(Reading time: 44 - 87 minutes)

றைவனின் சந்நிதியில் மாலை மாற்றிக்கொண்டு, தன்னவளை தன் மனைவியாக்கிக்கொண்டான் மகத் அவள் கழுத்தினில் மூன்று முடிச்சினை போட்டு….

ஏனோ அவன் கைகளினால் தாலியை வாங்கிக்கொண்ட தருணம், மனதில் ஆர்ப்பரித்த உவகையும், அதுநாள் வரை அந்த உறவுக்கு காத்திருந்ததும் புரிய, விழிகளில் சேர்ந்த நீரோடு அவனை அவள் பார்க்க, அவன் விழி மூடி திறந்தான் மெதுவாக… அந்த ஒற்றை கண் சிமிட்டல் அவளிடம் என்ன சொன்னதோ, மொத்தமாக அவன் வசமாகி இருந்தாள் அவள்…

திருமணம் முடிந்ததும், இருவரையும் அருள் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்த காவேரி, குருவினைப் பார்க்க, அவர் தனது கைகளில் வைத்திருந்த பேப்பர்களை மகத்திடம் கொடுத்தார்…

‘என்ன இது…” என்று பிரித்து பார்த்தவனுக்குள், நம்ப முடியாத ஆச்சரியம் நிறைந்திருந்தது…

அருள் இல்லத்தின் உரிமையை காவேரி “கிருஷ்ண சகி….” என்ற பெயரில் பத்திரமாக மகத்தின் கைகளில் கொடுத்திருந்தார்… அதுதான் அவன் ஆச்சரியத்திற்கான காரணம்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“மதர்… இது… நான்…” என இழுத்த மகத்திடம் அவர் பேசி அவனை சமாதானப்படுத்த படாதபாடு பட வேண்டி இருந்தது…

“கடைசியில் பெயர் வேண்டுமானால் உங்கள் விருப்பப்படி இருக்கட்டும்… ஆனால் என்னைக்கும் நீங்கள் தான் இந்த இல்லத்திற்கு உரிமையுள்ளவராய் இருக்க வேண்டும்….” என மகத்தும் விடாப்பிடியாய் சொல்லிவிட, வேறு வழியில்லாது சிரித்துக்கொண்டே சம்மதித்த காவேரி, மகத்தின் நெற்றியில் நிறைவாய் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு சென்றார்…

காவேரியும் குருமூர்த்தியும் சென்றதும், மகத்தினையே பார்த்த ருணதியை, அவன் என்ன என்பது போல் பார்க்க, ஒன்றுமில்லை என்பது போல் தலைஅசைத்துவிட்டு அங்கிருந்த நீர்வீழ்ச்சியின் அருகே சென்றாள்…

“கிருஷ்ணா… என்னம்மா?... என்னாச்சு?....” என தன் பின்னாலேயே வந்த கணவனின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவள்,

அவன் அதிர்ந்து பார்த்ததும், “இதுக்குத்தான் இங்க வந்தேன்… அந்த நின்னு அவங்க அப்படி அம்மாவா முத்தம் கொடுக்கலாம்… பார்க்குறவங்க எதுவும் நினைச்சிக்க மாட்டாங்க… ஆனா நான் அப்படி செய்ய முடியாதே… என்னதான் மனைவி ஆகியிருந்தாலும் இடம் பொருள் ஏவல் எல்லாம் இருக்குதே… அதான் இப்படி தனியா இப்படி மறைவா இங்க வந்தேன்… நீங்களும் என் பின்னாடியே வருவீங்கன்னு தெரியும்….” என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தவளை ஆசையாக பார்த்தான் மகத்…

அவன் பார்வையில் மனம் கனிந்தவள், “ஹ்ம்ம்…கும்…. இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… இன்னைக்குத்தான் ஆசையா பார்க்க மனசு வந்துச்சாக்கும்… ஒன்னும் தேவை இல்லை… மூணு வருஷமா என்னை தள்ளி வச்சீங்கள்ள, இனி நான் உங்களை தள்ளி வைக்குறேன்… இப்படியே இருங்க இன்னும் மூணு வருஷத்துக்கு…” என அவள் போலி கோபத்துடன் சொல்ல,

அவன், “சரிடா கிருஷ்ணா… உன் விருப்பம் தான்… என் விருப்பமும்…” என அவன் சொல்ல, வேகமாக வந்து அவன் சட்டையை பிடித்தவள், “எதுக்கு சகி இப்படி இருக்குறீங்க?... என் ஆசை தான் பெருசா?... உங்களுக்கு ஆசையே இல்லையா?...” என கேட்டுவிட்டு அவனை விட்டு விலகியவள்,

“நான் சொன்னா சரின்னு சொல்லுறதா?... அப்படி எல்லாம் இருக்க முடியாது போடின்னு சொல்லவேண்டியது தான…” என கெஞ்சலும் கொஞ்சலுமாய் அவள் கேட்க அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை…

“என்னாயிற்று இவனுக்கு…” என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தவளுக்கு அழுகையே வந்துவிட்டது…

“போன்னு எப்பவும் என் உயிர் இருக்குற வரை சொல்லமாட்டேன்டா கிருஷ்ணா…” என்றவன், கண்ணில் மின்னும் குறும்பு பார்வையுடன், “வா……….” என இருகைவிரித்து அழைத்தால் அவள் தான் அழாமல் என்ன செய்வாள்?... பின்னே இத்தனை ஆண்டுகளாக அவள் காத்திருப்பதும் அவனின் இந்த ஒற்றை அழைப்புக்காகத்தானே…

ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டவள், “சகி…………….” என்ற வார்த்தைகள் மட்டும் சொல்லி அழுதாள்…

அவளை மெதுவாக விழி பார்க்க சொல்லியவன், முதலில் அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டு, அவள் விழி துடைத்துவிட்டு,

“சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல யாராவது அழுவாங்களாடா கிருஷ்ணா?...” எனக் கேட்க, அவன் முதல் இதழ் ஒற்றுதலில் தன்னை மறந்திருந்தவள், அவனின் இந்த கேள்வியில் அவனை பார்த்து முறைத்தவள்,

“உங்களை….” என்றபடி அவனின் முகம் எங்கும் அவள் முத்தமிட, அதுநாள் வரை அவன் அடக்கிவைத்திருந்த அவனது காதலும் நதியென பொங்கி பிரவாகமெடுத்தது…

இருகரம் கொண்டு அவளை அவன் இறுக அணைக்க, முத்தமிட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே அமைதியாகி போனாள்…

“ஹ்ம்ம்… அவ்வளவுதானாடா கிருஷ்ணா… என்னைன்னு சொல்லி என்னமோ ஆரம்பிச்சியே… அவ்வளவுதானான்னு…” கேட்க அவள் வெட்கம் கொண்டாள் அழகாய்…

அந்த வெட்கத்தினை வெகுவாக ரசித்தவன், அவள் முகத்தினை கைகளில் ஏந்தி, தாழ்ந்திருந்த அவள் விழிகளை தன்னைப் பார்க்கும்படி சொல்லிவிட்டு, அவள் கன்னத்தில் முத்தம் ஒன்று கொடுத்தான் இதமாக….

அடுத்த நொடி, அவனைப் பார்த்து சிரித்தவள், “என்ன சொல்லிட்டு நீங்க மட்டும் என்னவாம்?... அவ்வளவுதானா?...” என்று கேட்க வாய்விட்டு சிரித்தவன், அவள் முகத்தினை மேலும் தன் பக்கம் கொண்டு வந்தவன், அவள் விழி பார்த்தான்….

அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாது அவள் விழி மூடிக்கொள்ள, அவள் இதழ்களோ நடுங்கிக்கொண்டிருந்தது அவனின் முத்த போர்வைக்கு…

மெல்ல குனிந்தவன், புன்னகையோடு, நிறைவுமாய், அவளின் அதரங்களை சிறைப்பிடித்துக்கொள்ள, அவள் அப்படியே தன்னை தொலைத்தாள் அவனிடம்…

முதல் இதழ் முத்தத்தில் தன் சித்தத்தை தொலைத்தவளுக்கு முகம் எங்கும் வெட்கப்பூச்சு பரவியிருக்க, அதை கண் குளிர ரசித்தவன், அப்படியே அவளை நெஞ்சோடு சேர்த்து வைத்து அணைத்துக்கொண்டான்….

“கிருஷ்ணா………………………..” என்ற அழைப்போடு…..

“ஹ்ம்ம்ம்…… சகி…………….” என்றபடியே அவளும் அவனுள் புதைய வழி தேடி அவனை இறுக்கமாக கட்டிக்கொள்ள,

“கிருஷ்ண சகியாய்….” அவர்கள் இருந்த ஆலிங்கன நிலையைக்கண்டு, தென்றலாய் தவழ்ந்து வந்த பூங்காற்றும் அவர்களை வாழ்த்தி அவர்களை தொட்டு செல்ல, காற்றில் பறந்து மரத்தில் இருந்த பூக்களும் கீழே நின்றிருந்த அவர்கள் மீது சந்தோஷத்தில் விழ, அந்த நீர்வீழ்ச்சியும் தனது சந்தோஷத்தினை பகிர்ந்து கொண்டது சலசலக்கும் சத்தத்துடன்….

இது எனது மூன்றவாது தொடர்கதை…

தொடர்கதை எழுத வாய்ப்பு கொடுத்த சில்சீக்கு எனது முதல் நன்றி….

தொடரின் ஆரம்பித்திலிருந்து இறுதி வரை எனக்கு உறுதுணையாய் இருந்து ஒவ்வொரு வாரமும் தங்களது கருத்துக்களால் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து சில்சீ தோழர், தோழிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்…

இந்த கதையில் செய்த பிழைகளை அடுத்து வரும் தொடரில் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்… (அது என்னன்னு கேட்குறீங்களா?,  ரொம்ப குறைவான பக்கம் மட்டும் எபிசோடா கொடுத்தேன் இல்லையா நிறைய தடவை இந்த கதையில… அத தான் சொன்னேன் ஃப்ரெண்ட்ஸ்… சாரி…)

அடுத்து, புதிய ஒரு தொடர்கதையில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்… நன்றி…

முற்றும்

Episode # 36

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.