(Reading time: 26 - 52 minutes)

வன் அவ்வாறு கேட்டவுடன் சுபத்ரா யார் அது கவிழையா? அவளுடன் நீ ஏன் சுற்றுகிறாய் ? என்று கேட்டாள்.

மஹிந்தனின் அம்மா அவ்வாறு கேட்டதும் அவனுக்கு மறுபடியும் கோபத்தில் வார்த்தைகள் வெளிவர துடித்தது .மூச்சை இழுத்து தன் கோபத்தை அடக்கிய மஹிந்தன் மாம் நான் என்றைக்கும் என் பெர்சனல் லைப் பற்றி யாருக்கும் விளக்கம் கொடுத்ததில்லை இனிமேலும் கொடுக்கப்போவதில்லை மேலும் இது போல் யாரும் பேசி என் கோபத்தை அதிகரிக்கவேண்டாம் என்று கூறினான்.

அவன் கூறுவதைக்கேட்ட மஹிந்தனின் அப்பா விஸ்வநாதன் கூறினார், .மஹி இதுவரை உன்னை யாரும் கேட்டதில்லை.

ஆனால் இனி அப்படி கேட்காமல் இருக்க முடியாது. ஏனெனில் உனக்கென்று ஐஸ்வர்யாவை முடிவு செய்தபிறகு அவளுக்கு நீ பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

என்று கூறி கவிழையாவுடன் மஹிந்தன் காரில் ஏறுவதுபோல், மற்றும் ஹோட்டலில் அவள் கைப்பிடித்து செல்வதுபோலும் , இன்றுகாலை கவிழையாவுடன் கைபிடித்து காரிலிருந்து இறங்குவதுபோன்ற போட்டோக்களை அவனின் முன் இருந்த டீபாயின் மேல் பரப்பினார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவற்றைப் பார்த்த மஹிந்தன் இது எதையும் நான் மறுக்கப்போவதில்லை. நானும் ஐஸ்வர்யாவும் ஒன்றும் காதலுடன் கல்யாணம் முடிக்க சம்மதிக்கவில்லை.

அவளுக்குத்தேவை ஒரு ஹன்சம் மல்டி மில்லினியர். எனக்குத்தேவை என் தாத்தாவின் கம்பெனி. “சோ” இந்த கல்யாணம் முடிவாகியுள்ளது என்றான் .

மேலும் என்னைக் கட்டுப்படுத்த எந்த தகுதியும் ஐஸ்வர்யாவுக்கு இல்லை அவள் உங்களிடம் என்னைப்பற்றிய போட்டோவைத் தானே காண்பித்துள்ளாள்.

இதில் ஐஸ்வர்யா அவளுடைய பாய்பிரண்ட் அஜய்யுடன் போடும் ஆட்டத்தை வீடியோவாகவும், போட்டோக்களையும் பாருங்கள் என்று கூறி தன் ஐ போனில் அஜய்யுடன் ஐஸ்வர்யா இருந்த போட்டோக்களையும் அவனுடன் நெருக்கமாக இருக்கும் சில வீடியோ காட்ச்சிகளையும் தன் தங்கை மதுராவிடம் காண்பித்தான் .

அவ்வளவு நேரம் அவர்கள் முன் சோககீதம் வாசித்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா , மஹிந்தன் தன்னைப்பற்றிய வண்டவாளங்களை படம் போட்டு காட்டவும் . டக்கென்று தன் நடிப்பை மாற்றிக்கொண்டாள்.

என்ன மஹிந்தன் இது எல்லாம் நம்மைப்போன்ற ஹய்சொசைட்டி ப்யூப்பில்ஸ் வாழ்க்கையில் நடப்பதுதானே.என்று குலைந்த குரலில் கூறியபடி நான் ஒன்றும் இதையெல்லாம் பெரிதாக நினைத்துக் கொள்ளமாட்டேன் என்று கூறிக்கொண்டு மஹிந்தனின் அருகில் நெருங்கி உட்கார முயன்றாள்.

உடனே தன் மேல் அவளின் உடல் படுவதை விரும்பாத மஹிந்தன் டக்கென்று எழுந்து நகாந்து போய் ஐஸ்வர்யாவைப் பார்த்து இதுபோல் சீன் கிரியேட் பண்ணினால் இனி இக்கல்யாணம் நடக்காது என்று கூறினான், என் குடும்ப அடையாளமான எஸ்.வி.என் மோட்டார்சை வேறு வழியில் என்னிடம் கொண்டுவர எனக்குத்தெரியும் என்று கூறியவன் விருட்டென்று மாடியேறி தன் அறையினுள் சென்றவன் கதவை டமார் என்று ஓசையுடன் மூடினான்.

ஐஸ்வர்யாவிற்கு மஹிந்தன் அவ்வாறு தன்னை தவிர்த்தது முகத்திலரைந்தது போல் இருந்தது. அவளுக்கு மஹிந்தன் மேல் வன்மம் வலுத்தது.

அவ்வளவு நேரம் மதுராவிற்கு அவன் அண்ணன் மேல் இருந்த வருத்தம் ஐஸ்வர்யாவின் உண்மையான முகத்தைப் பார்த்ததும் கவலையாக மாறியது.

இப்படிப்பட்ட குணமும் நடத்தையும் உள்ள ஒருத்தி தன் அண்ணனுக்கு மனைவியாக வருவதை நினைக்கையில் கசப்பாக இருந்தது.

ஹிந்தன் tதன் அறைக்குள்ளே கோபம் அடங்காமல் உள்ளம் கொதிப்போடு உடைகூட மாற்றாமல் தன் படுக்கையில் விழுந்தான். அவனுக்கு ஐஸ்வர்யாவின் செயலை மன்னிக்க முடியவில்லை. என் ழையாவைப் பற்றி வீட்டில் கூற இவளுக்கு எவ்வளவு தைரியம் .

தன் பெற்றோருக்கு கவிழையா பற்றி தெரிவதில் அவனுக்கு விருப்பம் இல்லை .ஏனெனில் தன் தந்தையும் தாயும் ஐஸ்வர்யாவுடனான இக்கல்யாணம் தான் தங்கள் கம்பெனியை மீட்டுத்தரும் என்பதை நம்பினார்கள்.

அவர்களுக்கு தன் மகனின் இச்செயலால் எஸ்.வி.என்.மோட்டார்ஸ் தங்களின் கைவிட்டுச்செல்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

எனவே கவிழையாவை மஹிந்தனின் வாழ்வில் இருந்து அகற்ற முடிவெடுத்து அவளுக்குப் பிரச்சனையை கொடுக்கப் பார்ப்பார்கள் என்பதை மஹிந்தன் அறிந்திருந்தான்.

எனவே சிறிது யோசனைக்குச் சென்றவன் கதிரை போனில் தொடர்புகொண்டான், கதிர் போனை எடுத்ததும் ஐஸ்வர்யாவினாள் கவிழையா பற்றிய விபரம் வீட்டிற்கு தெரிந்துவிட்டதை கூறினான் .

எனவே கவிழையாவிற்கு தன் வீட்டவரால் ஆபத்து எதுவும் ஏற்படாது பார்த்துக்கொளும்படி கூறினான். இப்பொழுது அவளுக்கு மயக்கம் தெளிந்துவிட்டதா என்று கேட்டான்.

அவன் கூறியதைக்கேட்ட கதிர் மயக்கம் தெளிந்து மருந்தின் உதவியால் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக டாக்டர் கூறியிருக்கிறார் என்றவன், நான் இங்கே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி தொடர்பைத் துண்டித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.