(Reading time: 35 - 69 minutes)

டுத்து ஒரு வழியாய் இவர்கள் வீட்டை அடைய….. விவனுக்கும் இவளுக்குமாய் .சின்ன சின்ன ஃபார்மாலிடீஸ் சிலவற்றிற்குப் பின்  இவளை தயார் செய்து “நீங்க வாங்க அண்ணி” என  அழைத்துக் கொண்டு போனாள் கண்மணி….

மொத்த மேரேஜ் செருமனியிலும் அவள் மிகவும் கஷ்டமாய் உணர்ந்தது இப்போதுதான்…

என்ன வகையிலெல்லாமோ உள்ளுக்குள் உருண்டு பிறண்டது மனது…… ஆனால் எதையும் கண்மணியிடம் காட்டிக் கொள்ள முடியாதே…

கண்மணி குடும்பம் இன்று விவன் வீட்டில் தங்கவில்லை எனில் இவள் தனி அறைக்கு போயிருப்பாள்…..ஆனால் அவர்கள் இருக்கும் பட்சத்தில் இவள் விவனுடன் தங்க வேண்டியது அவசியமாகிறது…..

இனி எல்லா நாளும் அவன் கூடதான் என நினைத்து எடுத்த முடிவுதானே இந்த கல்யாணம்…..ஆனால் அதை  நடைமுறையில் அனுபவிக்கும் போது ஏன் இப்படி தாறுமாறாய் தவிக்கிறதாம் மனது…?

இன்றையோடு சேர்ந்து கடந்த 7 நாட்களில் இவள் புரிந்து கொண்டிருக்கும் மிக முக்கிய விஷயம்….விவன் இவளை எந்த வகையிலும் உடலளவில் வருத்துவதாய் இல்லை….. ப்ரெக்னென்டா இருக்கான்றதாலயான்னு தெரியலை…பெரும்பாலும் வீட்டு சாப்பாடு என்ற சூழலையே உண்டு செய்திருந்தான்…..வெட்டிங் ஷாப்பிங் என போவது கூட இவள் ஒரே இடத்தில் அடைந்து கிடக்க கூடாது என்பதற்காகதானே தவிர….வெளிய ரொம்ப சுத்தவும் விட்டது இல்லை…..இவட்ட பேச மாட்டானே தவிர…..கண்மணியின் அடிக்கொரு முறை வரும்  அண்ணா சொன்னான் டயலாக் அதற்கு சாட்சி….

வெட்டிங் மற்றும் ரிஷப்சன் ப்ளானிங் அடுத்த சாட்சி….கட கடவென முடியும் வண்ணம்…இவள் அதிக நேரம் நிற்க நேராத வண்ணம்….ஒன்றொன்றும் கவனித்து செய்திருந்தான்….. ரிலடிவ்ஸ் மற்றும் ஃப்ரெண்ட்ஸ்க்கு தான் அழைப்பு போலும்….”பிஸினஸ் பீபுளை இன்வைட் செய்யாம ரொம்ப பெர்சனலா நடத்திட்டீங்க…..” என சிலர் அவனிடமே சொன்னது இவள் காதில் விழுந்தது…. கூட்டம் மிக குறைவு….

இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னா இது அவனோட கேம் ப்ளான்…….இவள ஹர்ட் செய்யாம இம்ப்ரெஸ் செய்ய ட்ரைப் பண்றான்.. பட் ஃபார் வாட்?....எதுக்காகவும் இருந்துட்டு போகட்டும்… அந்த ஃபாராடோட சதியில போய் யார் விழ….? ஆனா அவன் ப்ளான் படி கண்டிப்பா இவளை எதுவும் படுத்தமட்டான்…..

நைட் தைரியமா அவன் கூட தங்கலாம்…..

இப்படி எல்லாம் இவளது அறிவு கால்குலேட் செய்தாலும்…… அடங்கவா செய்கிறது அடிமனம்…???

குத்தி குதறுகிறது…தவித்து சுணங்குகிறது…..

ஆக அடிக்கப் பட போகும் ஆடு போல நாத்தனார் பின் நடந்தாள்.

கண்மணி அவளை கூட்டிச் சென்ற அறை மைல்ட் ப்ளூயிஷ் லாவண்டர் ஷேட் மற்றும் வெள்ளை நிறம் என்பதாய் நீள் செவ்வக வடிவில் மிகப் பெரிதாய் அமைந்திருந்தது…..  நட்ட நடுவில் போடப்பட்டிருந்த அந்த அலங்கரிக்கப்பட்ட பெட்  அது விவன் ரூம் என்பதை புரிய வைக்க……

ப்ரியா வீட்டிற்குள் வரவுமே ஒன்று கவனித்திருந்தாள்…… விவன் இவளது ஸ்கூல்மேட்…அது  மிடில் க்ளாஸ் பிள்ளைகள் படிக்கும் பள்ளி…..அவனும் அங்கு காரில் கூட வந்தது கிடையாது…சைக்கிள் பார்டி…..

ஆனால் அது எதற்கும் சம்பந்தம் இல்லாமல்  வீட்டிற்குள் நுழையவும் கண்ணில் படும் அதன் ப்ரமாண்டம் மிக பெரிதாய் இருக்கிறது…

அதைப் பார்க்கவுமே ரொம்பவுமே சோர்ந்து போனது இவளுக்கு…..எவ்ளவு ஏமாத்தி சம்பாதிச்சானோ கசந்து கொள்கிறது பெண் மனது….. Fraud

அதோடு அப்படிபட்டவன் இவளை எதுக்கு இப்படி கல்யாணம் செய்யனுமாம்…? அதற்கு மேல் அப்போது யோசிக்காமல் தன் யோசனையை நிறுத்திக் கொண்டாள்.

“ஆல் த பெஸ்ட் அண்ணி….. டேய் விவா ஆல் த பெஸ்ட்….” கண்மணி விடை பெற…..விவன் எங்கிருக்கிறான் எனக் கூட பார்க்காமல் அசையாமல் நின்ற ரியா…..கதவு மூடப்படும் சத்தம் கேட்கவும்  நேராக சென்று படுக்கையில் சுருண்டு கொண்டாள்…

அவளையே பார்த்துக் கொண்டிருந்த விவன் இப்போது அனைத்து லைட்ஃஸையும் ஆஃப் செய்தவன்…….அறையின் வடக்கு சுவர் முழுவதையும் மூடி இருந்த அந்த கர்டனை விலக்கி வைத்தான்….. அது முழுவதுமே கண்ணாடி ஜன்னல்களான  சுவராய் இருந்ததால் வெளியில் உலாத்திக் கொண்டிருந்த நிலா வெளிச்சம் இப்போது அறைக்குள் கசிய…. ரம்யமாய் ஒரு உணர்வு…..

எது என்னதாய் இருந்தாலும் இன்று அவன் நிச்சயமாய் மகிழ்ச்சியாய் இருக்கிறான்…..ஏழே நாட்களில் திருமணத்தை ஏற்பாடு செய்வதென்பது லேசான காரியமா….. அதோடு பிஸினஸையும் கவனித்தாக வேண்டும்……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.