(Reading time: 44 - 87 minutes)

 

ரி இப்போவாச்சும் சொல்லு… என்னைப் பார்த்து நேரா சொல்லு… ஒரே ஒரு தடவை ப்ளீஸ்…” என அவன் கெஞ்ச,

“என்ன சொல்லணும்…” என்றாள் அவள்…

“ஓ… தெரியாதா?...” என்றபடி பேசிக்கொண்டே அவனும் அவள் பக்கம் நெருங்க, அவள் மெல்ல விழி உயர்த்தி அவனைப் பார்க்க,

“வி…..த்….ரா………………” என ராகம் பாடிக்கொண்டே அவளைப் பார்த்தவன்,

“சீக்கிரம் சொல்லுடா… ப்ளீஸ்… கேட்டுட்டு போயிடுறேன்… இல்லன்னா, என்னை மறந்துடுவேன்…” என தன் காதல் அவன் சொல்ல, அவள் வெட்க புன்னகை சிந்தினாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

“ஹேய்… வி….த்…ரா………… இப்படிஎல்லாம் செய்யதடி… நான் பாவம்….” என அவன் முகத்தினை பாவமாக வைத்து சொல்ல, அவள் இப்போது வாய் பொத்தி சிரித்தாள்…

“இங்க நான் ஃபீலிங்க்ஸோடு சொல்லுறேன்… உனக்கு சிரிப்பா இருக்கா?... உன்னை என்ன பண்ணுறேன் பாரு…” என அவன் அவளை மிக நெருங்க நினைக்க, அடுத்த நொடி அவள் அங்கே இல்லை… சிட்டாக பறந்து விட்டாள்…

“ஹேய்… நில்லுடி….” என அவளை துரத்திக்கொண்டே சென்றவனை தடுத்த பிரபு,

“இங்க எல்லாம் நல்லா தான் ஓடுற… ஆனா குற்றவாளிகளை பிடிக்க போகும் போது மட்டும் இந்த வேகத்தை நான் பார்த்ததே இல்லையே… எல்லாம் காதல் படுத்துற பாடு போலும்….” என்றவன்,

“இப்போதாண்டா நிம்மதியா இருக்கு… எத்தனையோ பேருக்கு லைஃப்ல நீ தண்ணி காட்டியிருக்குற… ஆனா இப்போ உனக்கே ஒருத்தி, அதும் என் அன்பு தங்கை தண்ணி காட்டிட்டா பார்த்தீயா?... ஹாஹாஹா… ஐ அம் வெரி ஹேப்பி…..” என சிரித்துக்கொண்டே சொன்ன பிரபுவின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டான் விஜய்…

“படுபாவி…” என சிரித்துக்கொண்டே பிரபு ஓட, அவனை துரத்தினான் விஜய்…

“எல்லாம் நல்ல படியா முடிஞ்சது….” என வைஜெயந்தி சொல்லுகையில்,

“இல்லம்மா இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கும்மா….” என்றான் ஜித்…

“என்னதுப்பா அது?...” என்று கேட்டவரிடத்தில்,

“வினயா அப்பாவ பார்த்து பேசணும்மா….” என்றான் ஜித் அமைதியாக….

“என்ன பார்த்து நீ என்னடா பேசப் போற???...” என்று கர்ஜித்தபடி அங்கே வந்தார் குருமூர்த்தி…

“டாடி…..” என்றபடி வந்த கன்யாவினைப் பார்த்து,

“இவனால உன்னை சந்தோஷமா பார்த்துக்க முடியாதும்மா… நீ அப்பா கூட வந்துடும்மா… வா…” என அவர் அழைக்க, அவள் மறுத்தாள்…

“கன்யா……………….” என அதிர்ந்து அவர் அவளைப் பார்க்க,

“டாடி… இத்தனை நாள் உங்களைப் பற்றி ஓரளவு தெரிஞ்சிருந்தும் உங்களோட இருந்தேன் நான்… ஆனா என்னைக்கு நீங்க தான் என் இந்தரை நான் பிரியறதுக்கு காரணம்னு தெரிய வந்துச்சோ அப்பவே உங்க மேல எனக்கு இருந்த அந்த பிடிப்பு போச்சு…. என்னை விட்டுட்டுங்க… நான் என் இந்தரோட, என் குழந்தைங்களோட சந்தோஷமா வாழ்ந்துட்டு போறேன்… நீங்க போங்க….” என சொல்ல,

தகப்பனாய், மகளின் மேல் அதீத பாசம் கொண்ட தந்தையாய் அவரால் அந்த வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை… இதற்காகவா, இந்த வார்த்தையை கேட்கவா அவர் அத்தனையையும் செய்தார்…

“குரு… நான் சொல்லுறதைக் கேளு… அவ அவ வாழ்க்கையைத் தேடிக்கிட்டா… அவ ஜிதேந்தரோட சந்தோஷமா இருப்பா… நீ கவலைப்படாம இரு…..” என காவேரி சொன்னதும்,

“அதை சொல்ல நீங்க யாரு… அவ என் பொண்ணு… எனக்கு உரிமை இருக்கு…. உங்களுக்கு என்ன உரிமை இருக்கு… இன்னும் சொல்லப்போனா நீங்க ஒரு அநாதை… இதோ இங்க நிக்குறானே இந்த மகத் இவன் ஒரு அநாதை… இவ்வளவு ஏன் இப்போ நீங்க நிக்குறீங்களே இந்த இடம் கூட எங்க அப்பா இடம்… என் அப்பா இடம்… அதை நியாபகம் வச்சிக்கோங்க… உங்களுக்குன்னு சொந்தம்னு சொல்லிக்க ஒரு ரத்த சொந்தமும் கிடையாது… ஒரு காணி நிலமும் கிடையாது… நீங்க எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டீங்களா?....” என அவர் காவேரியைப் பார்த்து வார்த்தைகளை சிதறவிட, மகத்தும், கன்யாவும் அவரைத் திட்டுவதற்கு வாயெடுக்கும் முன்னர்,

“நிறுத்துடா… உன் வெட்டி உதாசீனத்தை….” என்றபடி கத்தினார் சதாசிவம் தாத்தா…

“உன் அப்பா… எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா?.. சீ அவனுக்கு இப்படி ஒரு பிள்ளை… நினைக்கவே அறுவெறுப்பா இருக்குடா… மகத்தை யாருன்னு நினைச்ச?... என் நண்பன் பேரண்டா… என் மாதவனை பத்தி உனக்கு என்னடா தெரியும்?...” என்றவர் எழுப்பிய குரலில் ஒரு கணம் என்றாலும் அடங்கித்தான் போனார் குருமூர்த்தி…

அருளானந்தம்…

மெல்ல தன் உழைப்பால் முன்னேறி தனக்கென்று சமூகத்தில் ஒரு இடம் அவர் பிடித்துக்கொள்ள காரணமாயிருந்தது அருளானந்தத்தின் நண்பர் மாதவன்… அவர் பெரும் செல்வந்தரும் கூட…

செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கோதாவரி… அருளானந்தத்தின் வளர்ச்சியைக் கண்டு அவருக்கு விரும்பி பெண் கொடுத்தனர் கோதாவரியின் பெற்றோர்… ஆனால் அதற்கும் காரணமாயிருந்தது மாதவன் என்பது நிறைய பேருக்கு தெரியாது… முக்கியமாக கோதாவரிக்கு…

கோதாவரியின் உடன் பிறந்தவர்களை விட, மாதவனிடம் அதிக ஈடுபாடு, பாசம், அக்கறை கொண்டிருந்தார் அருளானந்தம்… அது ஏனோ ஆரம்பத்தில் இருந்தே கோதாவரிக்கு பிடித்தமாயில்லை… தன் கணவன் தன் வீட்டு ஆட்களுடன் இவ்வாறு இல்லாது அந்த மாதவனிடம் மட்டும் ஏன் இவ்வாறு இருக்கிறார் என்ற ஒரு வித ஆதங்கமே அவரின் மனதில் பகைக்கு வித்தாய் அமைந்தது…

எனினும் சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது அனைத்தும்… கோதாவரிக்கு குருமூர்த்தி பிறந்து அவன் பத்து வயது எட்டும் வரை…

கோதாவரிக்கு திடீரென்று உடல் நலம் குன்றி போக, மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் என்று தெரியவர, துடித்துப்போனார் கோதாவரி…

அப்போது அவரைப் பார்த்துக்கொள்ள, வந்தவர் தான் காவேரி… காவேரி என்ன தான் பிரியமாக கோதாவரியிடமும், குருமூர்த்தியிடமும் நடந்து கொண்டாலும், பதிலுக்கு வெறுப்பையேக் காட்டினர் இருவரும்… ஆனால் அதைக்கொஞ்சம் கூட பெரிதுபடுத்தாது கோதாவரியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டார் காவேரி…

காவேரியைப் பிடிக்காமல் போனதற்கு முதல் காரணம் அவள் மாதவனால் பரிந்துரைக்கப்பட்டவள்… அடுத்தது, அவளுக்கென்று சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாவரும் இல்லை… மற்றொரு காரணம் அவள் அருளானந்தத்தின் முறைப்பெண்… இது போதாதா கோதாவரி காவேரியை வெறுப்பதற்கு…

தான் காவேரி மேல் கொண்ட குரோதத்தினை கோதாவரி மகனிடமும் அணுதினமும் தெரியப்படுத்த, விவரம் தெரிய ஆரம்பித்திருந்த வயதில், குரோதம் என்னும் நஞ்சை அந்த அறியா பாலகனின் மனதில் விதைத்துவிட்டிருந்தார் அவர்…

அவருக்கு மிகவும் முடியாமல் போகவே, தனது நண்பன் மனைவி இல்லாத துயரை எப்படி தாங்குவான் என யோசித்த மாதவனுக்கு, காவேரியை ஏன் நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்ற, அதை அவர் மற்றவரிடத்திலும் தெரியப்படுத்த, முதலில் மறுத்தது கோதாவரி தான்…

கடைசியில், கோதாவரி வீட்டினரே அந்த மறுமணத்திற்கு சம்மதம் சொல்ல, நிலை கொள்ளாது தவித்தார் கோதாவரி…

கண்முன்னே கணவனின் திருமணத்தையும் கண்டவர், மகனிடம், உன்னுடன் இருக்க என்னை அனுமதிக்காது, என் வாழ்வினைப் பறித்த காவேரி மட்டும் எந்த நாளிலும் நிம்மதியாக இருந்திட கூடாது… அது ஒன்று மட்டுமே உன்னைப் பெற்றவளாகிய நான் உன்னிடம் கேட்கும் பிட்சை… என்றபடி கண்களை மூடிட, குருமூர்த்தி அன்றிலிருந்து தாயின் சொல்லினை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அணுதினமும் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினையை செய்து கொண்டே வந்தார்…

அனைத்தினையும் புன்னகையுடன் எதிர்கொண்ட காவேரியை ஏனோ அருளானந்தத்திற்கும் போக போக பிடித்து விட, காவேரியினை உளமாற நேசிக்க ஆரம்பித்தார் அவர்…

கணவனின் காதல் தெரிந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளில் யாதொரு குறையும் இன்றி பார்த்துக்கொண்ட காவேரியை அந்த வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார் குருமூர்த்தி… மறுத்த அருளானந்த்திடம், எனில் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்… இப்படியே காலம் முழுவதும் என் மனம் போன போக்கில் வாழ்க்கையை வாழுவேன்… அதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், எனக்கும் சம்மதம்… என்ற மகனின் வார்த்தையை எந்த தந்தையால் தான் தாங்கிக்கொள்ள இயலும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.