(Reading time: 35 - 69 minutes)

ரியு…ப்ளீஸ் கொஞ்சம் நான் சொல்றதையும் கேளேன்….” எழுந்து அவள் முன்பாக சென்று நின்றான்..

“ஒழுங்கா பேசுறதுன்னா பேசலாம்..” அவன் முகம் பார்க்காமல் சிடுசிடுத்தாலும் அவனை தாண்டிக் கொண்டு செல்லாமல் அங்கேயே நின்றாள்.

“சுடர் ஆன்டி அதான் நிம்முவோட மதர்இன்லா உன்ட்ட ஹார்ஷா நடந்துகிட்டதுக்கு ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் சாரி…. அவங்க பொதுவா எல்லார்ட்டயுமே ரொம்பவே ஸ்வீட்டா பேசுற டைப்…. அதான் அவங்க உன்னைப் பார்க்க வர்றது உனக்கு நல்லா இருக்கும்னு யோசிச்சேன்….பட் எது தப்பா போச்சுன்னு புரியலை…..” அதுவரை எங்கேயோ பார்த்தபடி அவன் சொல்வதை அசட்டையாய் கவனித்திருந்த ரியா

“எதுனாலும் அதை அவங்கட்ட பேசி சரி செய்றது என் பொறுப்பு….இனி இன்னொரு டைம் இப்டி ஆகாது….” அடுத்து அவன் கொடுத்த வாக்குறுதியில் பதறிப் போய் அவனைப் பார்த்தாள்.

“என்ன விளையாடுறீங்களா? நீங்க அவங்கள என்ன சொன்னாலும் அந்த கோபத்த அவங்க கண்மணிட்டதான காமிப்பாங்க….? ஏற்கனவே கல்யாணம் ஆன மறுநாள்ள இருந்து கண்மணிய என் பின்னால சுத்தவிட்றுக்கீங்க….அதுக்கே அங்க என்னென்ன ப்ரச்சனையாச்சோன்னு பயமா இருக்கு….”

கோபமாக் பேசிக் கொண்டு போனவள் இப்போது கண் சுருக்கி சிடுசிடுத்தாள்.

“சுத்த செல்ஃபிஷ் நீங்க….உங்களப் பொறுத்தவரைக்கும் உங்க வேலை நடந்தா போதும்….. உங்க தங்கச்சிக்கு என்ன ஆகும்ன்னுகூட யோசிக்க மாட்டீங்க என்ன…?”

இவள் திட்ட திட்ட அவன் முகத்தில் மீண்டுமாய் அந்த ரசிக்கும் முகபாவம்தான் வந்து நிற்கிறது..

இப்போது அவனை முறைத்தவள் “சுத்த பைத்தியம்… சைகோ..” என அவன் காதில் விழும் அளவுக்கு சிறுகுரலில் முனங்கிவிட்டு அவனை தாண்டி செல்ல முனைய…

அதற்குள் சுதாரித்திருந்த அவன்….. “சாரி ரியு கான்ட் ஹெல்ப் இட்…..சாரி…..என் இடத்துல இருந்து பார்த்தாதான் என் நிலமை புரியும்….” என ஆரம்பித்தவன் அந்த பேச்சை அங்கேயே நிறுத்தி…..

 “நாளைக்கு நிம்மு வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்…..நீயே வந்து பாரு….. அங்க எதுவும் பெருசா ப்ரச்சனை இல்லைனு உனக்கு புரியும்….. சுடர் ஆன்டிய நல்லா தெரியும் ரியு….. கிட்தட்ட ஒன் இயரா அவங்க வீட்டைப் பத்தி நல்லா விசாரிச்சு செய்த மேரேஜ் இது….. மேரேஜ் ஃபிக்‌ஸ் செய்த பிறகும் 5 மந்தஸ் நிம்மு கூட ஆன்டிக்கு  பழக்கம்….அவங்களுக்கும் நிம்முவுக்கும் நல்ல ரேப்போ…. அவங்க கூட இருந்தா அம்மா கூட இருக்க மாதிரி இருக்குது…… அத்த எங்க கூடவே இருக்க வழி இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்னு நிம்முவே சொல்லுவா……”

விவனின் பேச்சை பாதியில் இடையிட்டாள் இவள்… ”அவங்க கண்மணி கூட இல்லையா?”

சின்னதாய் மறுதலிப்பாய் தலை அசைத்தான் அவன். “ம் ஹூம்…..அவங்க வில்லேஜ்லதான் இருப்பாங்க…. இங்க நிம்முவும் மஹியும்தான்…”

“ஓகே…. கூட இல்லைனா கண்மணி சமாளிச்சிடுவாங்க..….இல்லனா இப்டி ஒரு அண்ணனுக்கு தங்கச்சியா  பிறந்ததுக்கு பாவம் அவங்க” சொல்லிவிட்டு ரியா வேகமாய் போய் பெட்டில் படுத்து குல்ட்டால் தலை முதல் கால் வரை மூடிக் கொண்டாள்.

அவள் கடைசியாய் சொன்ன வார்த்தையை வேறு யாராவது சொல்லி இருந்தால் என்ன செய்திருப்பானோ இவன்….? ஆனால் இவள் சொல்வதன் மொத்த அடிப்படை இவன் தங்கை  மேல் இவளுக்குள்ள அக்கறை அல்லவா…. ஆக ஒன்றும் சொல்லவில்லை இவன்…. நாளைக்கு நிம்முட்ட பேசினா புரிஞ்சுப்பா…..

விவன் எண்ணம் இப்படி ஓட மெல்ல தொடுகிறது ஒரு சிந்தனை இவனுக்குள்…. இத ஏன் இவ நிம்முட்டயே  கேட்கலை….. இவனுக்காக வெயிட் பண்ணி  இவன்ட்ட வந்து கேட்குது பொண்ணு?! தனக்குள் சிரித்துக் கொண்டான்… ‘ஜிலேபி கெண்ட என்ட்ட சண்டை போட தேடினியா? இல்லை என்னை தேடினியா?’

படுத்திருந்தவளைப் பார்த்தான்… குல்ட்டால் இழுத்து மூடி கிடந்தாள்….. இவன் ஏசி போட வேண்டும் என்பதற்காகவா?                 

“ரியு…” இவன் எதையோ ஆரம்பிக்க…

“முறச்சு முறச்சு பார்க்கிறவங்க முன்னால என்னால இப்டித்தான் படுக்க முடியும்….எனக்கு தூங்கனும்…” பிடிவாதமாய் வருகிறது அடுத்த வெடுக் அவளிடமிருந்து….”ஏசிய ஆஃப் செய்து தொலச்சுடாதீங்க….. அப்றம் இங்க கொதிக்கும்…”

விவனுக்குள் பூக்களின் பெருமழை.

‘எனக்காக ஏசிய ஆன் செய்ய இவ்ளவு ட்ராமாவா ஜிகே…..திட்றப்ப கூட நீங்க போங்கன்னு….க்யூட்டி பொண்டாட்டி… ’

அவன் நொடிக்கு நூறாயிரம் ஒளி ஆண்டு வேகத்தில் தன்னவளுக்குள் தலைகுப்புற விழுந்து கொண்டிருந்தான்….

சற்று நேரம் காத்திருந்தவன் அவள் பிடிவாதம் புரிய….. ஏசியை ஆஃப் செய்யாமல் மீண்டுமாய் ஷேர்ட் அணிந்து  சோஃபாவில் போய் படுத்துக் கொண்டான்.

தலை முதல் கால் வரை மூடிக் கொண்டு படுத்திருந்த ரியா அவனை திட்டிக் கொண்டேதான் தூங்கப் போனாள்….. ஆனால் விழித்தெழும்போது என்ன செய்தாளாம் அவள்?? ஏன் செய்தாளாம் அதை??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.