(Reading time: 31 - 62 minutes)

 

ஜானகியின் பார்வையும் தடுமாற்றமும் அவனுக்கு ஆயிரம் கதைகளை சொல்லாமல் சொல்லியது ... கூடிய சீக்கிரம் தன் காதலை சொல்ல வேண்டும் என அவன் காத்திருந்தான். ஜானகியோ தன் தடுமாற்றத்தை உணர்ந்தும் உணராமலும் இருந்தாள் ... எந்த நொடியில்  என் உள்ள சாய்ந்தது  ? என்ற கேள்வி அவளை வாட்டியது .. அதை விட இது சரியா தவறா ? என்று சிந்தித்தவள் வழக்கம் போல தவறான முடிவைத்தான் எடுத்தாள்...

பட் அதுக்காக நீங்க பீல் பண்ணாதிங்க... ஒரு பாடலில் நம்ம கவிஞர் பா விஜய் அவர்கள் கூட சொல்லிருபாறு

" காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்

காதலித்தால் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்துவிடும் "

எனவே ஜானகியின் மனதில் ஏதோ ஒரு மூலையில் விதையாய் உறங்கும் காதல் சீக்கிரம் துளிர்விட்டு விருட்ச்சமாகும் என காத்திருப்போம்....

நாம அதுக்குள்ளே நம்ம காதல் குயில்கள் என்ன பேசறாங்கனு கேட்போம் வாங்க ......

" முடியாதுன்னா முடியாது சுபத்ரா  " என்று கூறிய அர்ஜுனனின் குரலில் தொனித்த கோபம் சுபத்ராவுக்கு புதிதாக இருந்தது .அதுவும் அவன் " சுபத்ரா " என அவளின் பெயரை அழுத்தமாய் கூற, சுபத்ராவிற்கோ இன்னும் கோபம் வந்தது ... ( சரி சரி ... அப்படி என்னதான் சண்டைனு படிச்சு தெரிஞ்சுகோங்க ... அதை விட்டுட்டு ஏன் இப்படி ஒரு ஆரம்பம்னு என்னை திட்ட கூடாது .. சரியா ? )

" ஏன் அர்ஜுன் இப்படி பண்ணுறிங்க ? எனக்கு வேண்டியதெல்லாம் பார்த்து பார்த்து பண்ணுற நீங்க , இதுக்கு மட்டும் தடை சொல்லலாமா ? "

( என்ன சொல்வேன் பெண்ணே ...உன்னை பிரிந்துவிடுவேனோ என்று உள்ளம் துடிப்பதை ) என்று நினைத்தவன்,

" இன்னொரு நாள் போகலாம் டா " என்று கெஞ்சினான் ....

" அச்சோ அர்ஜுன் ... நான் என்ன ஊட்டிக்கு போனதில்லைன்னு சொல்லியா போகணும்னு சொல்லுறேன்? ...காலேஜ் டூர் அர்ஜுன் .... இனி நான் நெனைச்சாலும் எனக்கு கிடைக்காத காலேஜ் வாழ்க்கை ... எங்களுடைய கடைசி நிமிடங்களை ஒண்ணா ஸ்பென்ட் பண்ண விரும்புறோம் அர்ஜுன் "

" வாயிலே ரெண்டு போடுவேன்..அதென்ன கடைசி நிமிஷம் அது இதுன்னு ? சொன்ன புரிஞ்சுக்கோடா ... அன்னைக்கு தானே என் கனவை சொன்னேன் "

" ஐயோ மன்னிச்சிடுங்க அர்ஜுன் ... இனி அப்படி சொல்லமாட்டேன் .. பட் புரிஞ்சுகோங்க பா ... கனவு நிஜமாகாமல் நான் பார்த்துக்குறேன் ... நான் கவனமா இருக்கேன் .. அதான் யுவராஜரின் ஒற்றர்கள் கீதா, கார்த்திக், நிவிதா எல்லாரும் இருக்காங்களே "

அவளின் பதிலில் அரைமனதாய் சம்மதித்தவன்,

" சரி போய்ட்டு வா ... பட் பத்ரமா இரு ..சரியா "

"  இல்ல நான் போகல "

" ஏன் ? "

" நீங்க உம்முன்னு  சொல்றிங்க ? "

" என்னது உம்மா வா ? "

" ஐயோ.. கோடு போட்டா உடனே ரோடு போடுவிங்களே... "

" ஹா ஹா ஹா ,.,,, மக்கு இளவரசி .... இதுதான் நீ உன் யுவராஜனை பத்தி தெரிஞ்சு வச்சுருக்குறதா  ? "

" என்ன ? "

" உன் காலேஜ் டூர் அரேஞ் ஆனதுமே உன் யுவரஜனுக்கு நியுஸ் வந்துடுச்சே ... சும்மா நீ கோபத்துல படபடக்குறதை கேட்கனும்னு தான் வேணும்னே 'நோ ' சொன்னேன்"

" திருடா திருடா .... ரொம்ப அநியாயம் பண்றிங்க அர்ஜுன் ...விட்டா  நான் மூச்சு விடுறது கூட உங்களுக்கு தெரிய வருனும்னு ஒற்றன் வைப்பிங்களோ ?

" ம்ம்ம்ஹ்ம்ம்ம் அவசியம் இல்லை கண்மணி "

" ஏனாம் "

" ஏன்னா நான் உன் ஹார்ட் ல தானே இருக்கேன்...சோ அங்கே எனக்கு ஒற்றர்கள் அவசியமில்லை நானே கண்டுபிடிச்சிருவேனே "

அன்பென்னும் தூண்டிலை நீ வீசினால்

மீன் ஆகிறேன் அன்பே

உன் முன் தான் அட இப்போது நான்

பெண் ஆகிறேன் இங்கே

தயக்கங்களால் திணறுகிறேன்

நில்லென்று சொன்ன போதிலும்

நில்லாமல் நெஞ்சம் ஓடுதே

இதோ உந்தன் வழி

" ஹே இளவரசி பாட்டெல்லாம் பட்டைய கெளப்புது ... என்ன டூர் மூட் ஸ்டார்ட் ஆச்சா ? "

" அய்யே .. இல்லேன்னா மட்டும் நான் உங்களுக்காக பாடினதே இல்லையா ? "

" ஹா ஹா "

" அர்ஜுன் "

" என்னடா ? "

" ஒரு பாட்டு பாடுங்களேன் "

" பாடினா என்ன கிடைக்கும் "

" ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்கும் "

" கொழுப்புடி ... அப்போ பாட மாட்டேன் போ "

" ஷபா .... இந்த எக்ஸாம் முடிஞ்சாலும் முடிஞ்சது , உங்க லொள்ளு தாங்கலை .. ரிவார்ட், பனிஸ்மென்ட், லஞ்சம்னு சொல்லி என்னை ...................." என்றவள் அவன் செய்ததை நினைத்து வெட்கபட்டு சொல்ல வந்ததை நிறுத்தினாள்....

" சொல்லு உன்னை ..."

"...."

" சொல்லுடி  "

" ம்ஹ்ம்ம் "

" சரி சரி நல்ல மூச்சு விட்டுக்கோ ... என்ன இப்படி மூச்சு வாங்குது உனக்கு .. என்கிட்ட பேசிகிட்டே ஜாகிங் போறியா என்ன ? " என்று கேட்டவன் தன் பேச்சினால்தான் அவள் முகம் சிவந்து, இதயம்  படபடக்க மூச்சு வாங்கி நிற்கிறாள் என்பதை அறிந்திருந்தான்.

" என்னடி ..இதோ வரேன் இரு " என்றவள் ..

" ஓகே அர்ஜுன் ... கீதா கூப்பிடுறா " என்று அவனிடம் இருந்து தப்பிக்க எத்தனிக்க,

" ஓஹோ சரி அப்போ அர்ஜுன் பாட வேண்டாமா ? " என கேட்டான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.