(Reading time: 35 - 69 minutes)

விவி…” என்று அவனை அழைத்தபடி, இடக்கையில் குழந்தயை ஏந்தி வலக் கையில் அவளை முதுகோடு பிடித்திருந்தவன்  முகத்தை இப்போது நிமிர்ந்து பார்த்த குழந்தை……

“சாதி விவி……பூ காதி…” என்றபடி காலி கூடையை அவனிடம் காண்பிக்கவென, கூடையை அது  ஒற்றைக் கையால் தலை கீழாய் தூக்கி ஆட்டிய விதத்தில், அதில் மீதி இருந்த ஒன்றிரண்டு இதழ்கள் விவனின் தலையில் முகத்தில் என சிந்தி விழ….

இன்னுமாய் அவனது புன்னகையின் ப்ரகாசம் கூடுகிறதென்றால்…. குழந்தையோ அவன் முன் முடி…முகம் என சிந்தியிருந்த இதழ்களை தன் பிஞ்சுக் கைகளால் தட்டிவிட முனைகிறது…… சிறு நொடி கண் மூடி அந்த பிஞ்சுக் கையின் ஸ்பரிசத்தை அவன் அனுபவிக்க….. அதை விழி

கொட்டாது பார்த்தபடி இப்போது ரியா மேடையின் படியேறத் தொடங்கி இருந்தாள்….

அடுத்து குழந்தையை இட கையால் மட்டுமாய் பிடித்துக் கொண்டவன்… குழந்தை இதழ்களை தட்டிவிட்டதில் கலைந்திருந்த தன் முன் முடியை அவன் தன் எந்நாளைய மேனரிசம்படி கலைக்கிறானா அல்லது சரி செய்கிறானா என புரியாத வகையில் கோதிக் கொள்ள….

அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவன் அருகில் வந்திருந்த ப்ரியாவுக்கு……மனம் சட்டென ஸ்லிப் ஆகி எங்கோ சென்று விழுகிறது…..ஸ்கூல் டேஸ் நியாபகம்….

 இப்படி செய்தபடிதான் ஓடுவான்…..

அவனோடான அந்த கால சின்ன சின்ன சண்டைகள்….அவனது வார்த்தை வாரல்கள்….. ஒன்றொன்றாய் மனதில் ஊர்வலம் போக…..

ஏனோ அவளை பிடித்து பின்னி வைத்திருந்த அத்தனை ப்ரச்சனைகளும், ஏன் இன்றைய நாளும் வயதும் கூட  பிணைப்பு நீங்கி பின்னிட்டு விலக….. அவளும் அந்த பள்ளி காலத்துக்குள் மீண்டுமாய் ப்ரவேசித்துவிட்ட ஒரு உணர்வுப் பரவசம்….

இவள் மனம் இப்படி டைம் மெஷின் இல்லாமலே டைம் ட்ராவல் போயிருந்த நிலையில் தான்  தொடங்கியது இவர்களது திருமண நடபடிக்கை…..

நினைவுகள் டெம்ப்ரரியாய் செய்திருந்த ஒரு இலகு நிலையில் அவன் பக்கத்தில் நின்றிருந்தவள், அடுத்து அவனுடன் மோதிரம் மாற்றிக் கொள்ளும் போதே அவனை நேருக்கு நேராக பார்க்க….. இப்போது அவனும் இவளை கண்ணோடு கண் பார்க்க…..

அவள் கண்ணில் அவன் ஃபுட் பால் மேட்சில் ஓடும் அந்த கோலமும் அதனோடான அவன் முக பாவமும்தான் வந்து போகிறது….

அதில் அவனை முடிந்த மட்டும் முறைக்க வேண்டும் என்பதெல்லாம் எங்கிருந்து நியாபகம் வர?

கடவுளே!! கற்பனை செய்திருப்பாளா அவள் அந்த பள்ளி நாட்களில்….இவனோடு இப்படி ஒரு வாழ்க்கை உருவாகுமென்று….. ? வாழ்க்கை யாரை எப்படி எங்கு அறிமுகப்படுத்தும் என யாருக்காவது தெரியுமா?

அவனுக்கும் இவனுக்குமான உறவின் நதி மூலம் தேடும் அந்தர நிலையில் அலைந்து கொண்டிருக்கிறது இவள் மனம்… அதில் மந்திரப் பொழிவாய்  அவனது புன்னகை பிம்பம்…..

 அடுத்து அவன் இவள் முகம் மறைத்திருந்த wedding veil ஐ  முறைப்படி பின் புறமாக எடுத்துவிட….இவள் இன்னுமே அவன் முகத்தையே பார்த்திருக்க….

அதை சற்றும் சட்டை செய்யாது, அவனோ  கருமமே கண்ணாயினார் ரேஞ்சில்..... அடுத்த அடுத்த நிகழ்வுகளை தொடர…..

அவன் செயலையே சிந்தாமல் சிதறாமல் ஃபுல் ஃபோகஸில் பார்த்தபடியே இவள் நொடி நொடியாய் காலத்தை செலவழிக்க..…..

இப்போது இவள் நேர் எதிரே வெகு வெகு நெருக்கத்தில் நின்று….. கண்ணில் கவன பாவம் காட்சிதர கையிலிருந்த கோல்ட் செயினை பிடித்து…. சற்றாய் தன் முகம் சாய்த்து இவள் கழுத்தைப் பார்த்தபடி, தன் வலக் கையை இவள் கழுத்தை சுற்றிக் கொண்டு போய், அடுத்தும்  இவள் முகம் முன்பாக  கொஞ்சமாய் குனிந்து…….. கீழ் உதடில் ஒரு அழுத்தம் காண்பித்தபடி.. தாலி செயினை அதன் ஹூக்கில் இணைத்து அவன் நிமிர……

அப்போதாவது தன் பார்வையை சந்திப்பான் என இவள் நினைத்திருக்க…..

அவனோ இவள் புறமாய் நிமிரக் கூட செய்யாமல் அவனுக்கு அருகில் நின்ற மஹியைப் பார்த்து மகிழ்ச்சியாய் புன்னகைக்க….. மஹியோ இவன் வலக்கையை இருகையாலும் இறுக பற்றிக் குலுக்கி மகா உற்சாகமாக வாழ்த்த….

அதற்குள் இவள் பார்வைக்கு படும் வண்ணம் பக்கத்தில் வந்திருந்த கண்மணியோ தன் அண்ணனுக்கு… எதையோ சொல்ல முனைந்தபடி அவன் கையைப் பற்ற…. இவன் முகம் நிறைந்த பூரிப்புடன்  தன் தங்கையைப் பார்க்க…...

அதற்குள் அவன் தங்கையோ பூரிப்பில் தொடங்கி பொத்து வரும் அழுகையில் நுழைந்து……சட்டென அவனை அணைத்து அவன் தோளில் முகம் புதைக்க……

கண்மணி என்ன சொல்கிறாள் என புரியவில்லை ப்ரியாவுக்கு……. ஆனால் அவள் அழுது கொண்டே எதையோ சொன்னாள்…..

இவனோ அழும் தங்கையை தன் இடக் கையால் அவள் பின் தலையோடு பற்றி அணைத்தபடி…

“நிம்மு…. !!! .என்னடா நீ….. ? நிம்மு……?” என தொடங்கிய விதம்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.