(Reading time: 26 - 52 minutes)

வளுக்கு எதிர்ப்பதமான மனநிலையில் இருந்தான் மஹிந்தன் அவன் வாய் தானாக

“புது மாப்பிளைக்கு ரப்பப்பரி நல்லயோகமாட ரப்பப்பரி

அந்த மணமகள் தான் வந்த நேரமடா..” ” “

என்று பாட்டை பாடியதும் .எரிச்சலுடன் அவனை ஏறிட்ட கவிழையாவைப் பார்த்து என்னம்மா பொண்டாட்டி புது மாப்பிள்ளையை ஆசையாக பார்க்காமல் இப்படி முறைத்து பார்த்தாள் என்ன அர்த்தம் என்றான்.

உடனே கவிழையா கூறினாள் யாருக்கு யார் மாப்பிள்ளை? , நீங்கள் பணத்தில் பெரிய கொம்பனாக இருக்கலாம் . ஆனால் நான் என்றுமே உங்களை போன்று அடுத்தவர்களை துன்புறுத்தி ரசிக்கும் ஒருவனுக்கு பொண்டாட்டி ஆக மாட்டேன் என்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவள் அவ்வாறு கூறவும் சத்தமாக சிரித்த மஹிந்தன் என்ன சொன்னாய் பொண்டாட்டியாக மாட்டேன் என்றா சொன்னாய்? இப்பொழுது உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? என்றவன் .நீ இப்பொழுது சட்டப்படி என் மனைவி கொஞ்ச நேரம் முன்னாடி நீ கையெழுத்து போட்டாயே எதற்கென்று தெரியுமா? நம் கல்யாணத்தை சட்டப்படி பதிவு செய்ததுக்காக என்றான் . நம் கல்யாணத்திற்கு சாட்ச்சிக் கையெழுத்து போட்டது உன் அப்பா என்றான்.

அவன் கூறியதைகேட்டு தன் கண்களில் கண்ணீர் வடிய நீங்கள் சொல்வதை நான் நம்ப மாட்டேன் என்றாள். .

உடனே தன் போனில் கதிரை தொடர்புகொண்டு கதிர் இப்பொழுது எடுத்த புகைப்படம் மற்றும் கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணியதற்கான டாக்குமென்டின் போட்டோகாப்பி எல்லாவற்றையும் என் போனிற்கு அனுப்பு என்று கூறி வைத்தான்.

கார் நிற்பதைகூட உணராமல் அதிர்ச்சியில் இருந்தவளை, ழையா என்று கூறி தன் காரின் ட்டேஸ் போர்டில் இருந்த டிஸ்யு பேப்பரை எடுத்து அவளுடைய முகத்தில் ஏசி காரிலும் வேர்த்து இருந்ததை ஒத்திஎடுத்தான் . அதில் தன்னிலை அடைந்தவள் அவனுடைய கையை தட்டி விட்டாள்

உடனே கோபத்துடன், என்னடீ ரொம்பவும் துள்ளுற உள்ள வா போட்டோ காட்டறேன் .அதன் பின் நான் மட்டும் தான் உன்னைத் தொட முடியும் என்பதை புரிந்துகொள்வாய் என்றவன் காரில் இருந்து இறங்கி கோபத்துடன் உள்ளே சென்றான் .

கவிழையாவும் அவன் பின்னால் ஆபீஸில் நுழைந்தாள். தன்னுடைய மேஜையில் தன் ஹென்ட்பேக்கை வைத்தவள், தன் மனச்சோர்வின் காரணமாக ஓய்ந்த தோற்றத்துடன் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

உள்ளே வந்த மஹிந்தன் உமாவிடம் அன்றைய அலுவலகத்தின் பணிகளை கேட்டு அறிந்தவன் அடுத்து செய்ய வேண்டிய அலுவலக பணிகளை அவளிடம் கூறிவிட்டு திரும்பி கவிழையாவைப் பார்த்தான் .

அவளின் ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்தவன் என்னை கணவன் என்று ஒத்துக்கொள்ள அவ்வளவு கஷ்டமாகவா இருக்கிறது.. என்னுடன் ஓர் நாள் பொழுதை செலவிட போட்டிபோட்டு நிறையபேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவள் என்னவென்றால் முகத்தை தூக்கிகொண்டு உட்கார்ந்திருக்கிறாள் இவளுக்கு என்னை பார்த்தாள் எப்படி இருக்கிறது?” என்று கோபமாக வந்தது.

ஆனால் தான் அவளை சந்தித்த விதமும், அவளை மிரட்டியதும் அவள் அனுமதில்லாமல் அவளை வலுக்கட்டாயமாக தன்னவளாக்க தான் மேற்கொண்ட செயல்களால் அவளின் மனம் புண்பட்டு இருப்பதையும் மஹிந்தன் உணராமல் போனான்.

ஹிந்தன் அவள் மேஜைக்கு அருகில் வருவதைப்பார்த்த கவிழையா கலவரம் ஆனால். ஏனெனில் மஹிந்தன் அவளை கோபமாக என்ன இங்கேயே உட்கார்ந்திட்ட வா ரூமுக்கு போகலாம் என்று கூறி அவளின் கையை பிடித்து கூட்டிச்செல்லும் நோக்குடன் ஒரு கையை நீட்டிக்கொண்டு வருவதைப்பார்த்து கவிழையா வேகமாக எழுந்து தள்ளி நின்றாள் அவளின் விலகல் மஹிந்தனை அவமானப்படுத்துவதாக நினைத்து அவனின் கோபத்தை மேலும் அதிகரித்தது. எனவே அவன் அவளை கோபமாக முறைத்துக்கொண்டே கதவைத்திறந்தான்.

அப்பொழுது அவன் தொலைபேசி சத்தம் கொடுத்ததால் எடுத்து காதிற்கு கொடுத்தவன் தன் தங்கை பேசவதை கேட்டு ஆமாம் ஒரு மணி நேரத்தில் வருவதாக சொன்னேன் இப்பொழுது லேட் ஆகி விட்டது அதற்க்கொன்ன என்று கோபமாக பேசியவன் தன் தங்கையிடம் யாராக இருந்தாலும் நான் வரும் வரை காத்திருக்கட்டும் என்றவன் தொடர்பைத் துண்டித்தான்

பின் ழையாவின் கைப்பிடித்து உள் இழுத்து சென்று, அவள் பின் நின்று ஒருகையால் அவளை சுற்றிப்பிடித்து தன்னுடைய சேரில் அமர்ந்து அவளை தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டவன் தன் போனில் கதிர் அனுப்பிய போட்டோவையும் ஆவணங்களையும் அவளிடம் காண்பித்து இப்போ நீ என் பொண்டாட்டி டீ என்றான்.

கவிழையா அவனிடன் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடிப் பார்த்தாள் ஆனால் அவனின் பிடி இரும்பாக இருந்ததால் அவளால் முயற்சி செய்ய மட்டும் தான் முடிந்தது. மேலும் அவன் கூறிய கல்யாணம் முடிந்துவிட்டது. enஅவளின் மனைவி, தான் என்று கூறிய விதம் அவளை பலவீனமாக்கியிருந்தது

எனவே அவளால் தன் பற்களையும் நகங்களையும் ஆயுதமாக்கி அவனை தாக்க தயக்கம் ஏற்பட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.