(Reading time: 31 - 62 minutes)

 

" விடமாட்டியே " என்று முணுமுணுத்தவன்,

" ஹே பேபி சூப்பரா இருக்கு டி .. பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு ... எனக்கு ஒரு கப் ல போட்டு கொடு " என்று வாங்கி குடித்தவன் உண்மையிலேயே அவளின் கைபக்குவத்தில் தித்தித்த பாயாசத்தை ரசித்து குடித்தான்....

" நிஜம்மாவா ? நல்ல இருக்கா ? "

" ஆமாடா .... நீயே குடிச்சு பாரேன் " என்று அவளுக்கு ஊட்டி விட்டான்.

" எனக்கொரு டவுட் செல்லம் "

" என்ன பா ? "

" நிஜம்மாவே நீதான் சமைச்சியா ? இல்ல கிச்சன் ஜன்னல் வழியா எகிறி குதிச்சு கடையில வாங்கிட்டு வந்தியா ? " என்று கேட்டு அவளிடம் அடி வாங்கினான் ரவிராஜ்....

(வைட் வைட் ...எல்லாம் நல்ல தானே போகுது இதில் அலற என்ன இருக்கு ? சொல்றேன் சொல்றேன் )

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த நேரம் , நண்பர்கள் அனைவரும் வந்துவிட அவர்களை வரவேற்பதற்காக சென்றான் ரவிராஜ். ஏற்கனவே நல்ல பதத்துடன்  ருசியாக பாயாசம்  இருந்தாலும் கணவனின் மெச்சுதலில் சிலிர்த்தவள், இன்னும் அந்த சுவைக்கு சுவை சேர்க்கலாமே என்று எண்ணினாள்....

" பேபி "

" என்னம்மா ? "

" பாயாசம் இப்போ ருசி பாருங்க "

" ஏன் ? "

" பாருங்க சொல்லுறேன் "

கரும்பு  தின்ன எறும்புக்கு கூலியா ? என்பதை போல பார்த்தவன், பாயசத்தை குடிக்க போக அதே நேரம் ,

" அப்போ எனக்கும் சமையல் வருது பா... இனி நானே சமையல் பண்றேனே " என்று கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினாள்  சுஜாதா ...

" ஓகே டா குட்டிமா " என்று சொல்லியபடி பாயாசத்தை அருந்தியவனின் முகம் அஷ்டகோனளானது....

" என்னாச்சு டார்லிங் ? "

" என்னடா பண்ணினே நீ "

" ஏன் ? ரொம்ப நல்ல இருக்கா ? "

" சொல்லுடி என்னதான் பண்ணினே ? "

" இன்னும் ருசியா இருக்கட்டுமேனு பால் கொஞ்சம் சேர்த்தேன் "

" பாலா ? "

" ஆமா "

" அப்பறம் ஏண்டி  இப்படி இருக்கு ... பால் கெட்டு போச்சோ... எங்க அந்த பாலை எடு "

குழப்பத்துடன் திரும்பியவள், அப்போதுதான் அதை கவனித்தாள்...

" அச்சச்சோ"

" என்னடா ? "

" பால் நு நெனைச்சி ஆர்வகொளாருல தயிரை ஊத்திட்டேன் பா "

ரவிராஜ் இதை சொல்லி முடிக்க, தற்போது  கதை கேட்டு கொண்டிருந்த மீனா, கீர்த்தானா, ப்ரியா , மது, மலர் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

" ஐயோ என்ன சுஜா உங்களுக்கு பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலையா ? " என்ற கிண்டல் வேற ... !

இப்படியாய் கிண்டலும் கேலியுமாய் நேரங்கள் நிமிடங்காளாய் கரைய, " இன்னைக்கு நீங்க காலி " என்று பார்வையாலே மிரட்டி கொண்டிருந்தாள் சுஜாதா .... அனைவரும் கலகலப்பாக பேசி கொண்டிருக்க, ஜானகி மட்டும் அவ்வப்போது ரகுராம் வருகிறானா ? என வாசலையே பார்த்து கொண்டிருந்தாள். சமையல் முடிந்து விட அனைவரும் வரேவேர்பறை அமர்ந்தபடி டிவி பார்த்து கொண்டிருந்தனர் ... எஸ் பி பி யின் குரலில் மயங்க வைக்கும் பாடல் இசைத்து கொண்டிருந்தது...

தேன் சிந்துதே வானம்

உன்னை எனை தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க .....

ரகுராமையே தேடி கொண்டிருந்த ஜானகியின்  விழிகள் தூரத்தில் இருந்து அவன் வருவதை கண்டதுமே அழகாய் விரிந்து புன்னகைத்தன... தன்னிச்சையாக எழுந்தவள் தானே சென்று கதவை திறந்தாள்..திரையில் அவர்களுக்காகவே எழுதியதுபோல பாடல் வரிகள் ஒலித்தன.

வைதேகி முன்னே

ரகுவம்ச ராமன்

விளையாட வந்தான்

வேறென்ன வேண்டும் ?

விளையாட வந்தான்

வேறென்ன வேண்டும் ?

சொர்க்கங்களே வரும் தரும்

சொந்தங்கள்  வாழ்க ..!

இருவரின் விழிகளும் ஒன்றாய் கலந்தது.. எத்தனை முறை சொன்னாலும் இந்த மனம் ஏன் தறிகெட்டு தவிக்கிறது என்று இருவருமே தங்கள் மனதை இடித்துரைக்க, அவர்களை காப்பாற்றியது ரவிராஜ்தான் ...

" வா ரகு ... ஏன் இவ்வளோ லேட் ? உனக்காக சுஜா சமைச்சு வெச்சுருக்கா ? "

" ஐயோ ... இதுக்கு நான் பலியா ? என்னை ஆளைவிடுப்பா ! "

" பாஸ் நீங்களுமா ? "

" சுஜா எப்பவோ ஆபீஸ் ல டென்ஷன் ல உங்ககிட்ட கத்தி இருக்கலாம் பட் அதுக்காக என்னை இப்படி தண்டிச்சிட வேண்டாம் ப்ளீஸ் .... "

" ஆஹா  இந்த ஐடியா நல்ல இருக்கே ... பாஸ்  அப்போ நீங்க எங்க எல்லாருடைய வீட்டுக்கும் வரணும் " என்று நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள் மது.

" ஐயோ மது ....ஆளை விடுங்க .. வேணும்னா என் சார்பாக ஜானகி வருவாங்க " என்றான்.

" அண்ணா  பாருங்க அண்ணா, என்னை போட்டு தள்ள பார்க்குறாங்க " என்று ஜானகி ரவிராஜை பார்க்க

" ஓஹோ  எங்க சமையலை சாப்டுறது அவ்வளவு கொடுமையா " என்று பிரியா கேட்க, அதுக்கப்பறம் ஒருத்தரை ஒருத்தர் காலை வார அன்றைய நாள் இனிமையாகவே கழிந்தது ... முக்கியமாக ரகுராமிற்கு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.