(Reading time: 31 - 62 minutes)

 

" பாடுங்க அர்ஜுன் என் செல்லம்ல ... " என்று கொஞ்சினாள் சுபத்ரா..

கடலாக நீயும் மாறினால்

அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்

நெருப்பாக நீயும்  மாறினால்

அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்

அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை பரிசாக கேட்கிறேன்

உன்னை சேரத்தானே

யுகம்தோறும் மண்ணில்  அவதாரம் ஆகிறேன்

அடி பொய்யென்ற போதும் உன்னோடு பேசும்

கனவுகள் வேண்டுகிறேன்

உனக்கென உனக்கென பிறந்தேனே

உயிரென உணர்வேன கலந்தேனே

இதயத்தை இதயத்தை இழந்தேனே

இமைகளில் கனவுகள் சுமந்தேனே

" அர்ஜுன் "

" ஐ லவ் யு சுபி "

" நானும்தான் "

" எப்போடி ஐ லவ் யு டூ  நு சொல்லுவே "

" சொல்லும்போது சொல்லுவேன் "

" சி போடி

"  சி போடா " என்று  சிரித்தபடி போனை வைத்தாள் சுபத்ரா ...

போனை வைத்த அர்ஜுனனுக்கு சொல்ல முடியாத ஏதோ அழுத்தமான உணர்வு ... அவள் டூர் போவது அவனுக்கு ஏனோ நெருடலாகவே இருந்தது .. அதனாலேயே தானும் செல்லலாம் என்று திட்டமிட்டவன் இண்டர்காமில் தன் பி ஏ வை அழைத்தான் ..

" தர்ஷினி "

" எஸ் சார் "

" நெக்ஸ்ட் வீக் புதன் கிழமைல இருந்து ஒரு வாரம் நான் இங்க இருக்க மாட்டேன் ... டூர் போக போறேன் .. சோ மீட்டிங் எதுவும் அர்ரெஞ் பண்ணாதிங்க "

" பட் சார் புதன் கிழமை, மகேந்திரன் குரூப் ஒப் கம்பனி கு நீங்க போயாகணுமே .. மீட்டிங்  கேன்சல் பண்ண முடியாது " என்று தயங்கியபடி சொன்னாள் தரிஷினி ...

" சரி நான் அப்பறம் கூப்டுறேன் " என்று போனை வைத்தவன்,  இரு கரங்களால் தன் கேசத்தை அழுந்த கோதி சிந்தித்தான்... என்னதான் மதியை பயன்படுத்தினாலும் சில நேரம் விதி வலியதுதானோ ????

ஊட்டி,

அந்த அழகான தோட்டத்தில் கூண்டுக்குள் தன் துணையுடன் இருந்த முயல்குட்டிகளை ஏக்கமாய் பார்த்தாள் சுப்ரியா.... சில நேரங்களில் விலங்கினத்திற்கு தனது ஜோடியோடு  இருக்கும் அனுமதி கூட மனஷனுக்கு இல்லையோ ? அவளின் காதல் மனம் கசந்தது ... அந்த முயல்கள் அவளின் தந்தை  பிரபாகரனின் பரிசு ..

" மகள் என்ன கேட்டாலும் வாங்கி தந்துடுவிங்களா ? ஒரு நாள் உங்களால கொடுக்க முடியாததை கேட்க போற பாருங்க " என்றார் அன்று அவளின் தாயார் பத்மா... எந்த நேரத்தில் அவர் அப்படி சொன்னாரோ ... இன்று அவரின் வார்த்தைகள் பலித்துவிட்டது .. அனைத்திற்குமே தடையாக நிற்காத  அவளின் தந்தை ஆகாஷ் மீது அவள் வைத்த காதலுக்கு மட்டும் தடை விதித்தார் ... அதன் பிறகு அவரின் செயல் இணைத்தும், இவர் தான் தன் கண்ணின் மணிபோல என்னை பாவித்த தந்தையா ? என்று அவளையே என்ன வைத்தது .. ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அவள் அவர்களால் ஒதுக்கி வைக்கபட்டாள்.... ஏதேதோ எண்ணியவள் ஆயாசமாய் வானை பார்த்து

" கடவுளே, நான் என்ன பாவம் பண்ணேன் ? என் அம்மா அப்பா சம்மதத்தோடு என் ஆகாஷை நான் கல்யாணம் பண்ணிக்கவே முடியாதா ?" என்று வாய் விட்டு கேட்டு வெடித்து அழுதாள்.... எவ்வளவு நேரம் அழுதாளோ அவளின் கண்ணீர் துளிகளுக்கு இணையாய்  வானமும் கண்ணீர் வடித்ததை கூட உணராமல் அழுது கொண்டிருந்தாள்...

அவளின் கண்ணீருக்கு பதில் கிடைக்குமா ? அர்ஜுனன் - சுபி யின் நிலை என்ன ? நித்யாவை மருக வைக்கும் " அவன் " யார் ? ரகு- ஜானகியுடன் தன் காதலை சொல்வானா? என்று ஆயிரம் டென்ஷன் சிட்டிவேஷன் இருந்தாலும், இது பூவியின் கதைப்பா சோ டென்ஷன் இல்லாம படிக்கலாம்னு ரெலக்ஸ் இருங்க ...

 உங்க எல்லாருக்கும் ஒரு குட் நியுஸ் சொல்லவா ? நம்ம சுப்ரியா- ஆகாஷ் கல்யாணத்துக்கு மீரா- கிருஷ்ணா, ரகு-ஜானு, அர்ஜுன்- சுபி ஜோடியாக வந்து கலக்க போறாங்க .... இந்த வரியை இன்னொரு தடவை படிச்சு உங்க ஏழாம் அறிவை தட்டி விட்டிங்கன்னா, அடுத்த எபிசொட் டென்ஷன் உங்களுக்கு இருக்காது என்பதை குறும்புடன் சொல்லி கொள்கிறேன் ;) பாய் பாய் 

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.