(Reading time: 23 - 46 minutes)

ல் ஷீபா பாட்டியை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்குப் போக அமேலியா ஆயத்தமானாள். ஹகீம் இல்லாமல் தனியாக எப்படி வீடு போய் சேருவது என பயந்தாள். ஹகீமிற்காக காத்திருந்தாள்  அவன் வரவே இல்லை. துணிந்து, தாமே செல்வது என முடிவெடுத்தாள் .

'சர் சர்ரென' அமெரிக்க ராணுவத்தினர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அமேலியா கதவு இடுக்கின் வழியே ராணுவத்தினர் செல்வதைப் பார்த்து பயந்தாள். 'இந்த ஹகீம் எங்கு சென்றான்?' என அவனை மனதிற்குள் திட்டியபடி மெல்ல கதவைத் திறந்து சாலையின் இரு பக்கமும் நோட்டம் விட்டு வேகமாக தன் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் இதயம் படபடத்தது  காற்று பலமாக வீசி அவள் மனதை மேலும் கலவரப்படுத்தியது  ராணுவ ஜீப்புக்கள், மற்றும் பீரங்கிகள் சாலையின் வழியே அவளை  நோக்கி வர ஆரம்பித்தன. அவள் பயந்து சிலையென நின்றாள். மறுபுறம் தீவிரவாதிகள் துப்பாக்கிகளோடு வந்து நின்றனர். அமேலியாவிற்கு ஒன்றுமே புரியவில்லை  மழை பெய்ய ஆரம்பித்தது.

தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடந்தது. குண்டுகள் அங்கும் இங்கும் பாய்ந்தன . ஆஹ்ஹ் ஓஹ்ஹ்வெ ன அலறல் சப்தம், அவ்வப்போது மின்னல். அமேலியாவை நோக்கி வந்த ஒரு குண்டு அவள் காதோரமாய் வெகு அருகில் சென்று சுவற்றில் மோதியது  அமேலியா பயந்து அலறினாள். அலறலைக் கேட்டு அமேலியாவை நோக்கிய  பீரங்கியில் இருந்த ராணுவவீரன், "அட கடவுளே! இந்த நேரத்தில் இவள் ஏன் இங்கு வந்தாள்?" என அவளருகே ஓடினான். அமேலியா மயங்கி சரிந்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு தன் பீரங்கிக்குள் அவளை பாதுகாப்பாய் வைத்துவிட்டு .தீவிரவாதிகளோடு சண்டையிட்டான். ஒரு குண்டு அந்த ராணுவ வீரன் மேல் பாய அவன் துடிதுடித்து இறந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

சண்டை தீவிரமடைத்த நிலையில், அமெரிக்க ராணுவத்தினரை மொத்தமாகக் கொல்ல தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். அருகிலிருந்த வீடுகள் இடிந்து விழுந்து அவ்விடத்தை புகைமண்டலம் சூழ்ந்து, மக்களின் அலறல் சத்தம் விண்ணை முட்டியது.  

அமேலியா மட்டும் பாதுகாப்பாக பீரங்கியினுள் மயக்க நிலையில் கிடந்தாள்.

தொடரும்...

Episode # 02

Episode # 04

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.