(Reading time: 25 - 49 minutes)

ம்தன.. நம்தன.. நம்தன... நம்தன...

தாளம் வரும்... புது ராகம் வரும்..

என்று பாடி அவளை வெறுப்பேற்ற...  ரிமோட்டை அவன் மேல் தூக்கி எரிந்தாள்.. அதை லாவகமாக கேட்ச் பிடித்தவன்,

“தேங்க்ஸ் குட்டி.. உனக்காக மெடிக்கல் லீவ் போட்டதுக்கு உருப்படியாக மேட்ச்சாவது பார்க்கிறேன்”, என்று சேனலை மாற்ற...

“நீ கள்ள மாடு போடுறதுக்கு.. என்னை சாக்கு சொல்றே”, என்றாள்..

“கள்ள மாடு போட நான் என்ன அஞ்சனாவா? படிக்கிற பையன் எங்க இருந்தாலும் படிப்பான்!”, என்று பெருமையடித்தான் இவன்!

இந்த நேரம் பாலாஜியாக இருந்தால், இதை சொல்லியதற்கு அடி தடி ரகளையாகி இருக்கும்! படிப்பில் சின்சியராக இருக்கும் ராகவ் இவளுக்காக தான் விடுப்பு எடுத்திருக்கிறான்!

ஏனோ அந்த நொடி பதில் ஏதும் பேசாமல் சோர்ந்த அஞ்சனா, ராகவ்வின்  தோளில் சாய... குருட்டுத்தனமாக கொள்கை வைத்து அதை செய்ய  சின்னப்பிள்ளை போல அவள் அடம்பிடிப்பவளை  எண்ணி சிரிப்பு வந்தாலும்.. அவளை திசை திருப்பும் முயற்சியாக,

“குட்டி.. நீ இன்னும் வளரலைடா... அதனாலே, என்ன பண்ணு.. உனக்கு ஆள் தேடுறதுக்கு பதிலா அண்ணாவுக்கு பொண்ணு தேடு! நீ யாரை காட்டுறியோ அவளை கட்டிக்கிறேன்!”, என்று விளையாட்டாக சொல்ல...

வேகமாக நிமிர்ந்தவள்,

“அஞ்சனா மேல ப்ராமிஸ்?”, என்று அவனைக் கேட்க.. அதை எதிர்பாராதவன் திகைத்தவனிடம்,

“உனக்கு பொண்ணு பார்க்க என்கிட்ட சொல்ல பயப்படுறே! அது போல தானே எனக்கும் இருக்கும்!”, என்று தோளை குலுக்கி லாஜிக் பேச... இவனோ சினந்து அவளை உற்று நோக்கி,

“ப்ராமிஸ் பண்ணா தான் நம்புவியா?”,

கோபக் குரலில் அவன் கேட்ட விதத்தில் இவள் மனம் குன்றலடைய... அனிச்சையாக மறுப்பாக தலையை அசைத்தவள்...

அடுத்த கணமே, “கூல் அண்ணா! உன்னை நம்புறேன்! இனி உன் விதியை யாராலும் மாத்த முடியாது!”, என்று கண் சிமிட்டி புன்னகைக்க.. குளிர்ந்தவன் அறியவில்லை - அது அவளது காதல் ஆசையை துளி கூட தடுக்க போவதில்லை என்று!

நாட்கள் மெல்ல நகர... அஞ்சனாவின் காயம் வேகமாக ஆற... அந்த நாளும் வந்தது - அஞ்சனா வேலைக்கு செல்லும் நாள்... அதே நாள் தான்  ராகவ்வும்  மதுரைக்கு திரும்ப வேண்டியிருந்தது..

வம்பர் 16

அன்று அதிகாலை நேரமே மதுரைக்கு கிளம்பிய  ராகவ் அஞ்சனாவை நோக்கி,

“குட்டி, தனியா இருந்துடுவியா?”, எத்தனாவது முறை இந்த கேள்வியை கேட்டான் என்று அவனுக்கே தெரியாது...

“இருந்துடுவேனே! நைட் மட்டும் கொஞ்சம் கஷ்டம்.. அதுக்கு நம்ம தேன் இன்பம் இருக்கும் பொழுது கவலை இல்லை” என்று சொல்ல..

“தேன் இன்பமா??”, அவன் முழிக்க..

“ம்ம்.. கம்யூட்டர் நெட்வொர்க்ஸ்ன்னு ஒரு செங்கலை புத்தகமா எழுதின பெரிய மனுஷர் Tanenbaum! அவரோட நெட்வொர்க் காவியத்தை திறந்தாலே  கொட்டாவியா வரும்.. ஒரு லைன் வாசிச்சதும் கண்ணு சொருகும்..”, என்று பாவனையுடன் சொல்லி,

“அந்த புக்கை அப்படியே தலை மாட்டிலே வச்சு படுத்தேன்னா, கம்யூட்டர் நெட்வொர்க் என்ன ஹெவன்லி நெட்வொர்க்.. அதாவது சொர்க்கத்தையே பார்த்திட்டு வந்திடலாம்”,

என்று சொல்ல சிரித்தது ராகவ் மட்டுமில்லை.. அருகில் நின்ற பவதாரிணியும்... அவர் ராகவ்விடம்,

“அது ஒன்னும் பிரச்சனை இல்லை ராகவ். சைலஜா பார்த்துக்கிடுறேன்னு சொல்லியிருக்கா. தேவைபட்டா அவளே கூட துணைக்கு வந்து படுத்துக்கிறேன்னா. அந்த நிம்மதியில் தான் அடுத்த வாரம் நானே ஊருக்கு கிளம்புறேன்”,

என்று சொல்ல, அந்த விளக்கத்தில் திருப்தி அடைந்தவனாய் அஞ்சனாவைப் பார்த்து,

“லாங் டேர்ம் கோலுக்கு முதல் அடிக்கலை வைக்கிறே! ஆல் தி பெஸ்ட்!”, என்று ஊக்குவிக்க, நன்றி சொன்னவள் மனதிற்குள்,

‘ஷார்ட் டேர்ம் ஷார்ட் டேர்ம் கோல்க்கும் இன்னைக்கு தான் அடிக்கல்! பெல்லி பாய் கருணையில்’, என்று வேண்டிக் கொண்டாள்..

அவன் சென்ற பின், அடுத்த சீக்கிரமாக குளித்து கிளம்பி வந்து நின்றவளை கண்ட பவதாரிணி,

“பத்து மணிக்கு போகணும்னு சொல்லிட்டு இப்பவே வந்து நிக்கிற?”, என்று கேட்க...

“கோவிலுக்கு போயிட்டு வேலைக்கு போறேன்! இப்போ, வீட்டு சாமி ப்ளஸ் நீங்க பண்ணுங்க”, என்று சொல்லி பவதாரிணியிடம் ஆசி பெற்று கிளம்பியவள்..

தனது இஷ்டமான பாயின்டட் ஹீல்ஸ்சை போடும் பொழுது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.