(Reading time: 35 - 69 minutes)

தைப் பார்த்திருந்த அவன் மனைவி, ஆணுருவில் கூட தாய் தோன்றக் கூடும் என அறிய போதுமானதாய் இருந்தது…..

அணைத்தபடி குனிந்து, அழுது கொண்டிருந்த தங்கையின் காதருகில், சின்ன குரலில் விவன் எதையோ சொல்லிக் கொண்டு போக…… அவன் தோளில் புதைந்திருந்தவள் சின்ன சின்ன தலையசைப்போடு அதை எப்படியோ ஏற்க….

எதோ ஒரு வகையில் அச்செயலின் அக அழகு ரியாவின் முழு மனதையும் மொத்தமாய் சாய்க்கிறது….முழுவதாய் கொள்ளையாடுகிறது…..

தலைமகனாய் விவனின் முகம்…. தாய்மையுடன் தட்டி விழிக்கும் அவன் விழிகள்….. மெச்சுதலும் கெஞ்சலுமாய் அதட்டும் அவன் உதடுகள்…. அண்ணனாய் அரண் கோட்டையுமாய் தங்கை தலையை பற்றி இருக்கும் அவனது கை…….அதன் விரல்கள்…. அவன் கைக்குள் தலையாட்டும் கண்மணி…என ஒவ்வொன்றையும் விழி தட்டாமல் பார்த்திருந்தாள் இவள்….

இப்போது ஆமோதிப்பாய் தலையசைத்தபடி…. அண்ணனையே பார்த்தபடி….சிரிப்பும் கண்ணீருமாய் கண்மணி அவனிடமிருந்து சிறிதளவு விலக…..

அவர்களையே பார்த்திருந்த ப்ரியாவுக்கு…..அண்ணனுக்கும் தங்கைக்கும் இடைப்பட்ட அந்த இடைவெளியின் வழியாய்….. தூரத்தில் நின்று,  முகம் சுண்ட…விழி சுருங்க… இதைப் பார்த்துக் கொண்டிருந்த கண்மணியின் மாமியார் கண்ணில் படுகிறார்….

வெட்டு மின்னலாய் சட்டென நியாபகம் வருகிறது ப்ரியாவுக்கு……. கண்மணிக்கு இந்த வீட்டில் ஏன் திருமணம் செய்தான் என்பதில் தொடங்கி, அவள் அவனை கடித்துக் குதற எத்தனையாய் காத்திருந்தாள் என எல்லாம்…. மிக முக்கியமாய் இவர்களது திருமணத்திற்கு அடிப்படையான ப்ரெக்னன்ஸி பிரளயம்…. அதுவரையிலும் அதை கூட மறந்திருந்தாளே..!!!!

 இம்மி கூட மீதி இல்லாமல் அதுவரை இருந்த அத்தனை இலகு உணர்வும் கொட்டி வடிய….. அவளுள் அத்தனை வேகமாய் வந்து பாயும் வெறுமையை அவன் மீதே மொத்த கோபமாய் முதலீடு செய்தாள்…….

அத்தனை கோபத்திற்கும் பாத்திரமான அவனோ அடுத்தும் ரிஷப்ஷன் வரையுமே இவளைப் பார்க்கவே இல்லை…

ஆனால் ரிஷப்ஷனில் மட்டும் வெகு இயல்பாக ஒவ்வொருவரையும் இவளுக்கு தன்மையாய் அறிமுகம் செய்து வைத்தான்….அங்கு வைத்து அடுத்தவர் முன்னிலையில் இவள் என்ன செய்யவாம்….?! பத்திரப் படுத்திக் கொண்டாள் தன் கோபத்தை.

பல் தெரியாமல் மற்றவர்களை மட்டும் பார்த்து சிரித்து வைத்தாள்…..  அவனுக்கு நோ ஐ காண்டாக்ட்….

இதே mode மற்றும் moodல் ஒரு வழியாய் விழா முழு மும்முரமாய் முடிய…..

விவனது வீட்டிற்கு இவர்கள் கிளம்ப வேண்டும்.

விவனும் இவளுமாய் டைனிங் ஹாலிலிருந்து படி இறங்கி கார் நிற்கும் இடத்திற்கு செல்ல…. இவர்கள் கிளம்பவென முழு அலங்காரத்தில் காத்திருக்கிறது அந்த புத்தம் புது கார்பன் க்ரே Porche panamera.

சட்டென நின்ற விவனின் உடல் மொழியில் எதோ மாற்றம்….. இறுகினான் அவன். அவனுக்கு எதுவோ பிடிக்கவில்லை போலும்…..ஏதும் ப்ரச்சனையோ?? அதை உணர்ந்ததும் அதுவரை அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் இருந்த ப்ரியா  அவன் முகம் பார்க்க…..

இதற்குள் “எப்டி இருக்கு விவன்….. கலர் கனுவோட செலக்க்ஷன்…..” என்றபடி அந்த காரின் கீயை எடுத்து விவன் கையில் கொடுத்தான் மஹி….. “ எங்க வெட்டிங் கிஃப்ட்…”

விவன் இப்போது அவசரமாய் அவன் தங்கை முகத்தைப் பார்க்க அவள்  சந்தோஷமாய் இருப்பது போலத்தான் இருக்கிறது ஆனால் அவள் சிரிப்பு நிச்சயமாய் இயல்பாய் இல்லை…..

விவனுக்கும்  கண்மணிக்கும் இடையில் மைக்ரோ செகண்டில் எதோ பார்வை பறிமாற்றம்….. ப்ரியாவுக்கு எதுவும் புரியவில்லை எனினும்…. விவன் கண் அவனையும் மீறி மின்னல் வேகத்தில் சற்று தொலைவில் நின்று இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கண்மணியின் மாமியாரின் புறம் சென்று வருவது மட்டும் நன்றாகவே புரிகிறது….

கண்மணியின் மாமியார் சம்பந்தப்பட்ட எதோ ப்ரச்சனை போலும். இதெல்லாம் இவன் முன்னாலயே யோசிச்சிறுக்கனும்… என இப்பவும் அவன் மீது கோப பட தோணினாலும் கண்மணியை நினைத்து இவளுக்கு கவலையாக இருக்கிறது…..

கூடவே எல்லாம் ஒருவேளை இவளால தானோ….? என ஒரு எண்ணம் வர இப்போது ப்ரியாவுக்குள்  பய நதி ப்ராவகம்…...

விவனோ எதையும் வெளிக் காட்டாமல்…. காரை பார்த்தபடி ஒரு சுத்து சுத்தி வந்தவன் “சூப்பரா இருக்குது மஹி…. தேங்க்ஸ்” என்றபடி..… அதன் கீயை மஹி கையிலேயே கொடுத்து “நீங்கதான் எங்களை ட்ராப் பண்ணனும்” என அந்த சீனை முடிவுக்கு கொண்டு வந்தான்.

ஆம்  நடந்த எல்லாம் ஏனோ நாடகம் போல் தோன்றியது ப்ரியாவுக்கு.

அடுத்து மஹியும் கண்மணியும் முன் புறம்….இவள் அருகில் விவன் பின்புறம் என கிளம்பியது கார்.

வழக்கம் போல் கண்மணி கலகலத்துக் கொண்டிருக்க…. மஹி மறையாமல் ஒளியாமல் தன் மனைவிக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்க…. “ஆனாலும் மஹி உங்க அளவுக்கு எனக்கு என் வைஃபுக்கு சிங் சா போட வருமான்னு தெரியலையே என விவன் அவர்களை வார” என……. அடுத்து எல்லாலே இயல்புக்கு திரும்பி இருந்தது இவளைத் தவிர…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.