள் சாப்பிட்டாளா? அவளுக்கு ஓய்வு தேவையா ? என்பதை கவனிப்பத்தில் அவன் தவறுவதே இல்லை... எனக்காக இத்தனை செய்பவன் தன்னை கவனித்து கொள்கிறானா ?  என்று எண்ணியவள் அவன் முகத்தையே யோசனையுடன் பார்த்தாள்.

மடிகணினியில் பார்வையை பதித்தவன், ஏதோ ஒரு உந்துதலில் ஜானகியின் பக்கம் திரும்பினான். வழக்கம் போல அவளின் பார்வையில்  முகம் கனிந்தவன் ஏதோ நினைவில்

" என்னடா ? " என்றான் காதலுடன்.

ஏனோ அவனின் குரலும் அதில் நிறைபிய காதலும் அவள் மனதை வருடியது. " ச்ச என்ன இது ? " என்று தன்னை  தானே ஜானகி கேட்டுக்கொள்ள ரகுராமும் அப்போதுதான் தன் பேச்சின் பாணியை உணர்ந்தான் .. உடனே இயல்பாய்,

" சொல்லு ஜானு ஏதும் டவுட்டா? " என்றான்.

" ம்ம்ம்ம் ஆமா "

" என்னது ? "

" நீங்க சாப்பிடிங்களா ? "

" ... "

" சொல்லுங்க ரகு சாப்பிட்டிங்களா ? "

" இப்போதானே மணி 11 ஜானகி .. இன்னும் 1 அவர்ல லஞ்ச் சாப்பிட்டுக்கலாம்... இதுதான் உன் டவுட்டா ? " என்று புன்னகைத்தான்.

" என்ன பழக்கம் ரகு இது ? நானும் பார்த்துட்டுதான் இருக்கேன் .. இந்த ஒரு வாரமா ஏன் இப்படி உங்க மேல அக்கறையே இல்லாமல் இருக்கீங்க? " என்று கேட்டவளை,  பார்த்தவன்,

" அதான் நீ இருக்கியே சகி " என்று மனதிற்குள் சொல்லிகொண்டான் ... அவன் பேசியது அவளை எட்டியதோ என்னவோ,

" யாரும் கேக்கலேன்னு நினைக்க வேணாம் ரகு நான் கேட்பேன் .. இனிமேல் காலையிலயும் நாம இங்கயே சாப்பிடலாம் .. அப்பவாச்சும் எனக்காக நீங்க சாப்பிடுவிங்க .. என் மேல வைக்கிற அக்கறையை உங்க மேல வைக்கலாம்ல ரகு ? அதுவும் எனக்கு உங்க முகம் இவ்வளோ சீரியசா இருக்குறதை பார்க்கவே முடில "

மனதிற்குள் அவள் பேச்சு இதமாக இருக்க " ஏன் என் முகம் அவ்வளோ மோசமா இருக்கா? " என்று நகைத்தான்.

" சிரிப்பே வரல ரகு.. இது ஜோக்கா ?? " என்றாள்....

" எம்மா .... எப்படி கோபம் வருது உனக்கு ? இது எனக்கு பழகிடுச்சு ஜானு .. சின்ன வயசுல இருந்தே, ஏதும் போட்டி இல்ல எக்ஸாம் நா , நான் உடனே சிரியஸ் ஆகிடுவேன் .. அதை வெற்றிகரமா முடிச்சாதான் எனக்கு நிம்மதியா இயல்பா இருக்க முடியும் .. சில விஷயங்கள் எனக்குன்னு நான் முடிவு பண்ணிட்டா  அதை கிடைக்கிறவரை என்னை வருத்தியாச்சும் நடத்திடுவேன் ...பட் அதே நேரம் நியாயமான ரீசனுக்கு விட்டுகொடுத்திடுவேன் "

அவன் எதார்த்தமாக சொன்னது கூட அவளுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது ... அதனால் தான் அன்று தன்னை ராமிர்காக  விட்டு கொடுத்தானா ? அப்படின்னா இப்போ நான் கிடைக்கலன்னா தன்னை தானே வருத்திக்குவானா ? ஏனோ அவளுக்கு அவனை அந்த நிலையில் கற்பனை செய்து பார்க்கவே இயலவில்லை ( தனக்கு ஏன் இப்படி ஒரு இயலாமை என்பதையும் அவள் யோசிக்கவில்லை..ஒருவேளை  யோசித்திருந்தால் வருங்காலம் இனிய காலமாய் இருந்திருக்குமோ ? )

" ஹ்ம்ம் இந்த காரணத்தை எல்லாம்  என்னால ஏற்றுக்க முடில ரகு.. அட்லீஸ்ட் என்னோடு இருக்கும்போதாவது இயல்பாக இருங்களேன் " என்றவளின் குரலில் தன்னையும் அறியாமல் ஒரு இறைஞ்சல் இருந்தது .. அதை கண்டுகொண்ட ரகுராமிற்கு தன்னவளின் மனதில் இடம்  பிடிக்கும் காலம் வெகு தூரம் இல்லை என்றே தோன்றியது ? ( ஆனால் விதி ?? )

மீரா, கிருஷ்ணா, ரகுராம் மூவரும் தங்களது ஆபீசிற்கு சென்று விட, சுபத்ராவும் இல்லாததால் தனியாய் அமர்ந்திருந்தாள் நித்யா .. ஏனோ அன்று அவளது மனம் சோர்வாகவே இருந்தது. அருகில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவள் எங்கோ வெறித்து கொண்டு அமைதியாய் இருந்தாள்.

" ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் " என்று அழகாய் சிணுங்கியது அவளின் செல்போன். ஒரு பெரு மூச்சை வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டவள் தனக்கே உரிய குறும்பு தனமான  குரலில்  பேச ஆரம்பித்தாள்.

" புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே  நல்ல யோகமடா "

" ஹேய் வாலு ...நான் மாப்பிளை என்பது கூட உனக்கு ஞாபகம் இருக்காடி ? " என்றவன் அவளின் தமையன் ஆகாஷ்.

" ஏன் இல்லன்னு சொன்னா  கல்யாணம் பண்ணிக்க மாட்டியாடா ? "

" ப்ச்ச் நீ எப்போ இங்க வரப்போற ? "

" ஹ்ம்ம் என்னடா திடீர்னு ? "

" உனக்கு தெரியாதா ? "

" ஆகாஷ் ? "

" ம்ம்ம் "

" என்னை மிஸ் பண்ணுறியாடா ? "

" இல்லாம எப்படி போவேன் நித்து .... என்னதான் நீயும் நானும் சண்டை போட்டுகிட்டே இருந்தாலும் நீ இல்லாமல் நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு தெரியும்தானே ? என் மேல என்ன கோபம் உனக்கு ? "

ஆகாஷ்  மீது அவளுக்கென்ன கோபம் ? அவள் சென்னை வந்ததற்கு இன்னொரு காரணம் " அவன் " அல்லவா? " அவனை " அங்கு பார்த்ததால் தானே , பழைய நினைவுகளில் இருந்து ஓடி வந்தாள் நித்யா .. என் முகத்திலேயே விழிக்காதே என்றவனை தூரத்தில் இருந்து பார்த்ததுக்கே எப்படி மருகினாள் இவள் ... இதை எப்படி தன் தமையனிடம் சொல்வாள்.... வழக்கம் போல தன் குரும்புத்தனத்தையே ஆயுதமாக்கினாள்..

" டேய் மக்கு ...இன்னும் ரெண்டு வாரத்தில் கல்யாணம் ஆகா போகுது உனக்கு ... லவ் பண்ணோமா, ஊரை சுத்தி டூயட் பாடுநோமான்னு இல்லாமல் இப்போதான் எல் கே ஜி  பையன் மாதிரி தங்கச்சி வேணும் ஆட்டுக்குட்டி வேணும்னு சீன் போடுறே ? சரி அழுது வாடியதே .. ஊட்டியில வெள்ளம் வந்திட போகுது .. நான் கண்டிப்பா இன்னும் 3 நாளில் வந்து தரிசனம்  தர்றேன் சரியா ? "

" ம்ம்ம்ம்ம் ...சரி நீ என்ன பண்ணிட்டு இருக்கே? "

" கிருஷ்ணா அண்ணாவுக்கும் மீராவுக்கும் பாலம்

 போட்டாச்சே இனி வானத்துக்கும் பூமிக்கும் பாலம் போடலாமான்னு பார்க்குறேன் "

"அதுக்கு பதிலா நீ கொஞ்சம் சுப்ரியாவை கவனிக்கலாம் ல "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.