(Reading time: 20 - 40 minutes)

நான் உன்கிட்ட சரியா பேசினதே இல்லைன்னு சொல்ற.. அப்பறம் ஏன் எனக்கு ஹெல்ப் பண்ணுற நீ ?” என்று கேட்டாள் அவள். அவளுக்கு இப்போதைக்கு புகழைப் பற்றி தெரிய வேண்டும்..அவனை கொஞ்சமாய் நம்பினாலும், அவனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்னரே தன்னைப் பற்றி சொல்ல வேண்டுமென நினைத்துக் கொண்டாள் ஆயிஷா.

“ஏன்னா எனக்கு உன்னை பிடிக்கும்” என்றான் புகழ் காதலுடன்.

“ பிடிக்கும்ன்னா..?”

“ பிடிக்கும்ன்னா, பிடிக்கும்மா..அதையெல்லாம் சொல்லனும்னா,நான் உன்னை பார்த்ததுல இருந்து சொல்லனும்” என்றான் புகழ்.

“ சொல்லு நான் தெரிஞ்சுக்குறேன்” என்றாள் அவள். அவளை ஆழ்ந்து நோக்கினான் புகழ்.

“ என்ன பார்க்குற?”

“ உனக்கு என்னமோ ஆயிடுச்சு நினைக்கிறேன்” என்று கண் சிமிட்டினான் புகழ். அவனுக்கும் தன் மனதில் இருப்பதை கொட்டிவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு புறம் அவள் மீது இருந்த அளவு கடந்த காதல் காரணமாய் இருக்க, இன்னொரு புறம் அவளின் கண்ணீருக்கு இது மருந்தாகலாம் என்று நம்பினான் அவன்.

“ சரி சொல்லுறேன்.. ஆனா, வழக்கம் போல கோபப்பட்டுகிட்டு நீ போயிட மாட்டியே”

“ம்ம்ஹ்ம்ம் மாட்டேன்.. சொல்லு” என்று அவனுக்கு பச்சை கொடி காட்டினாள் ஆயிஷா.

“ நீ நம்ம ஏரியாவுக்கு குடிவந்து இன்றோடு 92  நாட்கள் ஆச்சு. இந்த 92 நாட்களுமே ஏதோ ஒரு வகையில் என்னை பாதிச்சிருக்க நீ.. நான் வளவளன்னு பேசுறதும் உன்னை பார்த்ததுமே உன்கிட்ட ஸ்னேகமாய் பேசுறதும் உனக்கு பிடிக்கலன்னு எனக்கு தெரியும். ஆனால், உன் கோபம் என்னை உன்னைவிட்டு தூரம் நிறுத்தியதே இல்லை.. நீ என்னை வெறுத்தாலும் உன்னை தொடர்ந்து வரனும்னு தோணும் எனக்கு..

அதுவும் என்னை பார்த்ததுமே முகம் சுளிச்சு மொறைச்சு பார்ப்பியே! ஹப்பாடா என்னை வெறுக்குறதுக்கும் இந்த உலகத்துல ஒரு பொண்ணு இருக்காள்ன்னு சந்தோஷமாய் இருக்கும்” ..அவன் சொன்ன விதத்தில் அவளின் முகத்தில் புன்னகை கீற்று உருவாகி உடனே மறைந்தது.

உன்னை பார்க்கத்தான் டெய்லி பார்க் கு வருவேன். அந்த பார்க்கை க்லீன் பண்ணனும்னு நான் முடிவெடுத்தப்போ நீ எனக்கு சப்போர்ட் பண்ணினது, க்ரூப்பா வேலை செய்ஞ்சாலும் என்னை மட்டும் மொறைக்கிறது.. என்னை பார்த்து மொறைச்சாலும் ரொம்ப அக்கறையா ஜூஸ் கொடுக்குறது..இப்படி நீ ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு மாதிரியா இருக்குறதை பார்த்துதான் உன்மேல எனக்கு லவ் வந்திச்சு.”

“ லவ்வா?” என்று அதிர்ந்தாள் அவள்.

“ என்ன லவ்வா? உனக்கு தெரியாதா ? அது தெரிஞ்சு தானே, எங்க நான் ப்ரொபோஸ் பண்ணிடுவேனோன்னு நீ , என்னை ப்ரண்ட் ப்ரண்ட்ன்னு மூச்சு மூந்நூறு தடவை கூப்பிட்டு வெச்ச? நல்ல வேளை நீ என்னை அண்ணான்னு கூப்பிடல” என்று பெருமூச்சுவிட்டு மீண்டும் அவளை சிரிக்க வைத்தான். இந்த முறை அவள் புன்னகையை மறைக்கவில்லை.

“ என் மனசுல காதல் இருந்தாலுமே, அதை உன் மனசுல புகுத்தனும்னு நான் நினைக்கல..உனக்கு நண்பனாய் இருக்குறதும் எனக்கு சந்தோஷம் தான். என்னை நம்பி, என்கிட்ட நீ கேட்ட ஃபிர்ஸ்ட் உதவி இது.. இதுக்காவும் தேங்க்ஸ்…” என்று பேச்சை கனிவாய் முடித்தான் புகழ். அவன் கனவிலும் நினைக்காத ஒரு கேள்வியில் அவனை கதி கலங்க வைத்தாள் அவள். இதை நிச்சயம் அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை.

“ ம்ம்… ஆமா, உன் பேரு என்ன?” என்று கேட்டு வைத்தாள் ஆயிஷா.பலமுறை அவன் பெயரை சொல்லி கேலி பேசி இருக்கிறாள் அவள். அப்படிப்பட்டவள் ஏன் தன் பெயரை கேட்க வேண்டும்?

அடுத்த அத்தியாயத்தில் ஷாக் ஆகுங்க புகழ்.. இப்போ நான் எண்ட் கார்ட் போடனும்.. ஹாஹா

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.