(Reading time: 31 - 62 minutes)

 

" வாவ் மலர் உங்க சமையல் வாசம் ஹால் வரை வந்து சுண்டி இழுக்குது ...அதான் இங்க வந்துட்டேன் " என்றபடி வெட்டி வைத்திருந்த கேர்ரடை சாப்பிட்டு  கொண்டிருந்தாள் மீனா....

" உங்களுக்கு  சமைக்க தெரியுமா மீனா ? "

" ஓ எஸ் ...பட் எனக்கு வெஜிடேரியன் தான் சமைக்க வரும் .. நீ மது ?"

" சமையலா ? அதெல்லாம் என் வருங்கால கணவர் பார்த்துப்பார்" அவள்  தோரணை நின்று சொன்ன விதத்தில் அங்கு இருந்த அனைவரும் சிரித்தனர் ... தன் மனைவியிடம் பார்வை செலுத்திய ரவிராஜ்,

" பரவாயில்ல மது ... சுஜாவின் பெயரை காப்பாற்ற நீங்களாவது இருக்கிங்களே " என்றான்.

" அப்போ நம்ம வீட்டில் நீங்கதான் சமையலா அண்ணா? "

" அதை ஏன் ஜானு கேட்குற ? நம்ம மகாராணிக்கு பசிக்குமேனு அலாரம் வெச்சு அதிகாலை எழுந்து வித விதம்மா சமைச்சு வைக்கிறதுக்குள்ள உன் அண்ணா நொந்து நூடல்ஸ் ஆகிடுவேன் "

" ஐயோ பாவம் சார் நீங்க" என்றாள் கீர்த்தனா... கணவரின் பேச்சை கேட்டு அனைவரும் தன்னை கலாய்க்கவும் சுஜாதா ஏதோ பதில் பேச முற்பட அதற்குள் மது,

" அதென்ன ரவி சார் அலுத்துகுறிங்க? சமையல்னா பெண்கள்தான் பண்ணனும்னு ரூல்ஸ் இருக்கா ? " என்ற அருமையான கேள்வியை கேட்டு அனைத்து பெண்களையும் தங்கள் பக்கம் வாதிட இழுத்தாள் ஜானகியை தவிர ....( பாசமலர் சாவித்திரி அவ்வளவு சீக்கிரம் கட்சி மாற மாட்டாங்க மது )

" ஐயோ நான் எப்போ அப்படி சொன்னேன் மது ? பெரிய பெரிய ரெஸ்டாரன் ல கூட இப்போலாம் ஆண்கள் தானே சமைக்கிறாங்க ? " என்றார் ... உடனே மீனா

" அப்போ பெண்கள் பெரிய லெவல் ல சமைக்கலன்னு சொல்ல வர்ரிங்களா ? " என்று வாரினாள்....

" இல்லம்மா ....அது " என்று ரவிராஜ் சமாளிக்க முயல சுஜாதாவிற்கு கணவனின் நிலையை கண்டு சிரிப்பாக இருந்தது ...

" இரு இரு உன்னை அப்பறமா கவனிச்சுக்குறேன் ..." என்று பார்வையாலே மிரட்டினான் ரவிராஜ்....

" ஓகே சமையல் ரெடி ... சுஜா பாயாசம் நானே செஞ்சிடவா ? " என்று புன்னகையுடன் வினவினாள் மலர் ....

" ஐயோ பாயாசமா? " என்று ரவிராஜும் ஜானகியும் ஒரே நேரம் அலறி ஹை 5 கொடுத்து கொண்டனர் ....அவர்களின் பாவனையில் மற்றவர்கள் குழம்பி போக  சுஜாதா மட்டும்

" பேபி வேணாம்!! " என்று கணவனை மிரட்டினாள்.

அவளின் பாவனையிலே ஏதோ புரிந்தவளாய்

" ஆஹா பாயாசம் பின்னாடி எதோ ப்ளாஷ் பேக் இருக்கு போல ..என்ன அது சொல்லுங்க சொல்லுங்க " என்று கதை கேட்க தயாரானாள் மது.

" ஹே என்னை விட்டுட்டு இங்க  என்ன கதை ஓடுது " என்று அதிரடியாக என்ட்ரி கொடுத்தாள் ப்ரியா...

" மணமகளே மருமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

குணம் இருக்கும் குல மகளே வா வா

தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா " என்று கோரசாக பாடினர் பெண்கள் அனைவரும் .. ஜானகிக்கும் ரவிராஜிற்கும் மட்டும் எதுவும் புரியாமல் " என்ன நடக்குது ? " என்பதை போல் பார்த்தனர் ... அவர்களுக்கு விளக்கம் அளித்தாள் கீர்த்தனா.

" அதுவா ...நம்ம ப்ரியா வீட்டுல அவ லவ் மேட்டர் கு கிரீன் சிக்னல் விழுந்துடுச்சு ... இன்னும் 2 மாசத்துல டும் டும் டும் ..... அதான் மேடம் ஒரே பூரிப்பு ... ஏற்கனவே பிரியா காதலில் பகல் கனவு காணுவா .... இப்போ காதலுக்கு அனுமதி கிடைச்சதும் மேடம் எப்போ பார்த்தாலும் போனும் கையுமாகத்தான் இருக்காங்க .,. இதுல அப்பபோ டூயட் சாங் வேற பாடுறா ..அதுனாலத்தான் அவளை நடப்புக்கு கொண்டு வரவும் , நம்ம பிரியா வெட்கபடுற அழகை ரசிக்கவும் இப்படி அவளுக்குன்னு ஒரு தீம் மியூசிக் செட் பண்ணி வெச்சிருக்கோம் "

" வாவ் வாழ்த்துக்கள் ப்ரியா " என்று ஜானகி சொல்லவும்,

காதலர்களுக்கே  உரிய தனி முக ஜொலிப்பில், வெட்கம் கலந்த புன்னகையுடன் " தேங்க்ஸ் ஜானகி " என்றாள்......

" ஓ " என்று ஏககுரலில் அனைவரும் கோரஸ் பாட " எப்பபா விட்டா இன்னைக்கு நம்மளை வெச்சு படமே ஓட்டிருவாங்களே " என்று உஷாரான பிரியா

" அதிருக்கட்டும் ... ஏதோ பயாசம்முன்னு பேசிட்டு இருந்திங்களே " என்றாள் .....

" அடிப்பாவி நீ தப்பிக்கணும்னு என்னை மாட்டி விடுறியே ? "என்று மனதிற்குள் நொந்து கொண்டே ப்ரியாவை ஏறிட்டாள் சுஜாதா.

" அதுவா ???  அது ஒரு குட்டி பிளாஷ் பேக் " என்றபடி ரவிராஜ் மேலே பார்த்தான்... ( ஓஹோ பிளாஷ் பேக் சொல்றாராமாம் )

ன்று,

" சுஜா என்னடா பண்ணுறே ? " என்று கலவரமுடன் கேட்டான் ரவிராஜ். அது என்னமோ தெரியல , என்ன மாயமோ புரியல சுஜாதாவிற்கும் சமையலுக்கும் என்றுமே பொருத்தம் இருந்ததில்லை. அதனாலேயே எதுக்குடா ரிஸ்க் கு நு நம்ம ரவிராஜே சமையல் வேலையையும் சேர்த்து பார்த்திடுவார் ....( சமையல் வேலையய்யும்னா, அப்போ மத்த வேலையும் அவருதான் செய்வாரான்னு கேட்டு என்னை சுஜாதாகிட்ட மாட்டி விட்டுட கூடாது சொல்லிடேன் ..... சுஜாவுக்கு லேசாக கோப வருது போல ... நான் சரண்டர்.... பட் இப்போ இல்ல இந்த பிளாஷ் பேக்கு அப்பறம் )

சாதரண நாட்களிலேயே நம்ம ரவிராஜ் ரிஸ்கு எடுக்க மாட்டாரு ..இதுல இன்னைக்கு சுஜாதாவின் நண்பர்களும், ரவிராஜின் நண்பர்களும் அவங்க வீட்டுக்கு வர்ரதாக ப்ளான் ... அப்படி பட்ட நேரத்தில் கையில் அகப்பையும் கையுமாக நின்னுகிட்டுருந்த சுஜாவை பார்த்ததும் அவருக்குள்ள எங்கேயோ ஒரு அபாய சங்கு ஒலித்தது ...( சத்தியமா சுஜா என்னை சும்மா விட மாட்டங்க ..அது மட்டும் நிச்சயம் ... எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா ?)

" பேபி .. நான் பாயாசம் செய்யுறேன் ... பாவம் நீங்களும் எவ்வளோதான் சமைப்பிங்க? நானும் ஹெல்ப் பண்ணலாம்னு ..........."

" அட செல்லமே நீ சமைக்காமல் இருப்பதுதான் எனக்கு உதவியே "  என்று நினைத்தவன், இதை நேரடியாக சொன்னால் அடி விழும் என்று அறிந்திருந்ததால் அவளருகில் வந்து, நெற்றியோடு நெற்றி முட்டி

" என் மகாராணிக்கு ஏன் இந்த வேலை எல்லாம் ? " என்று செல்லம் கொஞ்சினான். அவனின் அருகாமையில் வழக்கம் போல திணறினாலும்

" அச்சோ நீங்க வேற ... போங்கப்பா ...  இதோ அஞ்சு நிமிஷத்துல பாயாசம் ரெடி ஆகிடும் ... வேறென்ன வேணும் சொல்லுங்க ? "

ஒரு நிமிடம் அவளின் படபடக்கும் கண்களை அசராமல் பார்த்தவன்

" வேறென்ன வேணும் நீ போதுமே " என்றான் ....

( எனக்கொரு டவுட்டு .... பிளாஷ் பேக் சொல்லிட்டு இருக்குற ரவிராஜ் இந்த சீன்ஸ் எல்லாம் சொல்லுவாரா ? அட போங்கப்பா, திரைப்படத்துல மட்டும் சீரியசான சிட்டிவேஷன் ல கூட பிளாஷ் பேக் டூயட் வைக்கிறாங்க .. நாம வைக்க கூடாதா ? ஹீ ஹீ )

" சரி சரி பாயாசத்தை டெஸ்ட் பண்ணுங்க "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.