(Reading time: 31 - 62 minutes)

 

ருவரின் மனநிலையை தெரியாமல் கே ஜே யேசுதாஸ்  அவர்கள் வானொலியில் பாடிக் கொண்டிருந்தார்.

பொன் மானே கோபம் ஏனோ

காதல் பால்குடம் கல்லாய் போனது

ரோஜா ஏனடி முள்ளாய் போனது

ஓர பார்வையால் ஜானகியை ரகு பார்த்தான்.

" இந்த நேரத்தில் இந்த பாடல் அவசியம் தானா ? " என்று  இருந்தது அவளுக்கு ......

காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா

ஊடல் என்பது காதலின் கெளரவம் போ

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்

கோவம் கொள்வதா

பாடலுக்கு ஏற்றவாறே தாளம் போட்டான் ரகுராம் ..

" இன்று இவனுக்கு என்ன வந்தது ? ஒரு வேலை காதலை சொல்லி விடுவானோ " என்று எண்ணியவளுக்கு பதட்டம் வந்தது .. ஆனால் கோபம் ? ஏன் வரவில்லை  ??

ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்

அவனை நேராய் பார்த்து முறைத்தாள் ஜானகி....

அவளின் பார்வையை நேராய் எதிர்கொண்டவன்

கோபம் கூட அன்பின் அம்சம் 

என்ற வரிகளை கேட்டு மந்தகாச புன்னகை சிந்தினான்.

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ

இருவருமே தன்னிலையை உணர்ந்தனர்... ஊடலா ?

ரகுராமிற்கோ " அய்யயோ நாம காதலிக்கிறோம் நு தெரிஞ்சிருக்குமோ" என்று கலவரமானான் .. ஜானகியோ " என்ன மாதிரி சூழ்நிலை இது ? ஏன் நான் அமைதியாக இருக்கேன் ? ரகு ஏன் இப்படி பண்ணுறிங்கனு கேட்டு விடவா ? ஒருவேளை  நான் கேட்டு தனது காதலை ரகு சொல்லிட்டா ? நான் என்ன செய்வேன் ? என்னால ஏத்துக்க முடியுமா ? அல்லது என் முகத்துல விழிக்காதிங்கன்னு கத்தத்தான் முடியுமா ? என்னால ரகுவை விரும்ப முடியல அதே நேரம் காதலிக்கவும் முடியலையே " என்று மனதிற்குள் போராடி கார் சீட்டில் கண்கள் மூடி சாய்ந்தாள்........ ( நீங்க விரும்பலைன்னு யாரு சொன்னது ஜானகி ? உன் காதல் உங்களுக்கு புரியலை .. அதுக்கும் காலம் விரைவில் வரும் ... ஆனா ???? )

ஆபீசிற்கு வந்த ஜானகி, இயல்பு நிலைக்கு வரவில்லை என்றாலும் கூட வேளையில் கவனமாய் இருந்தாள். இறுக்கமான முகபாவம் இல்லை அதே நேரம் சிரிக்கவும் இல்லை .. ரகுராம் அவ்வப்போது அவளை சிந்தனையுடன் பார்த்தான். " ஜானகி என்னை எதிர்பார்க்கிறாளா ? "

" ஜானு "

" சொல்லுங்க பாஸ் "

" எத்தனை மணிக்கு ரவி வீட்டுக்கு போற ? "

" இன்னும் முடிவு பண்ணல "

" தனியா போய்தான் ஆகணுமா ? "

 என்றவனை ஆயாசமாய் பார்த்தாள்... மூளையோ இது உனக்கு நல்லது அல்ல .. அவனை சார்ந்து இருக்காதே என்றது ... மனமோ " நீயும் வாயேன் " என்றது.

அவள் கண்களில் எதை கண்டானோ, சட்டென இண்டர்காமில் அவளை அழைத்தான்.

" மே ஐ காம் இன் "

" எஸ் ..... குட் மோர்னிங் மது "

" குட் மோர்னிங் சார் .. ஹொவ் கேன் ஐ ஹெல்ப்  யு ? "

" மது, நாம எல்லாரும் இன்னைக்கு சுஜாதாவை மீட் பண்ணலாம்னு ஒரு பிளான் இருக்கு .. நீங்க என்ன சொல்றிங்க ? " என்றவன் ஜானகியை ஓரகண்ணால் பார்த்தான்.

" வொய் நாட் .... நேத்து கூட மீனா, மலர், கீர்த்தனா, ப்ரியா  எல்லாரும் சொல்லிட்டு இருந்தாங்க பாஸ் ... பட் ரொம்ப லாஸ்ட் மினிட்டா இருக்கே ... "

" அது நோ ப்ரோப்ளம் ..நான் ரவி கிட்ட சொல்லிடுவேன் .. " என்றவன் ஜானகியிடம் திரும்பி

" ஓகே மிஸ் ஜானகி , நீங்க சொன்னமாதிரி எல்லாரும் இவினிங் அங்க போய்டுங்க நானும் அங்க வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன் " என்றான்.

" ஹை ... சூப்பர் ...ஜானு நீங்களும் வர்ரிங்களா ? எத்தனை தடவை நாங்க எங்ககூட வெளில கூப்பிடிருக்கோம் பட் நீங்கதான் எப்போ பார்த்தாலும் பிசி ... இன்னைக்கு நாமெல்லாம் ஒன்னதான் போறோம் ஓகே யா ? " என்று உற்சாகமாய் மது சொல்ல, ரகுவின்  திட்டத்தை கொஞ்சம் திட்டியும் கொஞ்சம் ரசித்தும் ஏதோ கலவை உணர்வில் புன்னகையை உதிர்த்தாள் ஜானகி.

" ஒகே பாஸ் .,... நான் இப்போவே இந்த நல்ல செய்தியை எங்க அணிகிட்ட சொல்லிட்டு என்  வேலையை பார்க்கிறேன் .. அப்போதான் இவினிங்  ப்ரெஷ் ஆகி அழகா டிரஸ் அப் பண்ணிட்டு  கெளம்ப டைம் இருக்கும் " என்று கண் சிமிட்டி சிரித்தாள் மது... மது எப்பவுமே இப்படித்தான்... எந்த  சூழ்நிலையிலும்  தன்னை உடனே பொருத்தி கொள்வதோடு, தன்னுடைய  கலகலப்பான குணத்தில் அனைவரும் சிரிக்க வைத்து விடுவாள்.

" ஹா ஹா அதென்ன உங்க அணி "

" நம்ம  ஆபீஸ் ல மகாபாரதம் நடக்குது தெரியாதா ? "

" மகாபாரதமா ? "

" ஆமா பட் லேடிஸ் ஒன்லி "

" பாருடா .... அப்பறம் ? " என்று கன்னத்தில் கை வைத்து கதை கேட்டான் ரகுராம் .. ஜானகிக்கு அவனின் தோரணையில் சிரிப்புதான் வந்தது ... அவளும்  மதுவை ரசனையுடன் பார்த்தாள்.

" நான், மீனு , மலர் , கீர்த்தனா, ப்ரியா  ஐவரும் பஞ்ச பாண்டவர்கள்...."

" அப்போ வாணி அண்ட் ஹேர் டீம்  ? "

" வேறென்ன கௌரவர்கள் தான் "

" ஹா ஹா ஹா ..  சரி அப்போ ஜானகி ? "

" ஜானகி மகாபாரதத்துல இல்ல ... இராமாயணம் தான்...  " என்றவள் மெல்லிய குரலில் ரகசியமாய் " ஏன்னா நீங்கதான் ரகுராமாச்சே " என்று சொல்லி கொண்டாள் .. அதை கவனிக்காத ரகு ,

" போதும் போதும் மிச்ச கதையை இவினிங் பேசலாம் " என்றான் ...

ஜானகியும்  " ஆமா மது இல்லனா, நீங்கலம் டிரஸ் அப் பண்ண டைம் இருக்காதே " என்று சிரித்தாள்....

இருவரிடமும் புன்னகையுடன் விடைபெற்று தன்னிடத்திற்கு சென்று, மற்ற நால்வரிடமும்  ரகுவிடம் பேசியதை பற்றி பகிர்ந்துகொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.