(Reading time: 25 - 49 minutes)

வளோ, “வரன் பார்க்கிற வேலைக்கு என் பெல்லி பாயை அப்பாயின்ட் பண்ணி ஆர்டரும் பாஸ் பண்ணியாச்சு.. சோ.. எது நடக்குமோ அது நடந்தே தீரும்! டோன்ட் வொர்ரி!!”,

என்று பெரிய மனுஷி தோரணையில் அறிவுரை சொல்ல..

தெய்வத்தை மீறிய செயல் எதுவும் உண்டோ என்று எண்ணிய பவதாரிணியால் அதற்கு மேல் அவளிடம் பேச முடியவில்லை. அதே சமயம், மனதிற்குள்,  ‘அவளுக்கு பிடிச்ச மாதிரி ஒரு நல்ல வரனை காட்டேன்!’, என்று அவரும் வேண்டிக் கொள்ள...

சைலஜா, “உனக்கு பிடிச்ச பெல்லி பாயை கொண்டு வந்தது போல.. உனக்கு பிடிச்ச மாப்பிள்ளையும் கொண்டு வந்துட்டா போச்சு!”, என்றதும்.. அவள்  கண்கள் மின்ன,

“பெல்லி பாய் உபயமானது உங்க வரவிலா சைலு ஆண்ட்டி! தேங் யூ சோ மச்!!!”,

நெகிழ்ச்சியுடன் சொன்னதோடு மட்டுமல்லாமல் முத்தங்களை பறக்க விட்டு  அவரை பெருமித்தில் ஆழ்த்தினாள்!

அதன் பின், பொதுவான பேச்சுக்கள்.. சைலஜாவும், பவதாரிணியும் புடவை, நகை அஞ்சனாவிற்கு போர் அடிக்கும் தலைப்புகளை பேசிக்  கொண்டிருக்க... டீயை குடித்து விட்டு அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அவள் நினைக்கு பொழுது,

ஆதியின் திருமணத்தை பற்றிய பேச்சு வந்தது. சைலஜா பவதாரிணியிடம்,

“அந்த சமயம் லண்டன் போனதாலே தான் ஆதி கல்யாணத்துக்கு வர முடியலை! அவனுக்கு லவ் மேரேஜ்ஜூன்னு கேள்வி பட்டேனே...”, என்று சைலஜா இழுக்க...

இதற்கு என்ன பதில் சொல்லவென்று யோசித்த பவதாரிணி,

“ஆதிக்கு பொண்ணு பார்க்கலாம்னு நினைச்சப்போ, அவன் காலேஜ் ஜூனியர் ஸ்வாதியை பிடிச்சு இருக்கிறதா சொன்னான்.”

“ஸ்வாதியும் பார்க்க நல்ல முக லட்சணமா.. நம்ம குடும்பத்திற்கு ஏத்த பொண்ணா தெரிஞ்சா! குடும்பமும் நல்ல குடும்பம். சட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிட்டோம்! ”,

என்று முடிக்க.. அஞ்சனா திறந்த வாயை மூடாமல் பார்த்தாள்.... எத்தனை சுற்று பேச்சு வார்த்தை போய் ஆதி இந்த திருமணத்திற்கு வீட்டில் ஒப்புதல் வாங்கினான் என்பது அவளுக்கு தெரியும் தானே!

“ஓ....அப்போ ஆதியே பொண்ணை தேடிகிட்டான்னு சொல்லு! பொண்ணு எப்படி சங்கரி அண்ணிக்கு திருப்தியா?”, என்று துருவ ஆரம்பித்தார்  சைலஜா!

“ஆமா ஷைலு! நாங்களா பார்த்திருந்தா கூட இப்படி ஒரு சூப்பர் பொண்ணு அமைஞ்சு இருக்காது!”,

என்று பதிலளித்தார் பவதாரிணி.

சைலஜா சராசரி பெண். மற்றவர்கள் விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும். ஒரு வேளை, சங்கரியிடம் இந்த கேள்விகள் கேட்க பட்டால் என்ன பதில் வருமோ அதையே பவதாரிணி சொல்லி வைத்தார்.

ஒரு கூட்டு குடும்பத்தில் மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி என்று அந்த குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கிடையே இருக்கும் புரிதல் தவறாகி போவதில் ஆரம்பிக்கும்  சிறு சிறு பிரச்சனைகள் தான்... பின்னர்  பெரிய மனஸ்தாபமாகி குடும்பமே சிதறி போக காரணமாகி விடுகின்றன...

இதை புரிந்து கொண்டவர் போல தெளிவாக பேசினார் பவதாரிணி.

அஞ்சனாவோ வேறு விதமாக புரிந்து கொண்டாள்.

‘ஆதி மாதிரி லவ் பண்ணிட்டு அப்புறமா வீட்டில் சொல்றது தான் பெஸ்ட்! இப்போ  ஸ்வாதி அண்ணியை வீட்டில் கொண்டாடுறாங்க. ஆதி பண்ண வேலைக்கு சர்டிபிகேட் வேற! நீயும் ஆதியைப் போல சர்டிபிகேட் வாங்கி காட்டணும்!’,

இப்படி ஆழமான யோசனை எதுவுமின்றி, மோலோட்டமாக தனக்கு புரிந்து கொண்டதை வைத்து அந்த முடிவுக்கு வந்திருந்தாள் - அதாவது காதலித்த பின் தான் வீட்டில் சொல்ல வேண்டும் என்று!!!

அன்றிரவே எல்லாரும் ஊருக்கு கிளம்பி விட்டனர். பவதாரிணியும், ராகவ் மட்டும் அஞ்சனாவுடன் துணையிருந்தனர் - அவள் காயம் ஆறட்டும் என...

சென்னைக்கு வந்த பின்... பாலாஜி இல்லாததை மறக்க நினைத்தவள் மனதை ஆக்கிரமித்தது காதல் ஆசை!

ஆனால், எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை.. யாரிடம் கேட்பது என்பதும் புரியவில்லை.. ஹர்ஷ்ஷிடமும், ராகவ்விடமும் இதைப் பற்றி தெரியாத்தனமாக கேட்டு வைக்க.. இருவரும் அவளை பயங்கரமாக ஓட்ட....

கடைசியில் ‘நாலேட்ஜ் அப்டேட்’ செய்ய  காதல்  பாடல்களையும் பார்க்கலாம் என்று எண்ணி டி.வி.யை போட்டாள். இவள் செய்வதை சிரிப்புடன்  கவனித்துக் கொண்டிருந்த  ராகவ்..

“குட்டி! என்ன பாபநாசம் கமலஹாசன் மாதிரி சினிமா பார்த்து உன் ஷார்ட் டேர்ம் கோல் அச்சீவ் பண்ணலாம்னு பார்க்கிறியா?”,

என்று கிண்டலடிக்க.. கடுப்பானவள்,

“நோ.. நான் என் சொந்த ஐடியாவை தான் யூஸ் பண்ணுவேனாக்கும்!”, என்று சவால் விட... இவன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.