(Reading time: 44 - 87 minutes)

காவேரி அம்மா…. என்ற குரல் கேட்டு அனைவரும் அறையிலிருந்து வெளியே வர, அங்கே வைஜெயந்தி நின்றிருந்தார் கையில் தட்டுடன், கோகிலவாணி, கேசவன், மற்றும் விஜயுடன்…

வந்தவர்களை வாங்க என்ற வரவேற்ற காவேரி, வைஜெயந்தி வைத்திருந்த தட்டினைப் பார்த்தார்…

வைஜெயந்தியின் பார்வை அங்கே இருந்த ஜித்தின் பக்கம் செல்ல, அவன் துருவனை தூக்கி வைத்திருந்த கன்யாவின் கையினைப் பிடித்துக்கொண்டு நதிகாவை தூக்கிக்கொண்டு சென்றான்…

“என்னை மன்னிச்சிடுங்கப்பா… மன்னிச்சிடுங்கம்மா…. நான் நிறைய தவறு செய்துட்டேன்… உங்ககிட்ட இருந்தும் மறைச்சிட்டேன்…. இவ என்…” என சொல்ல ஆரம்பிக்க,

“எல்லாம் எங்களுக்கு தெரியும் ஜித்…” என்றார் வைஜெயந்தி….

அதிர்ச்சியில் உறைந்தவனாய் அவன் தாயைப் பார்க்க,

“விஜய் எல்லாம் போனில் சொன்னான் ஜித்…” என்றார் கேசவன்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ஆமா ஜித்… முதலில் விஷயத்தை கேள்விபட்டு கோபம் வந்ததென்னவோ உண்மைதான்… ஆனால் உன் மன நிலையும் புரிந்து கொள்ள முடிந்தது எங்களால்… காதல் தான் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது…” என ஒரு பெருமூச்சுடன் வைஜெயந்தியும் கூறிவிட்டு,ச்,

“கன்யா நீ நம்மாத்து மாட்டுப்பொண்ணு… அப்படித்தானேன்னா?...” என கணவனையும் துணைக்கழைக்க அவரும் ஆம் என்றார்…

பின் கன்யா, குழந்தைகளுடன், பெற்றவர்களின் காலில் விழுந்து வணங்கியவன், காவேரியின் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டான்…

தள்ளி நின்று கொண்டிருந்த விஜய்யை அணைத்துக்கொண்டவன், “சாரிடா… உன்னை நான் ரொம்பவே கஷ்டப்படுத்தியிருக்கேன்… மன்னிச்சிடுன்னு கேட்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியலை… ஆனாலும் நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டுக்குறேண்டா… சாரிடா விஜய்….” என்று கூற,

“பரவாயில்லை ஜித் விடு…” என்றவன் தமையனுக்கு ஆதரவாக பேச, அடுத்து ஜித் சென்றது ருணதியிடம் தான்…

“என்னை மன்னிச்சிடு ருணதி… உனக்கும் உன் குடும்பத்துக்கும் நான் செஞ்ச கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல… மன்னிச்சிடு…” என இருகைகூப்பி வேண்ட,

“மனசு மாறி நீங்க புரிஞ்சிகிட்டதே போதும்…” என அவள் சொல்ல, அவன் தலை தானாகவே குனிந்தது…

பின், “அம்மா, ருணதிக்கும், மகத்திற்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும்ம்மா… அதே போல விஜய்க்கும் நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் பேசி முடிக்கணும்…” என சொல்ல வைஜெயந்தி சிரித்தார்…

“என்னம்மா சிரிக்குறீங்க?...”

“சம்மந்தம் பேசி முடிக்கத்தான் நானும் உங்க அப்பாவும், பாட்டியும் வந்திருக்குறோம்…” என்று கூற அவன் புரியாமல் விழித்தான்…

“ஆமா ஜித்… நீ சொன்னது போல மகத்துக்கும் ருணதிக்கும் கல்யாணம் பேசி முடிக்கவும், உன் தம்பி விஜய்க்கு பவித்ராவை பேசி முடிக்கவும் தான் வந்தோம்…” என்று கூற, அவன் பார்வை இப்போது விஜய்யிடம் வந்து நின்றது புன்னகையுடன்…

“விஜய்… நீயும் காதல் கல்யாணம் தானா?...” என அவன் காதோடு ரகசியமாய் ஜித் கேட்க, அவன் ஆம் என்பது போல் சிரித்தான்…

“அடப்பாவி… டேய்… எல்லா ப்ளாஸ்பேக்கையும் போனிலேயே சொல்லி முடிச்சிட்டு இப்போ கல்யாணம் பேசவும் பிளான் பண்ணிட்ட…. டேய்… சரியான கேடிடா நீ…” என பிரபு விஜய்யை கிண்டல் செய்ய,

“என்னடா செய்ய, இதுக்கு மேலயும் பொறுமையா இருந்தா, உன் தங்கச்சியை சமாதானம் செய்ய முடியாது என்னால… அதான் களத்துல சீக்கிரம் இறங்கிட்டேன்…” என்றான் விஜய்…

“இதோடா… நீ வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லு… அதுக்கு உங்கிட்ட பொறுமை இல்லன்னு சொல்லு… நான் ஒத்துக்குறேன்… அதை விட்டுட்டு இப்படி பீலா விடாதடா அதுவும் ஒரு போலீஸ்காரனா இருந்துட்டு…”

“ஹாஹாஹா… ஹ்ம்ம்… ஏதோ ஒண்ணு…. எப்படி வேணாலும் வச்சிக்கோ….” என கலகலவென விஜய் சிரிக்க, அனைவரின் பார்வையும் அவன் மீது திரும்பியது…

“பிரபு ஒரு ஜோக் சொன்னான்… அதான் சிரிச்சிட்டேன்ம்மா… நீங்க பேசுங்க…. ஹ்ம்ம்…” என எடுத்துக்கொடுத்துவிட்டு பிரபுவை அவன் பார்க்க, “அடப்பாவி….” என்றான் பிரபு…

அனைவரின் முகத்திலும் சந்தோஷம் மின்ன, பவித்ரா மட்டும் கையை பிசைந்து கொண்டிருந்தாள்…

அதை கவனித்த மகத், அவளருகில் சென்று, “பவித்ரா….” என அழைத்தான்…

அவனின் குரல் கேட்டு தூக்கி வாரிப்போட நிமிர்ந்தவளை, பார்வையாலே வருடினான் இங்கே விஜய்…

“சொ… சொல்….லு….ங்க….. சா….ர்………” என பேசியவளை நிதானமாக பார்த்த மகத்,

“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்குறோம்டா… கல்யாண வயசில பொண்ணு இருந்தா பொண்ணு கேட்குறது சகஜமான ஒண்ணு… அவங்களுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு வந்து பொண்ணு கேட்குறாங்க… இப்போ எங்க பதிலை விட உன் பதில் தான் முக்கியம்… விஜய் எங்க கிட்ட வந்து உன்னை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்னு சொன்னப்போ எனக்கு தவறா தெரியலை… அவர் மனசுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு… வீட்டிலேயும் பேசி இப்போ குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்குறார்… நமக்கு பிடிச்சதுன்னா நம்ம சரி சொல்லுவோம்…. இல்ல முடியாதுன்னு சொல்லுவோம்… ஆனா அதுல முக்கியமானது உன்னோட விருப்பம் தான்… நீ என்ன சொல்லுறம்மா?.. எங்களுக்கு பிடிக்குறது முக்கியம் இல்ல… வாழப்போறது நீ… உன்னோட விருப்பம் தான் முக்கியம்டா… உடனே சொல்லணும்னு எதுவும் இல்லை… நீ யோசி… அவங்ககிட்ட நான் டைம் கேட்குறேன்… நீ நிதானமா யோசிச்சே சொல்லும்மா… சரியா…” என்றவன், அவள் அவனைப் பார்ப்பதையே தெரிந்து, “திரும்பவும் சொல்லுறேன்… உன் விருப்பம் தான் முக்கியம் எங்களுக்கு….” என சொல்லிவிட்டு நகர,

“என் விருப்பம் முக்கியம்னு நினைக்குற என்னோட குடும்பம் எடுக்குற முடிவு எனக்கு நல்லதா தான் இருக்கும்… அதுல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு… டைம் எல்லாம் வேணாம் சார்… உங்க விருப்பம் தான் என் விருப்பமும்… நீங்க யாரைப் பார்த்து கல்யாணம் பண்ண சொன்னாலும் நான் பண்ணிப்பேன்… என் வாழ்க்கையில முடிவெடுக்குற அதிகாரம், உரிமை எல்லாம் எனக்கு இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது… ஆனா அது உங்களுக்கு என்னைக்கும் இருக்குன்னு மட்டும் என்னால சொல்ல முடியும்… காவேரி அம்மா, பிரபு அண்ணா, நீங்க, எல்லாரும் தான் என் குடும்பம்… என் குடும்பம் என் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நான் அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைக்குறேன்…” என அவள் சொன்னாள் நிதானமாக…

நிறைவு காவேரியின் முகத்தில் நிறைந்திருக்க, அவர் மகத்தினைப் பார்க்க, “நீ பேசினது எங்க எல்லாருக்கும் சந்தோஷம் தாண்டா… ஆனா, என் கேள்வி ஒண்ணு தான்… உனக்கு விஜய்யைப் பிடிச்சிருக்கா இல்லையா?...” என அவனும் பொறுமையாக கேட்க, அவள் தலை நிலம் நோக்கி குனிந்தது….

“சொல்லுடா…” என மகத் கனிவாக கேட்க, “ஹ்ம்ம்….. பிடிச்சிருக்கு…..” என சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து அவள் ஓடிவிட, அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது…

பெரியவர்கள் அடுத்து நடக்க வேண்டியவற்றை பேசி முடிக்க, மெதுவாக அங்கிருந்து அகன்றான் விஜய்…. பவித்ராவை தேடி….

அங்கிருந்த மரத்தின் அருகே நின்று சிரித்துக்கொண்டிருந்தவளிடம்,

“பிடிச்சிருக்குன்னு என்னைப் பார்த்து சொல்லியிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டுருப்பேன்ல… ஹ்ம்ம்…” என குரல் கேட்க திரும்பி பார்த்தவள், அவன் அங்கே நிற்பதைப் பார்த்துவிட்டு கைகளை பிசைய ஆரம்பிக்க,

“ஹேய்… என்னைப் பார்த்து எதுக்கு பயம்?... நான் உனக்கானவன்…” என சொல்ல மெல்ல அவன் விழி பார்த்தாள் அவள்…

“புரியுதா சொல்லுறது…” என அவன் கேட்க, ஹ்ம்ம்… என்றபடி தலை அசைத்தாள் அவள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.