(Reading time: 31 - 62 minutes)

 

" ண்ணிக்கு என்னடா ? அம்மாகிட்ட நான் பேசும்போது கூட அண்ணி அம்மாவோடு ரொம்ப ராசி ஆகிட்டதா சொன்னாங்களே "

" அதெல்லாம் சரிதான் ..பட் இன்னமும் அவ அம்மா அப்பாவை நெனச்சு பீல் பண்றா.. அவ அழறதை தாங்கிக்கவே முடில ... வர்ற கோவத்துக்கு அவ வீடு புகுந்து தாலி கட்டி கூட்டிடு வந்திடலாம் போல இருக்கு "

" ஹா ஹா ஹா ஆகாஷ்  நீ கோவபட்டு இப்போதான் பார்க்குறேன் .. உன்னை போயி ரௌடி ரேஞ்சுக்கு நெனச்சு வெச்சுருக்காரெ சுப்ரியின் அப்பா ...ஹா ஹா ஹா ..."

" விடு..அது ஒரு மொக்க பிளாஷ் பேக் .. உண்மையில அடிச்சுகிட்டவனுங்க எல்லாம் குழந்தை குட்டின்னு செட்டல் ஆகிட்டானுங்க .. சண்டையை தடுக்க போன நான் இன்னும் வில்லனாகவே இருக்கேன் "

" ஹ்ம்ம் .. சரி கவலை படதே .. நான் கிருஷ்ணா அண்ணாகிட்ட பேசிட்டு வரேன் "

" அவனையும் இழுத்துட்டு வா "

" டேய் மாடு.... இழுத்துட்டு வர்றதுக்கு என் அண்ணா என்ன உன்னை மாதிரி எருமையா ? "

" அட போடி "

" சி நீ போடா " என்று சிரித்தவள் போனை வைத்தாள்.

போனை வைத்த நித்யாவிற்கு மீண்டும் " அவனின் " ஞாபகம்தான் .... இன்னமும் ஊட்டியில் இருப்பனா ? அவன் இனி என் கண்களில் பட்டுவிடுவானோ ? முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டுமே ......

இனி அவனிடம் கொடுக்கவே வாங்கவோ எதுவும் இல்ல ... அட்லீஸ்ட் விலகி இருந்தாலாவது என்னை துரோகின்னு அவன் நினைக்க மாட்டான்... ஏதேதோ சிந்தித்தவள் கடைசியாய் ஒரு முடிவுடன் கிருஷ்ணனை அழைத்தாள்.

" அண்ணா"

" சொல்லுடா...போர் அடிக்குதாமா ? "

" இல்லனா நான் ஊட்டிக்கு போறேன் "

" என்னடா திடீர்னு "

" ஆகாஷ் கூப்பிட்டான் "

" நான் என் தங்கச்சிகூட இருந்தா பொறுக்காதே அந்த எருமைக்கு "

" ஹா ஹா ஹா"

" என்னடா சிரிப்பு ?"

" நானும் இப்போதான் அவனை  எருமைன்னு திட்டினேன் ..செம்  பின்ச்ஜ் அண்ணா "

" கண்டிப்பா போகனுமா நித்து ? "

" ஆமா அண்ணா... அநேகமா ரெண்டு வாரத்தில் ஆகாஷ் கல்யாண வேலை வந்திடலாம் இல்லையா ? நான் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணனுமே ..... இப்போ போனா பெட்டர்னு தோணுது "

" சரி ஓகே டா... நான் ஏற்பாடு பண்ணுறேன்"

ப்படியாய் ஒரு வழியாக நம்ம நித்யா ஊட்டிக்கு போவது உறுதியானது ... அவளை வழியனுப்ப அர்ஜுனன், ஜானகி உட்பட அனைவருமே ரயில்வே ஸ்டேஷனிற்கு வந்தனர்.... நித்யாவே

" இதெல்லாம் ஓவர் பா .. ஒரு ஆளை அனுப்ப ஒரு ஊரே வருதே " என்றாள்..அதற்கு அர்ஜுனனோ

" என்ன பண்றது ? ஒரு ஆளின் உருவில் ஒரு ஊரே போகுதே " என்று வாரினான் ...

" ஹேய் பிரின்ஸ் .. தப்பி தவறி ஊட்டிக்கு வந்திடாதிங்க ... அது எங்க பேட்டை ... அங்க நான் இப்படி அடக்க ஒடுக்கமாக இருக்க மாட்டேன் ... ரொம்ப டெர்ரர் நானு " என்றாள்...

" அப்போ இது ட்ரைலர்...மென் பிக்சர் ஊட்டியில்னு சொல்றியா நித்ஸ் ?? " என்றான் ரகுராம்....

" எஸ்  அண்ணாச்சி " என்று சல்யுட் அடித்தவள் மீரா, சுபத்ரா, ஜானகி  மூவரையும் அணைத்து அன்பு கதை பேசிவிட்டு விடைபெற்றாள். ஏனோ அவளை அனுப்பி வைக்கவே மனசில்லை அவர்களுக்கு ...

றுநாள் மிகவும் உற்சாகமாகவே விடிந்தது ஜானிகிக்கு....

காரணம் ? இன்று அவளின் அண்ணன், அதாங்க மிஸ்டர் ரவிராஜ் அவரையும்  சுஜாதாவையும் மீட் பண்ண போகிற சந்தோசம் தான் ... அலுவலகத்தில் முக்கியாமான  ஒரு மீட்டிங் இருந்த நேரம் சுஜாதா ரிசைன் பண்ண வேண்டியதாக இருந்ததினால் ஒரு farewell  பார்ட்டி வைக்க முடியாமல் போனது .. அதை ரகுராமிடம் சொல்லி அவள் குறைபட்டுகொள்ள, ஒரு புன்னகையுடன்

" வர்ற செவ்வாய் கிழமை இவினிங்  அவங்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் தரலாம் " என்றான்.

ரகுராமின் காரில்,

" என்னாச்சு ஜானகி ..இன்னைக்கு ஒரே ஹாப்பி மூட் ? "

" என் அண்ணாவை பார்க்க போறேன்ல .. அதான் "

" என்ன ??? "

" இன்னைக்கு நாம  சுஜா- ரவி அண்ணாவை பார்க்க போறோம்ல "

சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான் ரகுராம்...

" ஓ இன்னைக்கு செவ்வாய் கிழமையா ? "

" ரகு ??"

" சாரி ஜானகி சுத்தமா மறந்துட்டேன் ... நீ போய்டு வாயேன் "

" விளையாடுறிங்களா ? "

" நோ ஐ எம் சீரியஸ் ஜானு .... இன்னும் ஒரு வாரத்துல முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு ... நீ போய்ட்டு வா .. நான் வேணும்னா உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன் "

" பாஸ் நான் உங்க பி ஏ ..உங்களுக்கு வேலை இருந்த எனக்கும் தான் வேலை இருக்கும் "

" ஜானு இது ஆபீஸ் இல்ல... நான் உன் பாஸ் இல்ல... நான் ரகு .. நீ ஜானகி "

" இப்போ என்னதான் சொல்ல வர்ரிங்க ரகு ? "

" சுத்தமா மறந்துட்டேன் மா ... எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு .. இன்னைக்கு நீ என்ன பண்ணனும்னு உனக்கு சொல்லிட்டு நான் கிளம்பிடுவேன் .... நீ மட்டும் போய்ட்டு வாயேன் .... கம்பெனி கார்ல  போ ... நான் 7, 8 மணிக்கு வந்துடுறேன் "

" என் அண்ணா வீட்டுக்கு எனக்கு போய்ட்டு வர தெரியும் ... யாரும் எனக்கு  ஐடியா தரவும் வேணாம் , பிக் அப் பண்ணவும் வேணாம் " என்றவள் கோபமாய் முகத்தை திருப்பி கொண்டாள்...

ரகுராமிற்கும் அவளுடன் செல்ல ஆசைதான் ..எனினும் இன்று அவன் கிருஷ்ணனுடன் ஒரு முக்கியாமான கிளையன்ட்டை பார்க்க வேண்டிய அவசியம் .. தற்பொழுது அவனின் சூழ்நிலையை அறிந்தாலும் சிறுபிள்ளைபோல கோபம் கொள்ளும் ஜானகியை பார்க்க அவனுக்கு சிரிப்புதான் வந்தது ...

ஜானகிகோ அவன் உடன் வரவில்லையே என்ற இனம் புரியாத ஏமாற்றம்... ஏனோ அவள் மனம் அவனை மிகவும் சார்ந்து இருக்கிறதோ என்ற திகைப்பு ஒரு பக்கம் ... அப்படி அவன் இல்லாமல் செல்ல முடியாதா ? முட்டாள் மனமே இன்றே உன்னை மாற்றுகிறேன் பார் என்று தன்னை தானே திட்டி கொண்டவள் ரகுராம் இல்லாமலே அங்கு சென்று வர முடிவு செய்தாள்... " ஆனாலும் ரகு கூட வரலாம் ல " என்று அவள் மனம் மீண்டும் கேள்வி கேட்க, தன் மனதை அடக்க முடியாமல் மானசீகமாய் தலையில் தட்டி கொண்டு , சாலையை வெறித்து பார்த்துகொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.