(Reading time: 25 - 49 minutes)

ன்னொரு தகப்பன் போல தன்னை தூக்கி வந்த அண்ணனை எண்ணி மருகிய பொழுதும்... பாலாஜியை நினைத்து ஏக்கம் வர...

“சைனா ரீச் ஆகியிருப்பானா”, என்று யோசனையுடன் எழுந்தவள்.. அருகிலிருந்த தனது அலைபேசியை கையில் எடுத்து பாலாஜி அங்கு போய் சேர்ந்ததாக அனுப்பிய வாய்ஸ் மெயிலை கேட்டு உறுதி செய்தவள்...

உள்ளுக்குள் அவனை மிஸ் செய்தாள். அதற்காக அவனை அழைத்து பேசவும் தோன்றவில்லை.. மாறாக பவதாரிணியை அழைத்து,

“பாவா!!! டீ ப்ளீஸ்!!!”, என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்தவள் மீண்டும் பார்வையை கண்ணாடி சுவரைத் தாண்டி இருந்த கடலில் பதித்தாள். ஆதவனின் ஆதிக்கத்திலும் ஆர்ப்பரிக்கும் அலைகளின் காட்சி ரம்யமாக தான் இருந்தது...

“அஞ்சனா இப்போ வளர்ந்துட்ட.. உனக்கு இருபத்தியோரு வயசு! இன்னும் சின்ன பிள்ளைத்தனமா பாலாஜி வேணும்ன்னு அடம்பிடிக்க கூடாது!  அவனுக்கு அவன் கனவு முக்கியம்ன்னா.. உனக்கு உன் கனவு முக்கியம்”

தனக்குத் தானே தேற்ற முயன்றாள்.. அப்பொழுது அந்த அறையின் ஓரத்தில் புது வரவாக ஒரு பிள்ளையார் சிலை அவள் கண்களில் பட.. அவள் கண்கள் வைரமாய் மின்னியது.

“மை டியர் பெல்லி பாய்!!!”, மென்மையாய் உச்சரிக்கும் பொழுதே மனதில் குடி புகுந்தது ஒரு அமைதி.. ஆம், பிள்ளையார் அவள் இஷ்ட தெய்வமாயிற்றே! 

ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் முதல் ஆசி ஆற்றங்கரை பிள்ளையாரிடம்.. பின், அவள் நட்சத்திரத்தின் படி வரும் பிறந்த நாளுக்கு பிள்ளையார்பட்டிக்கே அழைத்து செல்வார் பவதாரிணி. இந்த முறை இது எதுவுமே சாத்தியமில்லாமல் போயிற்றே... பிள்ளையாரைக் கண்டதும்  மனதிற்குள் குன்றல் உண்டாக...

‘ஸாரி பெல்லி பாய்’, மானசீகமாக மனதுருக மன்னிப்பு கேட்டவள்...

“என்னலாம் ப்ளான் பண்ணி வைத்திருந்தேன் தெரியுமா? பிள்ளையார்பட்டிக்கு வந்து 108 தோப்புக்கரணம் போட்டு, விநாயகர் அகவலை பாடிட்டு.. “, என்றவளுக்கு அப்பொழுது தான் பொறி தட்டியது...

“ப்ச்.... இந்த பாஜி ஊருக்கு போற டென்ஷன்ல என் வாழ்க்கையின் லட்சியத்தை அடைய உன்கிட்ட வேண்டுதல் வைக்கவே மறந்துட்டேனே!!!! ஹய்யோ!!!!”, என்று தன் தலையில் தட்டி... உதட்டை பிதுக்கிய படி முழித்தவள்...

“ஸாரி... ஸாரி... ஸாரி... கோவிச்சுக்காதே!”, என்று மன்னிப்பு கோரிய படி..

“உனக்கு தெரியும் தானே பெல்லி பாய்.. இந்த அப்பாவி அஞ்சனா பாப்பாக்கு  இருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு கனவு! ஒரு நாள் ஒரு கனவு இல்லை... பல வருஷமா நினைக்கிற ஒரு கனவு! அது - லவ்! காதல்! பிரேமம்! இஸ்க்!”

“எந்த மொழியில் சொன்னாலும் உலகப் பொதுமறையான அந்த லவ் - எனக்கு வேணும்! தாத்தா பாட்டியை போல.. பாவா - துரை அப்பா போல... ஆதி - சுவாதி போல...”

“தங்கா ஆச்சியைப் பார்த்ததும் தாத்தாவுக்கு பிடிச்சதாம்... அவங்களுக்காக ஐந்து வருஷம் காத்திருந்து கல்யாணம் செய்திருக்காங்க! ஸ்வாதி அண்ணிக்கு பார்த்தவுடனே ஆதியை பிடிச்சதாம்.. அவங்க தான் ஃபர்ஸ்ட் ப்ரோப்போஸ் செய்து இருக்காங்க!”

“இதோ பாவா கூட பிள்ளையார்பட்டிக்கு வந்து உன்கிட்ட பூ போட்டு பார்த்து தான் அப்பாவை கல்யாணம் செய்ய ஓகே சொல்லியிருக்காங்க.. பாவாக்கு அப்பா ரெடியா இருந்தாரு! எனக்கு யாருமே இல்லையே!”

“இல்லை.. இல்லை.. இருக்கார்....  எதுக்கு மரியாதை??? இருக்கான்! எனக்காக ஒருத்தன் இருக்கிறான்! நீ தான் மறைச்சு வைச்சிருக்க! என் கண்ணுக்கு காட்டாம! எப்போ காட்டுவ பெல்லி பாய்! அந்த ஒருத்தனை! அவனை நீ தான் காட்டியதும்.. அவனை நான் உயிரைப் போல நேசிக்கணும்.. காத்தை போல சுவாசிக்கணும்.. “

“லவ்ன்னு சொன்னதுமே கவிதை அருவி மாதிரி கொட்ட ஆரம்பிக்குதே.. அதை ஃபீல் பண்ணா எப்படி இருக்கும்... எனக்கு அந்த ஃபீலிங் வேணும்.. த்ரில் வேணும்..  என் ஆளை காட்டுவியா பெல்லி பாய் ப்ளீஸ்! இந்த பாவா லவ் ன்னு சொன்னாலே டென்ஷனாகி எனக்கு அட்வைஸ் ஆரம்பிச்சிடுறாங்க...”, என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே...

அந்த அறைக்குள் திடுதிப்பென்று நுழைந்த பவதாரிணி தன் தோழி சைலஜாவுடன்... அவர்களைக் கண்டதும் பிள்ளையாரிடம் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்த அஞ்சனா முழித்து... பின் அவர்களை வரவேற்க...

“அஞ்சு குட்டி! என்ன தனியா பேசிகிட்டு இருக்கீங்க!”, என்று கேட்டுக் கொண்டே சைலஜா வர..

“என் பேவரேட் பெல்லி பாய் கண்ணு முன்னாடி வந்து என்ன வரம் வேண்டும் கேள் என்றார்! ஓ காதல் கண்மணின்னு உருகி உருகி பாட ஒருத்தரை அனுப்ப சொன்னேன்!”, என்று வாயடிக்க ஆரம்பிக்க...

பவதாரிணிக்கு பீதி கிளம்பியது. “காலாகாலத்தில் இவளுக்கு  கல்யாணத்தை முடிக்கணும்! நல்ல வரன் இருந்தா சொல்லேன் சைலு”, என்று புலம்பல் போல அவர் சொல்ல..

“என் பொண்ணுக்கு பிடிச்ச வரனா சொல்லேன் சைலு”, என்று இவள் பின் பாட்டு பாட...

சைலஜா சிரிக்க.. பவதாரிணி முறைக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.