(Reading time: 25 - 49 minutes)

ப்போ தான் புண் ஆறிட்டு வருது.  இதை ஏன் போடுற...”, என்று பவதாரிணி புலம்புவதை  எதையும் காதில் வாங்காமல்.. லவ் யு.. சி யூ... மற்றும் சில   முத்தங்களை அவர் கன்னங்களில் சிதறிடித்து விட்டு சென்றாள்.

அந்த நவசக்தி விநாயகர் கோவில் பக்கம் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த ரோட்டிற்குள் காரை டிராபிக் போலீஸ் அனுமதிக்கவில்லை..

“பழனி அண்ணா! நான் இறங்கி நடந்திடுறேன். சாமி கும்மிட்டு வர கொஞ்சம் லேட் ஆகும்! கால் பண்றேன்”, என்று  அவர்கள் வீட்டு ஆஸ்தான டிரைவரிடம் சொல்லி விட்டு கோவிலை நோக்கி நடந்த அஞ்சனா,

கோவிலுக்கு எதிரே இருந்த பூக்கடையில் விநாயகருக்கு சாத்த அருகம்புல் மாலையை வாங்கிக் கொண்டு ரோட்டை கடக்கும்  பொழுது... தேங்காய் சில் ஒன்று இவள் நெற்றியில் தெறித்தது...

வலியுடன் தேய்த்துக் கொண்டே... கூட்டத்தினிடையே அது வந்த திசையைப் பார்த்தாள். யாரோ இருவர் தேங்காய் உடைத்து கொண்டிருப்பது குத்து மதிப்பாக தெரிய... 

அதை வேடிக்கை பார்க்கும் சமயம்.... அவள் முன்னே கிடந்த தேங்காய் சில்லை எடுக்க ஓடி வந்த சிறுவன் கீழே விழ... இவள் கவனம் அவன் மீது திரும்ப... வேக வேகமாக குனிந்து அவனை தூக்கும் பொழுது...

இன்னொரு சிறுவன் வந்து அந்த தேங்காய் சில்லை எடுத்து கொண்டு ஓடினான்..

“டேய் குடுடா. என்னோடது..”, என்று அவன் பின்னே ஓட முயன்றவனை  சட்டையை பிடித்து நிறுத்திய அஞ்சனா,

“வேட்டைக்கு போற சிங்கத்தை பாரு! ”, என்று கிண்டலாக சொல்லிக் கொண்டே மாலை இருந்த கவரை அவனிடம் கொடுத்து,

“இதுக்குள்ளே ஒரு தேங்காவை உடைச்சு வாங்கிக்கோ...”, என்றாள்.

“அப்படி கொடுப்பாங்களா?”, அவன் சந்தேகமாக கேட்க,

“பெரிய வீட்டு குட்டியம்மா சொன்னாங்கன்னு சொல்லு...”, என்று கட்டளையாக சொன்ன பின் அவளுக்கு உரைத்தது.. அவள் இருப்பது அவர்கள் ஊர் அல்ல... சென்னையில்! அவள் உணர்ந்து தெளிவதற்குள் அவன் சிட்டாய் பறந்திருந்தான்..

‘பெல்லி பாய்.. எனக்கு எந்த அவப் பேரும் வராத படி, அந்த பையனுக்கு ஒரு தேங்காவை பார்சல் போட்டுடு’, என்று கடவுளிடம் சொல்லி விட்டு கோவிலுக்குள் சென்று விட்டாள்..

அந்த ஓடிப் போய் நின்றது ஆர்யமன் முன்னால்... பின்னே அவன் தானே வாசுவுடன் சேர்ந்து தேங்காய் உடைத்துக் கொண்டிருந்தான்! அந்த எஸ். பி. மனைவியின்  கோரிக்கையை நிறைவேற்ற! 

அந்த சிறுவன், “பெரிய வீட்டு குட்டியம்மா இதில் வைத்து தேங்காய் உடைக்க சொன்னாங்க” என்று ஆர்யமனிடம் சொல்ல..

வாசு, “இப்படி சொன்னது எந்த  பாட்டியம்மா?”, என்று இடக்காக கேட்க...

“அவங்க ஒன்னும் பாட்டி இல்லை.. அக்கா!! நீங்களே பாருங்க!”, என்று சொல்லிக் கொண்டே  அந்த சிறுவன்... அவளை காட்டலாம் என்று  தேட அவளோ கண்ணில் படவில்லை.. ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுவனிடம்,

“சரி.. சரி.. நீ கேட்டது போலவே உடைச்சு தர்றேன்!”, என்று அந்த கேரி பேக்கிற்குள் தேங்காயை போட்டு உடைத்து குடுத்தான்..  பையில் சிறிது சேதம் என்றாலும்.. தேங்காய் உடைந்து விட்டது... பைக்குள் தேங்கி இருந்த தண்ணீரை வடித்த படி..

“ஆனாலும், அந்த குட்டியம்மா பெரிய புத்திசாலி தான் மச்சி! வாட் எ ஐடியா! எல்லா தேங்காயையும் இதே டெக்னிக்லே உடைச்சிடலாம்!”, என்று ஆர்யமன் வாசுவிடம் வாயார புகழ...

‘குட்டியம்மாவா... பாட்டியம்மாவான்னு தெரியாம போச்சே!’, என்ற கவலையில் 

இருந்த வாசுவோ,                  

“ஒரு கேரி பேக் வைத்து ஐ.கியூ. வை கண்டுபிடிக்கிற புத்திசாலித்தனம் உனக்கு மட்டும் தான்!”, என்று நக்கலடித்தான்.

“ஐ. க்யூ. மட்டும் இல்லை மச்சி அந்த பொண்ணுக்கு நல்ல மனசும் இருக்குது! இந்த பேக்ல இருந்து அருகம் புல் வாசனை வருது.. சாமிக்கு மாலை வாங்கிட்டு வந்திருக்கிற பையை கொடுத்து விட்டுருக்கு!”,

என்று அந்த பையின்  நதி மூலம் ரிஷி மூலத்தை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது...  தற்செயலாக அந்த பையில் இருந்த

நித்யா பேன்சி ஸ்டோர்ஸ்”

என்ற எழுத்துக்கள் மீது அவன் பார்வை படிந்து நிலைத்தது..

உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பிரதேச பரிசோதனையில் சென்னையைச் சேர்ந்த நித்யா...,

அடி மனதில் புதைந்த அந்த தொலைக்காட்சி செய்தி  மறுஒளிபரப்பாக... இதயத்தை சுக்கு நூறாய் உடைத்தது போன்ற வலி..

ஆனால், எதையும் வெளிக்காட்டாமல்.. தனக்குள்ளே பூட்டி வைத்து கொண்டவனிடம் சற்று முன் இருந்த கலகலப்பு தொலைந்து போனது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.