(Reading time: 26 - 52 minutes)

ஹிந்தன் தன் மடியில் அமர்த்திய ழையாவிடம் தன் போனில் இருந்த கல்யாணத்திற்கான ஆதாரத்தை காண்பித்தான்.

அவற்றைப்பார்த்த கவிழையா கோபத்துடன் ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளறியாமல் கல்யாணம் பண்ண உங்களுக்கு வெட்கமாக இல்லை. என்னால் உங்களை என் கணவனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாள்.

மேலும் ஒரு நல்ல ஆண்பிள்ளை இதுபோன்ற செயல்களை செய்யமாட்டான் நீயெல்லாம் ஒரு ஆண்பிள்ளை என்று கூறிக்கொள்ளதீர்கள் என்று கோபத்தில் வார்த்தைளை விட்டாள்.

அவளின் வார்த்தைகளைக் கேட்டு, என்ன கேட்ட, நான் ஆண்பிள்ளையா என்று தானே கேட்டாய் ஒரு புருஷனைபார்த்து எந்த பொண்டாட்டியும் கேட்கக்கூடாத கேள்வியை நீ கேட்டு விட்டாய் உன்னை நான் ஆண்பிள்ளை என்று உணரவைக்கிறேன் என்று கூறி அவளை ஆக்கிரமிக்க முனைந்தான்.

அவள் தப்பிக்கும் வழி தெரியாமல் தோற்றுக்கொண்டிருக்கும் போது, மஹிந்தனின் போன் திரும்பத்திரும்ப ஒலிக்கும் ஓசைகேட்டு தன்னிலையடைந்த மஹிந்தன் தன்செயலைப் பார்த்து தானே ஒரு நிமிடம் குற்ற உணர்வில் தவித்தான்.

பின் போ என்று கூறி அவளை உதறி “ஏன், ஏன்டீ என்னை மிருகமாக்குகிறாய்” என்றவன் விருப்பமில்லாத யாரையும் நான் இதுவரை பார்வையால்கூட தொட்டதில்லை .

ஆனால் உன் பேச்சாலும், உன் செயலாலும், அழகாலும், இன்று நான்........... என்று கூறி நிறுத்தியவன் சலிப்புடன் கூறினான் . ஆனால் ஒன்றைமட்டும் தெரிந்துகொள் இந்த ஜென்மத்தில் நீ எனக்குமட்டும் தான் சொந்தமானவள் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

உனக்கு என்னை பிடிக்காமல் இருந்தாலும் நீ என்னுடையவள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் போது மீண்டும் அவன் போன் ஒளித்தது .

அதனை எடுத்து பார்த்தவன் உமாவின் ஏழு மிஸ்டு காலை பார்த்தவன் போனை எடுத்து என்ன விஷயம் என்று கேட்டான் .

அதற்கு பாஸ் கவிழையாவின் போனில் அவர்கள் அப்பாவின் போனில் இருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு மிஸ்ட் கால் வந்துகொண்டே இருநதது, நான் முக்கியமான அவசரமோ என்று கருதி அட்டன் பண்ணினேன் கவிழையாவின் அப்பாவை சீரியஸாக ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருப்பதாக அவர்களின் தம்பி தகவல் அளித்தார் . கவிழையா மேடம் போனை மேஜையில் வைத்துவிட்டு உங்களுடன் வந்திருக்கிறார்கள் என்றாள்.

அதனைக்கேட்ட மஹிந்தன் சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்றவன் கவிழையாவை பார்த்தான் .

விழையா கசங்கிய கலைந்திருந்த உடையுடனும் கலைந்த முடியுடனும் இருந்தாள் . தன் உடையை சரிசெய்ய முயன்றும் அவள் கையின் நடுக்கத்திலும் உடலின் சோர்வாlலும் முடியாமல் ஓய்ந்து போன நிலையில் இருந்தாள்.

அவளை பார்த்த மஹிந்தனுக்கு குற்ற உணர்வில் மனம் கனத்தது. அவளின் கண்களை பார்த்தவன் அக்கண்ணில் எப்போதும் இருக்கும் துறுதுறுப்பு இப்பொழுது மங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்தவன் அக்கண்கள் பழையபடி பார்க்க ஆசைப்பட்டான்.

ஆனால், இப்பொழுது அவள் தந்தையின் நிலையை கூறினாள் அவள் தாங்கும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்தான்.

எனவே மஹிந்தன் அவள் அருகில் வந்து அவளுக்கு உதவ நினைத்தான் .அவன் அருகில் வர முயல்வதைப் பார்த்த கவிழையா பயத்துடன் பின்னால் சென்றாள்.

அவள் தன்னைப்பார்த்து பயப்படுவதை மஹிந்தனால் தாங்கிக்கொள்ள முடியாவில்லை. எனவே ழையா எனறு தன் குரலில் அவள் பெயரை மென்மையாக அழைத்தான்.

நீ காலையில் போட்டிருந்த உடை ரெஸ்ட்ரூமில் இருக்கும் மெதுவாக போய் மாற்றிக்கொண்டு வா உன் அப்பாவிடம் உன்னை கூட்டிப்போய் விடுகிறேன் என்றான்,

அப்பா என்ற வார்த்தையை கேட்டதும் நான் அப்பாவிடம் போகணும் என்று சொல்லிக்கொண்டு தடுமாற்றத்துடன் எழுந்து ரெஸ்ட்ரூம் சென்றாள்.

உள்ளே சென்றவள், கதறியழுது பின் தன் முகத்தில் நீரையடித்துக் கழுவி தன்னை சிறிது திடப்படுத்திக்கொண்டாள். பின்பு உடை மாற்றும் போதுதான் அவள் கவனித்தாள் அவன் ரெஜிஸ்டர் ஆபீஸ் போகும்முன் தன் கழுத்தில் நெக்லஸ்மட்டும் அணியவில்லை, மெல்லிய நீளமான செயினும் போட்டுவிட்டான் அதில் மாங்கல்யம் இருந்ததை இப்போதுதான் கவனித்தாள் .முதலில் அவள் அது வெறும் டாலர் செயின் என்று தான் நினைத்தாள்

அவள் ரெஸ்ட்ரூம் சென்றதும் அவள் அப்பாவின் போனிற்கு தொடர்புகொண்டான் மஹிந்தன். அதில் ழையாவின் தம்பி எடுத்தான்.வருனிடம் தான் மஹிந்தன் ஸாப்ட்வேரின் எம்.டி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் பின் அவர்களின் தந்தைக்கு என்னானது என்பதை விசாரித்தான்.

ஸவரன் காரில் இருந்து இறங்கி தன் வீட்டினுள் தளர்ந்த நடையுடன் வந்தவர் பார்வதி தண்ணீர் என்று குரல்கொடுத்தார் .

தன் கணவனின் குரல் கேட்டவள் எடுத்துவருகிறேன் என்று கூறி முன் அரறைக்கு வந்தவள் ஈஸ்வரனின் நிலையைப்பார்த்து அதிர்ந்து என்னங்க ஆச்சு என்று பதற்றத்துடன் கேட்டபடி ஓடி வந்தார் .

ஈஸவரன் உடை முழுவதுவும் வியர்வையால் நனைந்து இருந்தது .தன் மார்பில் கைவைத்து கண் சொறுகி சரிந்து கொண்டிருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.