(Reading time: 25 - 49 minutes)

ன்று நித்யா தன் கடைசி தடத்தை விட்டு சென்ற நாள் என்பதாலோ என்னவோ...  அவளின் நினைவு அதிகமாக தூண்ட படுகிறதோ?’

தனக்குத் தானே எண்ணிக் கொண்ட பொழுது.. 

காற்றில் கலந்து வந்த கோவில் மணியோசை ஏனோ தெய்வத்தை நாட தூண்டியது..

நல்ல எண்ணங்களை விதைக்கும் ஓங்கார ஒலி வடிவத்தை உருவாக்க நம் முன்னோர்களால் படைக்கப்பட்ட அந்த கோவில் மணியை ஆசை தீர அடித்து விட்டு தன் இஷ்ட தெய்வத்திடம் தன் வருகையை பதிவு செய்த அஞ்சனா...

கற்பகிரகத்தில்  இருந்த  நவசக்தி பிள்ளையாரை வணங்க சென்றாள் அஞ்சனா.

முதல் வேலையாக தான் வாங்கி வந்த மாலையை சாத்த சொல்லி அவன்  திரு உருவை கண்களால் தரிசித்து மனதில் நிறைத்து விட்டு, தன் வேண்டுதலை நிறைவேற்ற ஆரம்பித்தாள்...

நூற்றி எட்டு தோப்புக்கரணங்கள்!!! சளைக்காமல் போட்டவளுக்கு அத்தனை உறுதியும், தீவிரமும் வேண்டுதல் மீதா? கடவுள் மீதா?

பீச் கலர் லாங்க் ஸ்கர்ட் மற்றும் வெள்ளை டாப்... பார்க்க எடுப்பாக நாகரிக பெண் போல தெரிபவள் இப்படி வெகு நேரம் தோப்புக்கரணம் போடுவதை சற்று வித்தியாசமாக பார்த்தனர் கோவிலில் இருந்தவர்கள்..

அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அஞ்சனா இல்லை.. அப்படி கவனிப்பது அவள் குணமும் இல்லையே..

தோப்புக் கரணம் போட்ட களைப்பை ஒரு பொருட்டாக எண்ணாமல்... இரு கை கூப்பி, கண்களை மூடிய வண்ணம், தினமும் பவதாரிணி பாடக் கேட்டு, தன் கேள்வி ஞானத்தில் கற்றுக் கொண்ட அந்த விநாயகர் அகவலை பாட ஆரம்பித்தாள்.

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

அகவலின் பொருள் புரியாவிட்டாலும்... அதை பக்தியில் குழைத்து  இசைத்த விதம் கேட்பவர் மனதை இறைவனிடம் ஒன்ற வைத்தது.

அவள் பாடல் முழுவதையும் பாடி முடிக்கும் சமயம்....

தான் கொண்டு வந்த தேங்காய்களை உடைத்து முடித்த பின், நித்தியின் நினைவுகளை வாசுவிடம் பகிர்ந்து விட்டு கோவிலுக்குள் நுழைந்திருந்தான் ஆர்யமன்.

கடைசி அகவலை கேட்ட பொழுது.. மீண்டும் ஒரு முறை கேட்க மாட்டோமோ என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றியது உண்மை. கோவிலுக்கு வந்ததில் ஒரு அமைதி கிடைக்க... நேராக கர்பகிரகத்தின் முன் இருந்த ஆண்கள் வரிசையில் அவனும், வாசுவும் வந்து நின்றனர்..

‘கடவுளே, நித்திக்கு நடந்தது போல யாருக்கும் நடந்து விடக் கூடாது.. ’, இழப்பில் துவண்ட நெஞ்சத்திற்கு இன்னொரு இழப்பையோ.. ஏமாற்றத்தையோ தாங்கும் தைரியம் இல்லை. அதற்கு பயந்து தானே பப்பியை கற்பனையில் மட்டுமே நிறுத்தி வைத்திருக்கிறான்! அந்த கற்பனைக்கும் தீனி வேண்டுமே!!

அப்பொழுது தான் ‘பப்பியை சீக்கிரம் கண்ணில் காட்டு.’ என்ற அவனின் வேண்டுதலும்.. அதை இடையூறு செய்யும் விதமாக எதிரே உள்ள பெண்ணை பார்க்க சொன்ன வாசுவின் தூண்டுதலும் அரங்கேற...

அவன் கண்ணெதிரே தீவிர பிரார்த்தனையில் இருந்த பெண் அஞ்சனா!!!

‘பெல்லி பாய்.. ரைமிங்கா வரணும்னு தான் பாய்ன்னு சொல்றேன்! என் ஃப்ரண்ட், பிலாசபர், காட் எல்லாமே நீதான்... எனக்கு தெரியலை.. இந்த லவ் யாரை பார்த்தா வரும்ன்னு... கண்ணுல தொடங்கி ஹார்ட்க்கு போகும்ன்னா... ஹார்ட்ல தொடங்கி கண்ல முடியும்ன்னு.. சினிமா பார்த்து தான் தெரியும்..“

“எலக்ட்ரானிக்ஸ் க்ளாஸ்ல வர்ற சர்க்யூட் டையகிராம்க்கே கனெக்ஷன் போட தெரியாத எனக்கு எப்படி இந்த காதல் கனெக்ஷன் எல்லாம் போட வரும்!“

“இருந்தாலும்.. முயற்சி பண்ணி பார்த்தேன்.. நல்லவன்னு நினைச்சு பார்த்தா நல்லவனா தெரியுறான்.. கெட்டவன்னு நினைச்சு பார்த்தா கெட்டவனா தெரியுறான்.. நானும் பல பசங்களை பார்த்து குழம்பி போய்.. பாஜிகிட்ட கேட்டு அடி வாங்கினது தான் மிச்சம்.. இப்போ கூட கெட்டு போகலை.. மொழி படத்தில் வர்ற மாதிரி ஒரு லைட்.. ஒரு பெல் சவுன்ட்....“

“ஹை பட்ஜெட்டாக சொல்லணும்னா ஜூராசிக் பார்க்ல டைனோசர் வர்றதுக்கு முன்னாடி அலர்ட் செய்றது போல எனக்கு அலர்ட் செய்தா போதும்.. நீ சிக்னல் கொடுத்தா.. அசால்ட் அஞ்சனா அலர்ட் அஞ்சனாவாகிடுவா.. ப்ளீஸ்’,

என்று அவள் மானசீகமாக மன்றாடிக் கொண்டிருந்தாள்...

இவன் கண் திறக்கும் பொழுது... அங்கே பலத்த காற்று சுழற்றி அடித்து... தன்  மானப் பிரச்சனையில் கவனம் திரும்ப,

இவன் தான் இல்லை... அஞ்சனாவாவது கண்ணைத் திறந்து பார்ப்பாளா என்று அவளின் ‘பெல்லி பாயே’ ஏங்கி நிற்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.